Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Chanakya Niti: இப்படியான உறவினர்களை பக்கத்தில் கூட சேர்க்காதீர்கள்!

சாணக்கியரின் நீதியின் படி, வாழ்வில் சில உறவுகள் நமக்கு தீங்கு விளைவிக்கும். எதிர்மறை எண்ணங்களைப் பரப்புபவர்கள், துரோகிகள், குடும்பத்தில் மோதலை உண்டாக்குபவர்கள், பொருளாதார ரீதியாக சுரண்டி பயன்படுத்திக் கொள்பவர்கள், நம்மை அவமானப்படுத்துபவர்கள் ஆகியவற்றை வாழ்க்கையில் தவிர்க்க வேண்டும் என சாணக்ய நீதி தெரிவிக்கிறது.

Chanakya Niti: இப்படியான உறவினர்களை பக்கத்தில் கூட சேர்க்காதீர்கள்!
சாணக்ய நீதி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Aug 2025 15:31 PM

வாழ்க்கை என்றால் ஆயிரம் இன்பம், துன்பங்கள் இருக்கும் என சொல்வார்கள். இவை அனைத்திற்கும் காரணம் ஒன்று நாமாக இருப்போம், அல்லது நம்மை சுற்றி இருப்பவர்களாக இருப்பார்கள். மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான். ஆனால் அதனை தெரிந்து செய்வது மிகப்பெரும் குற்றம் என சொல்லப்படுகிறது. என்னதான் ஒவ்வொரு மனிதர்கள் வாழ்க்கையிலும் பல்வேறு உறவுகள் இருந்தாலும் அவையாவும் மாயை தான் என பல தத்துவ ஞானிகளும் கூறுகிறார்கள். ஒரு சிலரை தவிர மற்ற உறவுகள் நம்மை வீழ்த்தவும், தீங்கு விளைவிக்கவும் அஞ்ச மாட்டார்கள். போட்டி, பொறாமை, இயலாமை, அதிகாரம் என பல வகைகளில் உறவுகள் எதிர்மறையான நோக்கங்களை கொண்டிருப்பார்கள் என சொல்லப்படுகிறது. அப்படியான நபர்களை நம் அருகில் கூட சேர்த்துக் கொள்ளக்கூடாது என சாணக்ய நீதி சொல்கிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் உறவினர்கள் நிலை எப்போதும் நிலையாக இருக்காது. ஒருநாள் அடித்துக் கொள்வார்கள், மற்றொரு நாள் கூடிக் கொள்வார்கள் என்பதை அனுபவ ரீதியாகவும் உணர்ந்திருப்போம். இத்தகைய உறவினர்களிடம் தூரத்தை பராமரிப்பது நல்லது என கூறி ஆச்சார்ய சாணக்கியர் தெரிவித்துள்ளார்.

Also Read: வாழ்க்கையில் இந்த 5 பேருக்கு கடன் கொடுக்காதீர்கள்.. சிக்கல் உண்டாகும்!

இந்தெந்த உறவினரிடம் விலகி இருங்கள்

சில உறவினர்கள் நம்முடன் உரையாடும்போது எதிர்மறையான எண்ணங்கள், விரக்தியை ஏற்படுத்தும் பேச்சுகளை கொண்டு வருவார்கள். அத்தகைய உறவினர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அதேபோல் வாழ்க்கையில் ஒரு முறை துரோகம் செய்த உறவினரை ஒருபோதும் மீண்டும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். நன்றாக செல்லும் குடும்பத்தில் மோதலை ஏற்படுத்தும் உறவினர்களை நாம் சில நேரங்களில் அடையாளம் காண்போம். நம் வீட்டில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொண்டு சூழ்ச்சி வேலைகளை செய்பவராக இருப்பார். தயவு செய்து அவர்களைத் தூர விலக்கி வைப்பது மிகவும் நல்லது.

கடினமான காலங்களில் உங்களுக்கு ஆதரவு வழங்குவதாக நடித்து உங்களை பொருளாதார மற்றும் தனிப்பட்ட ரீதியாக பயன்படுத்திக் கொள்ளும் உறவினர்களைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் கடன் என்ற பெயரில் அடிக்கடி பண உதவி கேட்பவரிடம் பேச்சை குறைப்பது நல்லது, தனக்கு பணம் வேண்டும் என்றால் மூளைச்சலவை செய்து ஏமாற்றவும் தயங்க மாட்டார்கள். அதேசமயம் உண்மையான பணத்தேவையா என்பதை அறிந்து நீங்கள் முடிவெடுங்கள்.

Also Read: வாழ்க்கையில் இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் பணப்பிரச்னை இருக்காது!

நம் குறைகளை சுட்டிக்காட்டி திருத்த முயல்வது வேறு. நம்மை தொடர்ந்து விமர்சிப்பது வேறு.எனவே பொதுவில் அவமானப்படுத்தும் உறவினர்களை முடிந்தவரை தவிர்க்கவும். பொறாமை கொண்ட உறவினர்களுடன் உறவுகளைப் பேணுவது தீங்கு விளைவிக்கும் என்பதை உணருங்கள். உங்கள் மன அழுத்தத்திற்கு காரணமான உறவினர்களை அடையாளம் கண்டு விலகி இருங்கள்.

(சாணக்ய நிதி அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)