Astrology: இந்த 6 ராசிகள் தொழில் தொடங்கினால் லாபம் கொட்டும்!
ஜோதிடத்தில் புதன் கிரகத்தின் சாதகமான சஞ்சாரத்தால், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் தனுசு ஆகிய 6 ராசிகளுக்கு வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ராசிக்காரர்கள் தொழில் வளர்ச்சி, வருமான அதிகரிப்பு, புதிய முதலீடுகள் மற்றும் வெற்றிகரமான வணிக முயற்சிகளை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் அமையப்பெற்றுள்ள நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியான சிறப்புகளை பெற்றிருக்கிறது. அதனால் இவற்றில் ஏதேனும் மாற்றம் நிகழும்போது அது ஒட்டுமொத்த ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையில் புதன் கிரகம் ஆளப்படும் ராசியாக மிதுனம் உள்ளது. இதில் செல்வத்தை உண்டாக்கும் குரு, வியாபார செழிப்பை உண்டாக்கும் புதன் இருக்கும் நிலையில், கடகம், சிம்மம் மற்றும் கன்னி ராசிகளில் இன்னும் மூன்று மாதங்களுக்கு சாதகமாக சஞ்சரிக்கவுள்ளது. இதனால் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்றம் போன்ற ஒரு ஒளியைக் காணப் போகிறார்கள். அதன்படி ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக லாபம் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.
6 ராசிக்காரர்கள் பெறும் பலன்கள் என்னென்ன?
- ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் பணத்தைச் சேகரித்து முறையாக முதலீடு செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு நேரம் மிகவும் சாதகமாக உள்ளதால் வருமானத்தை அதிகரிக்க எடுக்கும் எந்த முயற்சியும் கண்டிப்பாக வெற்றி பெறும். தொழில்களில் நிறைய செயல்பாடுகள் இருக்கும். முதலீடுகளை அதிகரிப்பதற்கும், தொழில்களை விரிவுபடுத்துவதற்கும் ஏற்ற காலமாக உள்ளது. இந்த ராசிக்காரர்கள் வருமானத்தை அதிகரிக்கவும், தங்கள் தொழிலை வளர்க்கவும் தங்களிடம் உள்ள ஒவ்வொரு திறமையையும் பயன்படுத்துவார்கள்.
- மிதுனம்: ராசியின் அதிபதியான புதன், வியாபார காரகியாக இருப்பதாலும், அந்த புதன் பண ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், இந்த ராசிக்காரர்கள் தொழிலில் விரும்பிய முன்னேற்றத்தை அடைவார்கள். அவர்களிடம் அதிக தொலைநோக்கு பார்வை, வணிக நோக்குநிலை மற்றும் கவனமாக செலவு செய்யும் தத்துவம் ஆகியவை இருக்கும். இவர்கள் தொடங்கும் எந்த தொழிலிலும் வெற்றி பெறுவார்கள். ஒருபுறம், பங்குகள், முதலீடுகள் உள்ளிட்ட பிற வருமானம் தரும் முயற்சிகளை மேற்கொண்டு நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- சிம்மம்: வியாபாரத்தின் அதிபதியான புதன், இந்த ராசிக்கு பணம் மற்றும் லாபத்தின் அதிபதியாக இருக்கிறார். அதேபோல் சாதகமான சஞ்சாரத்தில் வலம் வருகிறார். இதனால் சிம்ம ராசியினர் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும். விடாமுயற்சி மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் அவர்கள் நிதி பரிவர்த்தனைகளில் திறமையானவர்களாக திகழ்வார்கள். எனவே ராசிக்காரர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு வணிக முயற்சியும் வெற்றி பெறும். இந்த ராசிக்கு இரண்டு தொழில்களைத் தொடங்கும் வாய்ப்பும் உள்ளது. பங்குகள், முதலீடுகள் என வருமானம் தரும் முயற்சி மூலம் நல்ல லாபம் ஈட்டுவார்கள்.
- கன்னி: இந்த ராசிக்கு புதன் அதிபதியாக இருப்பதால், அவர்களுக்கு வியாபாரத்தில் ஈடுபட அதிக ஆசை இருக்கும். இந்த ராசிக்காரர்கள் ஒரு பக்கம் வேலை செய்து கொண்டே வியாபாரம் செய்வது, முதலீடு செய்வது போன்றவற்றில் சிறந்தவர்களாக திகழ்வார்கள். மேலும் எந்த தொழிலை மேற்கொண்டாலும், அவர்கள் வெற்றி பெறுவார்கள். புதன் கிரகத்தின் காரணமாக, பங்குகள், முதலீடுகள் மூலம் லாபம் ஈட்டுவார்கள்.
- துலாம்: வணிகத்தில் சிறந்து விளங்கும் இந்த ராசிக்காரர்கள், ஆண்டு முழுவதும் எதிர்பார்ப்புகளை மீறிய வணிக முன்னேற்றத்தைக் காண்பார்கள். லாபம் அதிகரிக்கும், இழப்புகள் முற்றிலும் குறையும். மேற்கொள்ளும் எந்த வணிக முயற்சியும் வெற்றி பெறும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகவும், தொலைநோக்குப் பார்வையுடனும் இருக்கும் இந்த ராசிக்காரர்கள், கூடுதல் வருமான வழிகளை சாதகமாக மாற்றிக் கொள்வார்கள்.
- தனுசு: தொழில் ஸ்தானமான புதன், இந்த ராசிக்கு பத்தாம் வீட்டில் சாதகமான நிலையில் இருப்பதால், அவர்கள் நிச்சயமாக வணிகத் துறையில் நுழைய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு அவர்கள் கூட்டுத் தொழில்களில் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது. பங்குகள், முதலீடுகள், நிதி பரிவர்த்தனைகள் போன்ற முதலீட்டுத் தொழில்களில் அவர்கள் பெரும் லாபம் ஈட்டுவார்கள். வணிக நோக்கங்களுக்காக பயணம் செய்வதற்கும் வெளிநாடு செல்வதற்கும் நல்ல வாய்ப்பு உள்ளது.
(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் இதற்கு பொறுப்பேற்காது)