Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dream Astrology: கனவில் மயில் வந்தால் கெட்ட சகுனமா? – இதை தெரிஞ்சுகோங்க!

கனவில் மயிலை காண்பது மங்களகரமா அல்லது அசுபமா என்பது பலரின் கேள்வியாகவே உள்ளது. இந்து மதத்தில் மயிலுக்கு முக்கிய இடம் உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். கனவு அறிவியலின் படி, நடனமாடும் மயில் செல்வத்தையும், வெள்ளை மயில் லட்சுமி அருளையும் குறிக்கிறது என கூறப்படுகிறது.

Dream Astrology: கனவில் மயில் வந்தால் கெட்ட சகுனமா? – இதை தெரிஞ்சுகோங்க!
கனவு பலன்கள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 Aug 2025 08:39 AM

கனவு  என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். அது பாசிட்டிவாகவும், நெகட்டிவாகவும் இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் தோன்றும் எண்ணங்கள், பார்க்கும் மனிதர்கள் என எது வேண்டுமானாலும் கனவாக மாறலாம். ஆனால் பலருக்கும் தாங்கள் கண்ட கனவின் அர்த்தம் தெரியாமல் இருக்கலாம். இதுதொடர்பாக கனவு  அறிவியல் சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கனவில் காணப்படும் ஒவ்வொரு விஷயமும் எதிர்காலத்தைப் பற்றிய பல்வேறு வகையான குறிப்புகளைத் தரும் என சொல்லப்படுகிறது. அந்தக் கனவுகள் சில நல்ல அறிகுறிகளைத் தெரிவிக்கலாம்.. அதேசமயம் அவை வரவிருக்கும் காலகட்டத்தில் நிகழும் சில எதிர்மறை சம்பவத்தின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அப்படியான நிலையில் ஒருவரின் கனவில்  மயிலைப் பார்ப்பதன் அர்த்தம் பற்றிக் காணலாம்.

கனவில் மயில் வருவது நல்லதா? கெட்டதா?

மயிலை கனவில் பார்ப்பது மங்களகரமானதா அல்லது அசுபமானதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். மயிலுக்கு இந்து மதத்தில் ஒரு சிறப்பு இடம் உண்டு. இது கிருஷ்ணரின் விருப்பமான பறவையாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், மயில் முருகன் மற்றும் சரஸ்வதி தேவியின் வாகனமாகவும் இருக்கிறது. கனவுகளின் அறிவியலின் படி, மயிலை கனவில் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் சில சூழ்நிலைகளில் மயிலைப் பார்ப்பது அசுபமானதாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, மயில் தரையில் அமர்ந்திருப்பது, இறந்திருப்பது, சண்டையிடுவது ஆகிய கனவுகளை கண்டால் அது எதிர் வரவிருக்கும் காலகட்டத்தின் எதிர்மறையான நிகழ்வை குறிக்கும் என சொல்லப்படுகிறது.

Also Read: முன்னோர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

என்ன அர்த்தம் தெரியுமா?

உங்கள் கனவில் தோகையை விரித்தபடி நடனமாடும் மயிலைக் காண்பது ஒரு நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது. இது செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் சின்னமாகும். உங்கள் கனவில் நடனமாடும் மயிலைப் பார்ப்பது நீங்கள் விரைவில் நிதி நன்மைகளை  பெறுவீர்கள் என்பதாகும். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும் எனவும் அர்த்தமாகும். உங்கள் கனவில் யாராவது மயிலைப் பிடிப்பது போல் கண்டால், அந்தக் கனவு அவர்கள் எதிர்காலத்தில் பெரும் வெற்றியைப் பெறுவார்கள் என்பதற்கான அறிகுறியாகும். உங்கள் கனவில் யாராவது மயிலைப் பிடிப்பதைக் கண்டால், உங்கள் முயற்சிகளால் நீங்கள் வெற்றியை அடைவீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் வெள்ளை மயிலைக் கண்டால்  மிகவும் நல்ல அறிகுறியாகும். இந்த கனவு மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் சின்னமாகும். கனவு அறிவியலின் படி, இந்த கனவு லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை குறிப்பதாகும். இதன் பொருள் திடீர் வருவாய் பெறுவதை குறிப்பதாகும். கனவு அறிவியலின் படி, நீல மயிலைப் பார்ப்பது என்பது உங்கள் வாழ்க்கையில் நல்ல நாட்கள் வரப்போகின்றன என்பதை குறிக்கிறது.

Also Read: Dream Astrology: உங்களுக்கு இப்படியெல்லாம் கனவு வருதா? – உஷாரா இருங்க!

மேலும் நீங்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள் எனவும் பொருள் கொள்ளலாம். இந்த கனவு கிருஷ்ணரின் ஆசீர்வாதம் உங்கள் மீது இருப்பதையும் குறிக்கிறது. ஒரு கனவில் மயில்களின் கூட்டத்தைக் காண்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. கனவு அறிவியலின் படி, ஒரே நேரத்தில் பல மயில்கள் ஒன்றாகக் காணப்பட்டால், அந்தக் கனவு விதியில் ஒரு வலுவான இனிமையான மாற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அப்படியாக கனவில் மயில்களின் கூட்டத்தைக் கண்டால்  நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

(கனவு அறிவியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)