Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dream Astrology: உங்களுக்கு இப்படியெல்லாம் கனவு வருதா? – உஷாரா இருங்க!

கனவுகள் நம் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சில கனவுகள் நல்லதைக் குறிக்க, சில கனவுகள் கெட்டதைக் குறிக்கும். மாட்டு வண்டி, கருப்பு மேகம், காகம் போன்றவை எதிர்மறையான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. அதேபோல் கருப்பு ஆடை, இரத்தப்போக்கு, காட்டு விலங்குகள், புயல் போன்றவை நோய், நிதி இழப்பு, துரதிர்ஷ்டம் போன்றவற்றைக் குறிக்கலாம் என சொல்லப்படுகிறது.

Dream Astrology: உங்களுக்கு இப்படியெல்லாம் கனவு வருதா? – உஷாரா இருங்க!
கனவு பலன்கள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 10 May 2025 17:37 PM

இந்த உலகில் கனவு காணாமல் யாராலும் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் தூக்கத்தின் போது வெவ்வேறு வகையான கனவுகள் வரும். இது ஒரு சாதாரணமான நிகழ்வு என்பதை உணர வேண்டும். அதேசமயம் நாம் காணும் விஷயங்கள், பார்க்கும் மனிதர்கள், நினைக்கும் எண்ணங்கள் ஆகியவை கனவுகளாக வரும் என சொல்லப்படுகிறது. அத்தகைய கனவுகள் பாசிட்டிவாகவும் இருக்கலாம். நெகட்டிவாகவும் இருக்கலாம். இதில்சில வகையான கனவுகள் நல்ல விஷயங்களைக் குறிக்கும் வகையில் அமையும். சில கனவுகள் வாழ்க்கை மீது ஒரு பயத்தை உண்டாக்கும் வகையில் மிகவும் எதிர்மறையான நிகழ்வாக இருக்கும். ஆனால் சில கனவுகள் நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு விசித்திரமாக இருக்கும்.அப்படிப்பட்ட கனவுகள் பற்றி நாம் காணலாம்.

கனவுகளின் அர்த்தங்களை பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டது தான் கனவு அறிவியலாகும். ஒருவரின் வாழ்க்கையில் தனிப்பட்ட வளர்ச்சியில் கனவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை அவர் காணும் காட்சிகள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.கனவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நாம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண முடியும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த கனவுகளுக்கு என்ன அர்த்தம்?

அப்படியாக ஒருவர் தன்னுடைய கனவில் ஒரு மாட்டு வண்டியைப் பார்ப்பது வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகள் மெதுவாக இருப்பதைக் குறிக்கிறது. மேலும், இந்த கனவு எதிர்கால தோல்விகளை சுட்டிக் காட்டுகிறது என சொல்லப்படுகிறது. அதேசமயம் அடர்ந்த கருப்பு மேகங்களைப் பார்ப்பது துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதனால் உங்கள் வாழ்க்கையில் விரைவில் தடைகள் வரும் என்பதைக் குறிக்கிறது. அதேபோல் கனவில் கருப்பு காகத்தைப் பார்ப்பது அசுபமானதாக சொல்லப்படுகிறது. இது வரவிருக்கும் ஒரு பெரிய ஆபத்தைக் குறிக்கிறது. நெருங்கிய வட்டாரத்தில் ஒருவரின் மரணச் செய்தியாக கூட இருக்கலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஒருவர் தன்னுடைய கனவில் கருப்பு ஆடை அல்லது கருப்பு பொருட்களை அணிந்தாலோ அல்லது அணிந்த ஒருவரை பார்த்தாலோ அது கடுமையான நோயின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.மேலும் இரத்தப்போக்கு தொடர்பாக காட்சிகள் ஒரு நாள்பட்ட நோயின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. சிலருக்கு காட்டு விலங்குகள் உங்களைத் துரத்துவது போல கனவும் வரும். இது சாஸ்திரத்தில் அசுபமாக கருதப்படுகிறது. இது மிகப்பெரிய நிதி இழப்புகளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

நீங்கள் ஏதேனும் ஒரு புயல், சூறாவளி அல்லது இடிந்து விழுந்த வீட்டில் இருப்பது போல காட்சிகள் இருந்தால், துரதிர்ஷ்டம் உங்களை நிழல் போல வேட்டையாடும் என்று அர்த்தமாகும். சிலர் சந்திர அல்லது சூரிய கிரகணத்தை பார்ப்பதாக சொல்வார்கள். இது எதிர்மறையானது. இதனால் உங்கள் வாழ்க்கையில் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கனவு அறிவியலின்படி, உங்கள் கனவில் நீங்கள் பறவைகள் பறப்பதைப் பார்ப்பது விரைவில் நீங்கள் நிதி இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதைக் குறிக்கிறது. மேலும் பணத்திற்காக கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைக் குறிக்கிறது.

ஒரு கனவில் யாராவது கத்துவது போல சத்தங்களைக் கேட்டால், அந்தக் கனவின் அர்த்தம் கனவு காண்பவரின் வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

(கனவு அறிவியல் மற்றும் ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)