பெங்களூருவில் ஆர்சிபி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி – பலர் படுகாயம்

RCB Victory Celebration Turns Tragic : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கொண்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

பெங்களூருவில் ஆர்சிபி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி - பலர் படுகாயம்

Rcb Victory Celebration Turns Tragic

Updated On: 

04 Jun 2025 18:39 PM

 IST

பெங்களூரு (Bangaluru) சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணியின் வெற்றிக்கொண்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார், இது காவல்துறையினரின் தோல்வியைக் காட்டுவதாக தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஐபிஎல் 18வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து அந்த அணி வீரர்கள் கோப்பையுடன் பெங்களூரு வந்தனர்.  அவர்களுக்கு பெங்களூரு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதனையடுத்து  ஆர்சிபி அணியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சின்னசாமி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து ஏராளமான ரசிகர்கள் சின்னசாமி ஸ்டேடியத்தில் குவிந்தனர்.

வெற்றிக்கொண்டாட்டத்தில் சிக்கி 11 பேர் பலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றியைக் கொண்டாடும் போது சின்னசாமி மைதானத்தில் சோகம் ஏற்பட்டது. அதிக அளவு ரசிகர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். பலர் கடுகாயமைடந்துள்ளனர். படுகாயமடைந்த நபர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்

 

இந்த கூட்ட நெரிசலில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அதில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காயமடைந்தவர்கள் சிவாஜிநகரில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 ரசிகர்கள் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு பெண் உட்பட ஆறு ஆர்.சி.பி ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். பவுரிங் மருத்துவமனை முன் இறந்தவரின் உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேரணிக்கு அனுமதி மறுப்பு

முன்னதாக ஆர்சிபி வீரர்கள் திறந்த வெளி பேருந்தில் ஊர்வலமாக சின்னசாமி ஸ்டேடியத்திற்கு அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி இந்த ஊர்வலத்துக்கு பெங்களூரு காவல்துறையினர் அனுமதி மறுத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் இந்த சோக சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

மைனாத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்கள்

மைதானத்திற்கு வெளியேயும் கூட்டம் கூடியதால், அந்த வழியில் செல்லும் வாகனங்கள் முன்னேற முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் தடியடி நடத்தியிருக்கின்றனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் தங்கள் ஜீப்பில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஒரு தடுப்புச் சுவர் விழுந்து மூன்று பேரின் கால்கள் முறிந்தன. ஆறுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் ஐபிஎல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories
IND vs PAK Asia Cup 2025: சூர்யாவின் சூரசம்ஹாரம்.. பாகிஸ்தானுக்கு எதிராக பக்கா பிளான்.. கெத்தாக வென்ற இந்தியா!
IND vs PAK Asia Cup 2025: டாஸூக்கு முன்பு கைலுக்க மறுத்த இந்திய கேப்டன்.. இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்கு!
World Boxing Championship 2025: 24 வயதில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டம்.. தங்கத்தை தூக்கிய இந்திய வீராங்கனை மினாக்‌ஷி ஹூடா!
India-Pakistan: விளையாடாமல் பின்வாங்குகிறதா இந்திய அணி..? புள்ளிகள் பட்டியலில் என்ன நடக்கும்?
India-Pakistan: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி ரத்து..? இதனால் யாருக்கு எவ்வளவு இழப்பு?
Asia Cup 2025 Points Table: ஆசிய கோப்பையில் முதலிடத்தில் யார்…? இந்தியாவா..? ஆப்கானிஸ்தானா..? புள்ளிகள் பட்டியல் இதோ!