Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ganesh Chaturthi: இந்த திசையில் விநாயகர் சிலை வைத்தால் செல்வம் கொட்டும்! – வாஸ்து டிப்ஸ்!

Vastu Tips for Lord Ganesh Idol:விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது வீட்டில் விநாயகர் சிலையை வைப்பதற்கான சிறந்த திசையை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். சிலையின் அளவு மிதமாக இருக்க வேண்டும். நேர்மறை ஆற்றலைப் பெற பிரதிஷ்டை செய்த நாளில் இருந்து நீர்நிலைகளில் கரைக்கும் நாள் வரை ஒவ்வொரு நாளும் விளக்கு ஏற்ற வேண்டும்.

Ganesh Chaturthi: இந்த திசையில் விநாயகர் சிலை வைத்தால் செல்வம் கொட்டும்! – வாஸ்து டிப்ஸ்!
விநாயகர் சிலை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 22 Aug 2025 11:27 AM

இந்தியாவில் சில பண்டிகைகள் மட்டும் மிக பிரமாண்டமாக அனைத்து மாநிலங்களிலும் பொதுவாக கொண்டாடப்படும். அதில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். விநாயக பெருமான் அவதரித்த நாளாக கருதப்படும் இந்நாளில் பல்வேறு இடங்களில் விதவிதமான வடிவங்களில், அளவுகளில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின் ஒருநாளில் அருகிலிருக்கும் ஆறு, கடல்,குளம் போன்ற நீர் நிலைகளில் கரைக்கப்படும். இத்தகைய விநாயகர் சதுர்த்திக்காக சிலைகளை வைக்க மக்கள் பிரமாண்டமானஅலங்காரங்களையும் அமைத்து வருகின்றனர். இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் விநாயகர் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவராக பார்க்கப்படுகிறது. அவர் முழு முதற் கடவுளாக அறியப்படுகிறார். இத்தகைய விநாயகர் பிள்ளையார், ஆனைமுகன், கணபதி என பல பெயர்களில் வழங்கப்படுகிறார். நம்முடைய சமூகத்தில் எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வணங்குவது கட்டாயமான விதியாக பின்பற்றப்படுகிறது.

இப்படியான நிலையில் விநாயகர் சதுர்த்தி நாளில் நம்முடைய வீடுகளில் களிமண் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். அப்படியாக வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் எந்த திசையில் விநாயகர் சிலைகளை வேண்டும் என்பது பற்றி சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஜோதிடத்தில் கிரக பிரச்னையா?.. பசுவிற்கு இந்த உணவு தானம் கொடுக்கலாம்!

பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்

பொதுவாக ஒரு வீட்டின் வடகிழக்கு திசையில் விநாயகர் சிலையை வைப்பது மிகவும் நல்லதாக பார்க்கப்படுகிறது. இதைச் செய்வதால் செல்வமும் ஆரோக்கியமும் பெருகும் என்பது நம்பிக்கையாகும். அதேசமயம் வாஸ்துபடி, விநாயகர் சிலையை மேற்கு அல்லது தெற்கு திசையில் வைக்கக்கூடாது. இவ்வாறு செய்வது வீட்டில் பணப்புழக்கத்தைத் தடுக்கும். மேலும் சூரியன் உதிக்கும் கிழக்கு நோக்கி விநாயகர் சிலையை வைக்கலாம். இதைச் செய்தால் நேர்மறை எண்ணங்கள் வீட்டில் அதிகரிக்கும்.  ம்

மேலும் சிலைகளில் வலது பக்கம் பார்த்தபடி தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் சித்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால், பெரும்பாலான இடங்களில், இடது பக்கம் பார்த்தபடி இருக்கும் சிலைகளை தான் நாம் வணங்குகிறோம். ஆகவே இடது பக்கம் வளைந்த தும்பிக்கை இருக்கும் விநாயகர் சிலைகளை வீட்டில் வைக்க வேண்டும். இது வீட்டிற்கு அமைதியையும் செழிப்பையும் தரும். வலது பக்கம் பார்த்தபடி சிலையை நிறுவுவதற்கும் வழிபடுவதற்கும் சிறப்பு விதிகள் உள்ளதால் அது தவறினால் எதிர்மறை விஷயங்கள் நிகழலாம்.

Also Read: Ganesh Chaturthi: விநாயகருக்கு உகந்த 21 இலை, மலர் வழிபாடு!

அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டு பூஜை அறையில் எப்போதும் ஒரு விநாயகர் சிலை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பூஜை அறையில் ஒரு விநாயகர் சிலையை வைத்திருப்பது நேர்மறை ஆற்றலைப் பெற உதவுகிறது. இந்த வழியில், விநாயகரின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும்.

அதேபோல் களிமண் சிலை ஒருபோதும் மிகப் பெரியதாகவோ அல்லது மிகச் சிறியதாகவோ இருக்கக்கூடாது. வீட்டில் நடுத்தர அளவிலான சிலையை வைத்திருப்பது நல்லது. நீர்நிலைகளில் கரைக்க செல்லும் முன் ஒவ்வொரு நாளும் விநாயகர் முன் விளக்கை ஏற்றி வைக்கவும். இது நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும். எதிர்மறை ஆற்றலையும் நீக்கும். விநாயகர் சிலையை வைத்திருக்கும் போது, ​​லட்சுமி தேவியும் உடன் இருப்பதாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வது செல்வத்தையும் செழிப்பையும் தரும்.

(இறை நம்பிக்கை மற்றும் ஆன்மிக சிந்தனைகள் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)