WTC 2025-27: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி.. புள்ளி பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய வங்கதேசம்!
World Test Championship: நடப்புத் தொடரில் இதுவரை நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா 7ல் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. 87.50 சதவீதப் புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கின்றனர். 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு சமனுக்குப் பிறகு, நியூசிலாந்து 77.78 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.
சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதனால், உலக கிரிக்கெட் ரசிகர்களை வங்கதேசம் தன் பக்கம் ஈர்த்துள்ளது. வங்கதேசம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியால், இந்திய கிரிக்கெட் அணி புள்ளிகள் பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, சமீபத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தரவரிசையில் இந்திய அணி (Indian Cricket Team) 6வது இடத்திற்குச் சரிந்துள்ளது. மிர்ப்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியதைத் தொடர்ந்து, வங்கதேசம் 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலின் சமீபத்திய பதிப்பில் அவர்களை இந்தியாவை விட முன்னிலை பெறச் செய்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 4 டெஸ்ட் போட்டிகளில் 2 வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் ஒரு சமநிலையுடன் வங்கதேசம் தற்போது 58.33 சதவீதப் புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதேசமயம், 9 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் ஒரு சமநிலையுடன் இந்தியா 48.15 சதவீதப் புள்ளிகளைப் பெற்றுள்ளது.




ALSO READ: ஆப்கானிஸ்தான் எதிரான ஒரே ஒரு டெஸ்ட்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ!
பின்னடைவை சந்தித்த இந்திய அணி:
🔼 Bangladesh move up to fifth place on the World Test Championship table after their 2-0 series win over Pakistan https://t.co/cWXuSsHjXo pic.twitter.com/f9RqOjIwUo
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 20, 2026
முதல் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, தற்போது ஆசிய தரவரிசையில் பாகிஸ்தானை விட முன்னணியில் உள்ளது. சுப்மன் கில் தலைமையிலான அணி இந்த ஆண்டு இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை. இந்திய அணி அடுத்ததாக வருகின்ற 2026 ஜூன் 6ம் தேதி முதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஆனால், இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இல்லை. இதனை தொடர்ந்து, இந்திய அணி இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரு நாடுகளிலும் தலா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 2027-ல் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.
இந்தியா தனது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. மேலும் இங்கிலாந்தில் இரண்டு போட்டிகளிலும் தோற்றது. கில் தலைமையிலான இந்தியா, 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்தது. அணிகளின் தரவரிசையானது, புள்ளிகளின் அடிப்படையில் அல்லாமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி அட்டவணையில் உள்ள சதவீதப் புள்ளிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. 2025-2027 சுழற்சியில் வங்கதேசம் 28 புள்ளிகளையும், இந்தியா 52 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
ALSO READ: ரோஹித், கோலிக்கு இடம்.. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா முதலிடம்:
இரண்டாவது டெஸ்டில் 437 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பாகிஸ்தான், 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன், நடப்பு உலக டெஸ்ட் தொடர் சுழற்சியில் பாகிஸ்தான் 8வது இடத்தில் உள்ளது.
நடப்புத் தொடரில் இதுவரை நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா 7ல் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. 87.50 சதவீதப் புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கின்றனர். 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு சமனுக்குப் பிறகு, நியூசிலாந்து 77.78 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்கா 3ம் இடத்திலும், இலங்கை 4ம் இடத்திலும் உள்ளன.