IPL 2027: CSKக்கு மாறும் ஹர்திக்.. KKRக்கு செல்லும் சூர்யகுமார்.. விரைவில் நடக்கப்போகும் வர்த்தகம்!
IPL 2027 Trade: ஹர்திக் பாண்ட்யா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஹர்திக் பாண்ட்யா எந்த அணியில் இணைகிறாரோ, அந்த அணியில்தான் கேப்டனாக இணைவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன்மூலம், தொடர்ச்சியான இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது, அனைத்து அணிகளும் அடுத்த சீசனுக்கான ஐபிஎல் 2027 ஏலத்திற்குத் தயாராகி வருகின்றன. பல அணிகளின் நிர்வாகமும் தங்கள் அணிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யக்கூடும். ஐபிஎல் விதிகளின்படி, வீரர்களை மாற்றுவதற்கான காலக்கெடு வருகின்ற 2026 நவம்பர் 15ம் தேதி வரை திறந்திருக்கும். இதன் விளைவாக, ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்பாக பல முக்கிய வீரர்கள் அணிகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: சாம்பியன் வென்ற அணிக்கு ஆர்சிபிக்கு ஷாக்.. நட்சத்திர வீரர் விளையாட தடை விதிப்பு!




ஐபிஎல் 2027 ஏலம் வருகின்ற 2026 நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறும். பிசிசிஐ இதற்கான தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் ஏலத்திற்கு முன்பு வர்த்தக சாளரத்தின் மூலம் பல வீரர்கள் பரிமாற்றம் செய்யப்படலாம். இந்த முறை, ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் போன்ற பெரிய பெயர்கள் உட்பட பல நட்சத்திர வீரர்கள் மற்ற அணிகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
ஹர்திக் பாண்ட்யா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஹர்திக் பாண்ட்யா எந்த அணியில் இணைகிறாரோ, அந்த அணியில்தான் கேப்டனாக இணைவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ரிஷப் பண்ட்டும் லக்னோவிலிருந்து மீண்டும் டெல்லி அணிக்கு செல்லலாம். இருப்பினும், ரிஷப் பண்ட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைவதற்கும் வாய்ப்புள்ளது.
ALSO READ: மும்பையை அன்ஃபாலோ செய்த சூர்யகுமார் யாதவ்.. ஐபிஎல்லில் வேறு அணிக்கு மாற்றமா?
ஐபிஎல் 2027-க்கான சாத்தியமான வர்த்தக ஒப்பந்தங்களின் பட்டியல்
🚨HARDIK TRADE TO CSK FOR DUBE & AYUSH 🚨
– Mumbai Indians are set to be trading Hardik Pandya to Chennai super kings in exchange for Shivam Dube & Ayush Mhatre in IPL 2027 “. pic.twitter.com/DW5VFcrFgK
— MANU. (@IMManu_18) May 25, 2026
- ஹர்திக் பாண்டியா – மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு செல்லலாம்.
- சூர்யகுமார் யாதவ் – மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செல்லலாம்.
- ரிஷப் பண்ட் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செல்லலாம்.
- நிக்கோலஸ் பூரன் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்லலாம்.
- முகமது ஷமி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்லலாம்.
- அக்சர் படேல் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு செல்லலாம்.
- ரமந்தீப் சிங் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்லலாம்.