BCCI fixtures 2025: இந்தியாவிற்கு விளையாட வரும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா.. பிசிசிஐ அட்டவணை வெளியீடு!

India vs Australia & SA A Series: பிசிசிஐ, 2025ல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிகளின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. செப்டம்பரில் ஆஸ்திரேலியா 'ஏ' அணியுடனும், மகளிர் அணியுடனும் 4 நாள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெறும். அக்டோபர்-நவம்பரில் தென்னாப்பிரிக்கா 'ஏ' அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. லக்னோ, கான்பூர், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

BCCI fixtures 2025: இந்தியாவிற்கு விளையாட வரும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா.. பிசிசிஐ அட்டவணை வெளியீடு!

இந்தியா ஏ

Published: 

29 May 2025 19:51 PM

இளம் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை தயார்படுத்தும் முயற்சியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவின் ‘ஏ’ அணி மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணி (India vs Australia Series) வருகின்ற 2025 செப்டம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 நான்கு நாள் போட்டிகளிலும் (4 Day Test), 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. அதேசமயம் தென்னாப்பிரிக்கா ஏ அணியும் வருகின்ற 2025 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இதற்கான அட்டவணையையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஆண்கள் ‘ஏ’ அணிகள் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் என்றும், இந்த அட்டவணையின் படி,  4 நாட்கள் கொண்ட டெஸ்ட் மற்றும் 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி எப்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும்?

ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணம் வருகின்ற 2025 செப்டம்பர் 16-19 வரை லக்னோவில் 4 நாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியுடன் தொடங்கும். தொடர்ந்து, 2 வது டெஸ்ட் போட்டியும் வருகின்ற 2025 செப்டம்பர் 23-26 வரை லக்னோ ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதன் பிறகு, இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ இடையிலான ஒருநாள் போட்டி தொடர் வருகின்ற 2025 செப்டம்பர் 30, அக்டோபர் 3 மற்றும் அக்டோபர் 5 ஆகிய தேதிகளில் கான்பூரில் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளையும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் விளையாடவுள்ளது. அதன்படி முதல் போட்டி 2025 செப்டம்பர் 14ம் தேதியும், 2வது போட்டி 2025 செப்டம்பர் 17ம் தேதியும், 3வது மற்றும் கடைசி போட்டி 2025 செப்டம்பர் 20ம் தேதியும் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்காவின் ஆண்கள் ‘ஏ’ அணிக்கு எதிரான தொடரும் இருக்கும். தென்னாப்பிரிக்காவின் ஆண்கள் ஏ அணி, பெங்களூருவில் நடைபெறும் பல நாள் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் வடிவங்களை உள்ளடக்கிய நீட்டிக்கப்பட்ட தொடருக்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் என்று பிசிசிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இரண்டு பல நாள் போட்டிகள் பிசிசிஐ சிறப்பு மையத்திலும், மூன்று ஒருநாள் போட்டிகள் என் சின்னசாமி மைதானத்திலும் நடைபெறும்.

தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம் எப்போது..?

தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான 2 நான்கு நாள் போட்டிகள் 2025 அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 வரை நடைபெறும். ஒரு நாள் போட்டிகள் 2025 நவம்பர் 13, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.