Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: சாமந்தி பூ செடியை இந்த திசையில் வீட்டில் நட்டால் அதிர்ஷ்டம்!

சாமந்தி செடி, இந்து மதத்தில் புனிதமானதாகக் கருதப்பட்டு, பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி, வடகிழக்கு, கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் சாமந்தி செடியை வைப்பது செல்வம், செழிப்பு, நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. சரியான திசையில் வைப்பதன் மூலம் வீட்டு வாஸ்து குறைபாடுகளை நீக்கி, மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறலாம்.

Vastu Tips: சாமந்தி பூ செடியை இந்த திசையில் வீட்டில் நட்டால் அதிர்ஷ்டம்!
சாமந்தி பூ
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 Aug 2025 13:20 PM

இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொரு கடவுளுக்கு என படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  பாரம்பரியமாக பூஜையில் பயன்படுத்தப்படும் ஒரு மலராக உள்ள சாமந்தி செடிக்கு ஒரு சிறப்பு இடம் உள்ளது. இந்த செடி மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இது பூஜையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், வீட்டில் சாமந்தி செடியை சரியான திசையில் வைப்பது செல்வம், செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.  அப்படியான நிலையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக சாமந்தி செடியை எவ்வாறு வளர்க்க வேண்டும்? அந்த செடியை வளர்ப்பதற்கான சிறந்த திசை எது?  பற்றிக் காணலாம்.

சாமந்தி பூவானது பெரும்பாலும் லட்சுமி தேவி மற்றும் விநாயகர் பூஜையில் பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டில் ஆன்மீக சூழலை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. சாமந்தி பெரும்பாலும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அவை செல்வத்தையும் செழிப்பையும் குறிக்கின்றன. எனவே, இந்த செடியை சரியான திசையில் வைப்பது வீட்டின் வாஸ்து குறைபாடுகளையும் நீக்கும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்கVastu Tips: வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வாஸ்து டிப்ஸ் இதோ!

சாமந்தி செடி வைக்க வேண்டிய இடங்கள் 

வாஸ்து படி, வடகிழக்கு திசை மிகவும் புனிதமான திசையாகக் கருதப்படுகிறது. இந்த திசையில் ஒரு சாமந்தி செடியை வைப்பது நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். நிதி சிக்கல்கள் நீங்கும். இந்த திசையில் சாமந்தி செடிகளை வைக்கும் போது, ​​அந்தப் பகுதியும் பூந்தொட்டியும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல கிழக்கு திசை சூரியனின் சக்தியைக் குறிக்கிறது. இந்த திசையில் ஒரு சாமந்தி செடியை வைப்பது வீட்டில் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இந்த செடி சூரியனின் கதிர்களை ஈர்க்கிறது. இது வீட்டின் வளிமண்டலத்தை உற்சாகப்படுத்துகிறது.

இதையும் படிங்க: வீட்டுல பிரச்னையா இருக்கா? – வாஸ்து குறைபாடு காரணமா இருக்கலாம்!

வீட்டின் வடக்கு திசை லட்சுமி தேவியுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. இந்த திசையில் ஒரு சாமந்தி செடியை வைப்பது நிதி செழிப்பையும் வியாபாரத்தில் வெற்றியையும் தரும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் இந்த திசையில் செடியை வைப்பதன் மூலம் தங்கள் லாபத்தை அதிகரிக்கலாம். அதேசமயம் இந்த செடியை ஒருபோதும் தெற்கு திசையில் வைக்கக்கூடாது.

சாமந்தி செடி வாஸ்து சாஸ்திரத்துடன் தொடர்புடையது மட்டுமல்ல. இது ஆயுர்வேத பண்புகளையும் கொண்டுள்ளது. இந்த தாவரத்தின் பூக்கள் தோல் பிரச்சினைகள், செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

வீட்டின் வடகிழக்கு, கிழக்கு அல்லது வடக்கு திசையில் சாமந்தி செடியை வைப்பது செல்வம், செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த செடியை பராமரித்து பூஜையில் பயன்படுத்துவது வீட்டின் ஆன்மீக மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்கிறது. இதுபோன்ற சிறிய வாஸ்து விதிகளை சரியாக பின்பற்றி அதற்கான பலன்களைப் பெறுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(வாஸ்து சாஸ்திர நம்பிக்கையில் அடிப்படையில் இக்கட்டுரையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)