Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பக்தர்களை கண்டு மகிழும் பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?

Famous Perumal Temple: திருவாரூர் பாடகாச்சேரியில் அமைந்துள்ள கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோயில், சீதையின் பாடகம் விழுந்த இடமாகும். இக்கோயில் வரலாறு சோழர் காலத்தைச் சார்ந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மனமகிழ்ச்சியுடன் காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் கடன் தீரும், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாகும்.

பக்தர்களை கண்டு மகிழும் பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?
பாடகச்சேரி பெருமாள் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 11 Oct 2025 12:16 PM IST

வைணவ சமயத்தாரின் முதன்மை கடவுளாகவும் அனைத்து இந்து மத சமய பேதமின்றி வழிபடக்கூடிய கடவுளாக விஷ்ணு பகவான் உள்ளார். இவர் இந்த உலகில் அதர்மம் தலை தூக்கும் போது நீதியை நிலைநாட்டும் பொறுத்து தசாவதாரங்கள் எடுத்து அவதரித்ததாக நம்பப்படுகிறது. அதனால்தான் விஷ்ணுவுக்கு பல்வேறு இடங்களிலும் சிறியது முதல் பெரியது வரையிலான கோயில்கள் அமையப்பெற்றுள்ளது. நாம் இந்த தொகுப்பில் திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரி எனும் ஊரில் அமைந்திருக்கும் கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில் பற்றி காணலாம். பெயரைக் கேட்டவுடன் பலருக்கும் வித்தியாசமான கோயிலாக இருக்குமோ என்ற கேள்வி எழலாம்.

இந்த கோயில் காலை 6:00 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். சோழர்கள் கட்டிய இந்த கோயிலின் வரலாறு மற்றும் இதர சிறப்பு விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Also Read:  பலன்களை அள்ளிக்கொடுக்கும் லட்சுமி ஹயக்ரீவர் கோயில்!

தல வரலாறு

சீதாதேவியை தனது வஞ்சகமான திட்டத்தின் மூலம் இலங்கைக்கு ராவணன் கவர்ந்து சென்றது அனைவருக்கும் தெரியும். அவன் சீதாதேவியை கடத்திச் செல்ல முற்படும்போது தன்னை விட்டு விடுமாறு தேவி மன்றாடினாள். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் புஷ்பக விமானத்தில் ராவணன் இலங்கைக்கு சென்றான். அப்போது சீதாதேவிக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

இராவணன் தன்னை எங்கே கடத்தி செல்கிறான் என்பதை பின்னர் தேடி வரும் ராமபிரானுக்கு உணர்த்தும் விதமாக தனது கை மற்றும் கால்களில் அணிந்திருந்த ஆபரணங்களை ஒவ்வொன்றாக கழற்றி பூமியில் சீதாதேவி போட்டுக் கொண்டே சென்றாள். அப்படி அவள் அணிந்திருந்த பாடகம் எனப்படும் காலில் அணியக்கூடிய கொலுசு ஓரிடத்தில் விழுந்தது. அந்த இடமே பாடகச்சேரியாக அழைக்கப்பட்டு வருகிறது.

Also Read: Theertheswarar Temple: திருமால் வழிபட்ட தலம்.. இந்த சிவன் கோயில் தெரியுமா?

ராமனும் லட்சுமணனும் சீதா தேவியை தேடி இலங்கைக்கு சென்றபோது வழியில் அந்த அணிகலன்களை கண்டனர். இதில் பாடகம் மட்டும் சீதாதேவி அண்ணியார் அணியும் அணிகலன் என லட்சுமணன் அடையாளம் காட்டினார். மற்றவை பற்றி தனக்கு தெரியாது எனக் கூறினார். எனினும் சீதா தேவியை பற்றிய தகவல் கிடைத்ததை எண்ணி இராமன் பெரு மகிழ்வு கொண்டான்.

அண்ணியாரை எந்த அளவுக்கு ஒரு தெய்வமாக லட்சுமணன் வணங்கினான் என்பதை கண்டு உள்ளம் பூரித்தான். அப்படியாக இந்த ஊருக்கு முதலில் பாடகப்பதி என பெயரிடப்பட்ட பின்னாளில் பாடகச்சேரி என மருவியதாக சொல்லப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் பெருமாளுக்கு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற பெயரும் ஏற்பட்டது.

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் மகிழ்ச்சியான முக அம்சத்துடன் பெருமாள் காட்சி கொடுக்கிறார். அது மட்டுமல்லாமல் கருடாழ்வார், தும்பிக்கையாழ்வார், ஸ்ரீ ராமானுஜர், சௌந்தரநாயகி சமேத பசுபதீஸ்வரர் ஆகிய கடவுள்களும் அருள்பாலிக்கின்றனர். இந்த பெருமாளை நாம் தரிசித்தால் மனதால் நினைத்த அனைத்து காரியங்களும் சுபமாக நிறைவடைந்து நமது உள்ளத்திலும் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

மேலும் கொடுத்த கடன்கள் வசூலாகும், திருமண காரியம் கைகூடும், வியாபாரத்தில் வளர்ச்சி கிடைக்கும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இக்கோயிலில் பெருமாள் கூறிய அத்தனை விசேஷ தினங்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)