Indian Cricket Team Jersey: 2026 டி20 உலகக் கோப்பைக்கு புது ப்ளான்.. இந்திய அணிக்கு நியூ ஜெர்சி அறிமுகம்!
Indian New 2026 T20 world Cup Jersey: இந்திய டி20 அணியின் தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் விழாவில் கலந்து கொள்ளவில்லை. லக்னோவில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறது. அதேநேரத்தில், இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்லும் கழுத்து வலி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி
ராய்ப்பூரில் தற்போது நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது 2026 டி20 உலகக் கோப்பைக்கான (2026 T20 World Cup) இந்திய அணியின் புதிய டி20 சர்வதேச ஜெர்சியை முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா வெளியிட்டார். இந்த ஜெர்சி அறிமுகத்தின்போது (Rohit Sharma) ரோஹித் சர்மாவுடன், திலக் வர்மாவும் ஒரே மேடையில் இருந்தார். இதனை தொடர்ந்து, அதே மேடையில் இருந்த பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா மற்றும் அடிடாஸின் நிர்வாகிகள் ரோஹித் சர்மா மற்றும் திலக் வர்மாவிடம் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சியை முறையாக ஒப்படைத்தனர்.
இந்திய அணியின் ஜெர்சி எப்படி இருந்தது..?
ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஜெர்சி வெளியீட்டு நிகழ்வில், 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தும் என்ற முறையில் இந்திய அணி ஜெர்சி எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்கு காட்டப்பட்டது. அதன்படி, இந்திய அணியின் ஜெர்சியின் அடிப்பகுதி அடர் நீல நிறத்திலும், பக்கவாட்டில் பிரகாசமான ஆரஞ்சு வண்ணமும் உள்ளன. அதே நேரத்தில், இந்தியாவின் மூவர்ணக் கொடி காலரில் பொறிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்திய அணியின் ஜெர்சியின் முன்பக்கத்தில் செங்குத்து நீல நிற கோடுகள் அடர் நிறத்திலும், லேசான நிறத்தில் மாறி மாறி இடம் பெற்றுள்ளன.
ALSO READ: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை! 20 முறை தொடர்ந்து டாஸ் இழந்த இந்திய அணி!
இது ஒரு நீண்ட பயணம் – ரோஹித் சர்மா
‼️ Indian Jersey for T20 World Cup 2026 ‼️ #ViratKohli𓃵 #INDvsSA #RohitSharma pic.twitter.com/AbJEmxPbYJ
— Rocket Singh (@rocketSahab) December 3, 2025
இந்திய அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்திய ரோஹித் சர்மா ”இது ஒரு நீண்ட பயணம். 2007 ம் ஆண்டு நாம் முதல் உலகக் கோப்பையை வென்றோம், அடுத்த உலகக் கோப்பைக்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. இது ஒரு நீண்ட பயணம். பல ஏற்ற தாழ்வுகளுக்கு பிறகு, மீண்டும் கோப்பையை உயர்த்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால், இது ஒரு அற்புதமான போட்டியாக இருக்கப் போகிறது. எனது வாழ்த்துக்கள் எப்போதும் இந்திய அணியுடன் இருக்கும், மேலும் நீங்கள் அனைவரும் இந்திய அணிக்கு ஆதரவு தருவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
சூர்யகுமார் யாதவ் கலந்து கொள்ளவில்லை:
இந்திய டி20 அணியின் தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் விழாவில் கலந்து கொள்ளவில்லை. லக்னோவில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறது. அதேநேரத்தில், இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்லும் கழுத்து வலி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக, கில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ALSO READ: டி20யில் களமிறங்கும் சுப்மன் கில்.. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!
2026 டி20 உலகக் கோப்பை எப்போது தொடங்குகிறது?
2026 டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026 பிப்ரவரி 7 முதல் 2026 மார்ச் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் அறிமுக அணிகளான இத்தாலி உட்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் போட்டியை 2026 பிப்ரவரி 7 ம் தேதி வான்கடே மைதானத்தில் அமெரிக்காவிற்கு எதிராக விளையாடுகிறது.