AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: பயிற்சியின்போது பரிதவித்த இங்கிலாந்து கால்பந்து அணி.. ஷூ, கால்பந்துகள் திருடு போனதால் பரபரப்பு!

England Team Miss Boots and Ball: இங்கிலாந்து அணி 'L' பிரிவில் உள்ளது. அவர்களின் முதல் போட்டி இந்திய நேரப்படி வருகின்ற 2026 ஜூன் 18ம் தேதி குரோஷியாவுக்கு எதிராக நடைபெறுகிறது. ஆனால் இந்தப் போட்டிக்கு முன்பாக, உபகரணங்கள் திருட்டு காரணமாக தாமஸ் டுச்செல் தலைமையிலான இங்கிலாந்து அணி சிக்கலில் மாட்டிக்கொண்டது.

FIFA World Cup 2026: பயிற்சியின்போது பரிதவித்த இங்கிலாந்து கால்பந்து அணி.. ஷூ, கால்பந்துகள் திருடு போனதால் பரபரப்பு!
இங்கிலாந்து கால்பந்து அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 13 Jun 2026 18:05 PM IST

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 (FIFA World Cup 2026) போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் நடத்துகின்றன. இந்தப் போட்டி அமோகமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்கி இன்னும் முழுதாக 2 நாட்கள் கூட முடிவடையாத நிலையில், அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெற்று வரும் அமெரிக்காவில் ஷூ மற்றும் ஃபுட் பால் திருடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து அணி அமெரிக்கா (USA) வந்துள்ளது. ஆனால், ஷூ மற்றும் ஃபுட் பால் திருட்டு சம்பவத்தால் கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளன. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணி புளோரிடாவில் பயிற்சியில் ஈடுபட்டது. இந்தப் பயிற்சி முகாமிலிருந்து, புளோரிடாவின் கேன்சஸ் சிட்டியில் உள்ள ஸ்வோப் சாக்கர் வில்லேஜ் முகாமுக்கு அணி புறப்பட்டது. வீரர்கள் பாதுகாப்பாக அந்த இடத்தை அடைந்தனர். இருப்பினும், இங்கிலாந்து வீரர்களின் உடமைகளை ஏற்றிச் சென்ற வாகனம் திருடப்பட்டது.

ALSO READ: 54 போட்டிகள்.. 46 நாட்கள்.. வெளியான 2027 ஒருநாள் உலகக் கோப்பை அப்டேட்..!!

பொருட்கள் எப்போது திருடப்பட்டன? காவல்துறை என்ன செய்தது?

ஃபிஃபா உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து அணியை ஏற்றிச் சென்ற வாகனம் கேன்சஸ் சிட்டிக்கு வந்தபோது, ​​அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், வீரர்களின் பிரத்யேக போட்டி ஷூக்கள், அதிகாரப்பூர்வ போட்டிக்கான கால்பந்து மற்றும் பயிற்சி உபகரணங்கள் போன்ற முக்கியப் பொருட்கள் வாகனத்தில் இருந்து காணாமல் போயிருந்தன. அறிக்கையின்படி, வாகனத்தில் இருந்த மொத்தப் பொருட்களிலும் ஒரே ஒரு கால்பந்து மட்டுமே விடுபட்டிருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேன்சஸ் சிட்டி காவல்துறை உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், சிலரைக் கைது செய்துள்ளது. இந்த வழக்கு வேகமாக விசாரிக்கப்பட்டு வருவதாக கேன்சஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து கால்பந்து சங்கமும் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதையடுத்து, காவல்துறையின் விசாரணை அமைப்புடன் இங்கிலாந்து கால்பந்து சங்கமும் இணைந்து பயணப் பொருட்களைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

ALSO READ: 2 தமிழர், ஒரு மலையாளி… ஃபிஃபா உலகக் கோப்பை தடம் பதிக்கும் இந்திய வமசாவளி வீரர்கள்

இங்கிலாந்தின் முதல் போட்டி எப்போது?

இங்கிலாந்து அணி ‘L’ பிரிவில் உள்ளது. அவர்களின் முதல் போட்டி இந்திய நேரப்படி வருகின்ற 2026 ஜூன் 18ம் தேதி குரோஷியாவுக்கு எதிராக நடைபெறுகிறது. ஆனால் இந்தப் போட்டிக்கு முன்பாக, உபகரணங்கள் திருட்டு காரணமாக தாமஸ் டுச்செல் தலைமையிலான இங்கிலாந்து அணி சிக்கலில் மாட்டிக்கொண்டது. இந்தப் போட்டிக்கு முன்பாக, நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளையும் புது ஷூக்களுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஏனெனில், போட்டிக்கு முன்பாக வீரர்களிடம் உபகரணங்கள் இருந்தால் மட்டுமே, அவர்களால் போட்டியில் சிறப்பாகச் செயல்பட முடியும்.

Follow Us