AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Astrology: ஜூலை 26 வரை இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்.. ஏன் தெரியுமா?

ஜூன் 26 முதல் ஜூலை 26 வரை சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கிறது. இதனால் 5 ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை, நிதி நிலைமை, காதல், திருமணம் உள்ளிட்ட பல விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: ஜூலை 26 வரை இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்.. ஏன் தெரியுமா?
ஜோதிட பலன்கள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 26 Jun 2025 18:30 PM IST

ஜாதகத்தில் கிரகங்களின் பலன்கள் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதில் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார் சுக்கிரன். 12 ராசிகளில் 2வது ராசியான ரிஷபத்தின் அதிபதியான அவர், ஜூன் 26 ஆம் தேதி தொடங்கி ஜூலை 26 ஆம் தேதி வரை சஞ்சரிக்கிறார். தன்னுடைய ராசிக்குள் சுக்கிரன் வருவதால் குடும்பம் மற்றும் இல்லற வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய 6 ராசிகளுக்கு மிக முக்கிய பலன்கள் கிடைக்கப்போகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

  1. மேஷம்: பணம் மற்றும் குடும்பத்தின் அதிபதியாக கருதப்படும் சுக்கிரன், தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப விவகாரங்கள் மேம்படும். பெரும்பாலான குடும்ப பிரச்சினைகள் எவ்வித பாகுபாடுமின்றி தீர்க்கப்படும். பணம் தாராளமாக புழங்கும். விவாகரத்து வழக்குகள் சமரசம் மூலம் தீர்க்கப்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் அமையும். உங்களின் வாழ்க்கைத் துணை பல வழிகளில் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். சொத்துக்கள் வாங்கும் சூழல் உண்டாகும். பங்குகள் மற்றும் முதலீடுகள் மிகவும் லாபகரமாக இருக்கும்.
  2. ரிஷபம்: இந்த ராசியின் அதிபதியாக உள்ள சுக்கிரன் தன்னுடைய ராசியில் சஞ்சாரம் செய்வது பல பலன்களை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் திருமண வாழ்க்கையில் ஏற்படும் எந்த விதமான பிரச்சினைகளும் பேசி தீர்க்கப்படும். விவாகரத்து வழக்குகள் ரத்தாகும். திருமண வாழ்க்கை நித்திய பேரின்பத்தின் விளைவு போல இருக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் எதிர்பாராத சொத்துக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். அதிக பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். காதல் விவகாரங்கள் வெற்றிகரமாக அமையும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும்.
  3. கடகம்: லாப ஸ்தானத்தின் அதிபதியாக இந்த ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார், இதனால் நிச்சயமாக நல்ல பொருளாதார பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் காதல் அல்லது திருமண வாழ்க்கை அமையும். வாழ்க்கைத் துணை மூலம் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். வருமானம் கணிசமாக அதிகரிக்கும் குடும்பத்தின் மற்றும் தனிப்பட்ட நிதி சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கு வாய்ப்பு உள்ளது. குழந்தை பாக்கியம் கிட்டும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.
  4. கன்னி: இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட அதிபதியான சுக்கிரன் திகழ்கிறார். அதனால் உங்களின் காதல் முயற்சிகளில் பெரும் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் குடியேறிய ஒருவருடன் திருமண உறவு அமையும். வெளிநாட்டு வருமானத்தை அனுபவிக்க காலம் கைகூடும். குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தம்பதியினரிடையே நட்பு, நெருக்கம் பரஸ்பரம் அதிகரிக்கும். தன யோகங்கள் மற்றும் ராஜ யோகங்கள் நிச்சயமாக உண்டாகும்.
  5. விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு அமையும். வெளிநாட்டில் வேலை கிடைத்து செட்டில் ஆவதற்கான வாய்ப்பு அமையும். காதல் முயற்சிகளில் பெரும் வெற்றி கிடைக்கும். விவாகரத்து வழக்குகள் ரத்தாகலாம். திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் வேறுபாடுகள் நீங்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். குழந்தை பேறு தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும்.
  6. மகரம்: சுக்கிரன் இந்த ராசிக்கு மிகவும் சாதகமான கிரகமாகும். இது ஐந்தாவது வீட்டில் சஞ்சரிக்கிறது. அதனால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழி கிடைக்கும். வாழ்க்கையில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அவை நீங்கும். குடும்ப வாழ்க்கை உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். குழந்தைகள் பேறு தொடர்பான செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. உயர் பதவியில் உள்ள குடும்பத்துடன் திருமணம் நடக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் நன்றாக வளர்வார்கள். பங்குகள், முதலீடுகள் போன்றவற்றால் பெரிதும் பயனடைவீர்கள்.

(ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us