விரதம் இருந்தால் தானம் செய்யக்கூடாத பொருட்கள்!
Vastu Tips: இந்து மதத்தில் தானம் மகத்தான பண்பாக போற்றப்பட்டாலும், வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களை தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய், உப்பு, பழைய உணவு, துடைப்பம், கூர்மையான பொருட்கள் மற்றும் மத நூல்களை தானம் செய்யக்கூடாது என சொல்லப்படுகிறது.

இந்து மதத்தில் தானம் என்பது நல்லொழுக்கத்தின் பண்பாக பார்க்கப்படுகிறது. அது மிகப்பெரிய கொடை என கொண்டாடப்படுகிறது. இதைத் தான் தானம் கொடுக்க வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டாலும், எப்போதும் நம்மால் முடிந்ததை தான் கொடுக்க வேண்டும். அதேசமயம் விசேஷ நாட்கள் மற்றும் முக்கிய விரதங்களுக்குப் பிறகு தானம் செய்வது ஒரு பாரம்பரிய வழக்கமாக நம்மிடையே உள்ளது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி, தானம் செய்வதில் தவறுகள் செய்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இது நிதி சிக்கல்கள், இல்லற பிரச்னைகள் மற்றும் எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. எனவே, இந்த 5 முக்கிய பொருட்களை ஒருபோதும் தானம் செய்யக்கூடாது என்று வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதனைப் பற்றி காணலாம்.
எண்ணெய் – உப்பு
விரதம் அல்லது ஏதேனும் பண்டிகை வழிபாட்டிற்கு பிறகு தானம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், வாஸ்துவின் படி, எந்த விரதமும் முடிந்த பிறகு எண்ணெய் அல்லது உப்பு தானம் செய்யக்கூடாது. இதன் காரணமாக, விரதத்தின் முழு பலனும் உங்கள் தானத்துடன் சேர்ந்து இழக்கப்படும். நிதி இழப்பு மற்றும் நோய் பயம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. எனவே, தானம் செய்யும்போது முன்னெச்சரிக்கைகள் கட்டாயம் என்று கூறப்படுகிறது. எண்ணெய் மற்றும் உப்புக்கு பதிலாக, பிற உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த திசையில் விநாயகர் சிலை வைத்தால் செல்வம் கொட்டும்! – வாஸ்து டிப்ஸ்!
மீதமுள்ள உணவு
உங்கள் வீட்டிற்கு உணவுக்காக வரும் யாசகர்களுக்கு எஞ்சிய அல்லது கெட்டுப்போன உணவை ஒருபோதும் தானம் செய்யாதீர்கள். இது வீட்டில் செல்வத்தையும், செழிப்பையும் தடுக்கிறது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மேலும், இது குடும்பத்தில் வறுமை, நோய் மற்றும் துக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. ஒருவருக்கு வழங்கப்படும் உணவு எப்போதும் புதிய மற்றும் சுத்தமான உணவை மட்டுமே தானம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துடைப்பம்
துடைப்பத்தை யாருக்கும் தானம் செய்யக்கூடாது. இது லட்சுமி தேவியின் சின்னமாகக் கருதப்படுகிறது. துடைப்பத்தை தானம் செய்தால், வீட்டின் லட்சுமியும் பார்வை கிடைக்காது என்று நம்பப்படுகிறது. இது நிதி இழப்பு மற்றும் செல்வப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். அதனால்தான் துடைப்பத்தை யாருக்கும் ஒருபோதும் கொடுக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Vastu Tips: வடக்கு பார்த்த வீட்டில் பின்பற்ற வேண்டிய வாஸ்து டிப்ஸ்!
மத நூல்கள் அல்லது புத்தகங்கள்
உங்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு மத புத்தகங்கள் அல்லது வேதங்களை தானம் செய்யாதீர்கள். பெறுபவர் அதை புனிதமாக வைத்திருக்கவில்லை அல்லது படிக்கவில்லை என்றால், தானம் செய்பவர் பாவத்திற்கு ஆளாக நேரிடும். இது வாழ்க்கையில் தடைகள், ஏமாற்றங்கள் மற்றும் முயற்சிகளில் தோல்விகளுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற நன்கொடைகளைத் தவிர்க்கவும்.
கூர்மையான பொருள்கள்
எஃகு பாத்திரங்கள், கத்திகள், கத்தரிக்கோல் அல்லது வேறு எந்த ஆயுதங்கள் போன்ற கூர்மையான பொருட்களையும் தானம் செய்ய வேண்டாம். வாஸ்துவின் படி, இது குடும்பத்தின் அமைதியையும் மகிழ்ச்சியையும் அழிக்கிறது. குடும்பத்தின் வருமான ஆதாரங்கள் நின்றும் என நம்பப்படுகிறது.
(வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)