AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புகைபிடிக்கத் தடையிருந்தும் விமானங்களில் சாம்பல் தட்டு ஏன்?

விமான கழிப்பறைகளில் புகைபிடிக்கக் கூடாது என்ற கடுமையான விதிமுறைகள் அமலில் இருந்தாலும், அங்கு சிறிய உலோக சாம்பல் தட்டுகள் (Ashtrays) பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் புகைபிடிப்பதற்காக இந்த வசதி செய்யப்படவில்லை, மாறாக விமான பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே இது வைக்கப்பட்டுள்ளது. யாராவது விதிமுறையை மீறி புகைபிடித்தால், அதைக் பாதுகாப்பாக அணைப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Sep 2026 14:53 PM IST
விமான கழிப்பறைகளில் புகைபிடிக்கக் கூடாது என்ற கடுமையான விதிமுறைகள் அமலில் இருந்தாலும், அங்கு சிறிய உலோக சாம்பல் தட்டுகள் (Ashtrays) பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் புகைபிடிப்பதற்காக இந்த வசதி செய்யப்படவில்லை, மாறாக விமான பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே இது வைக்கப்பட்டுள்ளது. யாராவது விதிமுறையை மீறி புகைபிடித்தால், அதைக் பாதுகாப்பாக அணைப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ஆணையத்தின் பாதுகாப்பு விதிகளின்படி இந்த சாம்பல் தட்டுகள் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

1 / 5
ஒருவர் தெரியாமல் அல்லது விதியை மீறி கழிப்பறையில் புகைபிடித்தால், அதை குப்பைத் தொட்டியில் போடுவது மிகப்பெரிய தீ விபத்துக்கு வழிவகுக்கும். குப்பைத் தொட்டியில் உள்ள காகிதங்கள் மற்றும் பிற கழிவுகள் மிக எளிதாகத் தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்த்து, அணைக்கப்படாத சிகரெட்டை பாதுகாப்பான இடத்தில் போடுவதற்காகவே இந்தச் சாம்பல் தட்டு உதவுகிறது. எனவே, இது பயணிகள் வசதிக்காக அல்லாமல் ஒரு முக்கியமான தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

2 / 5
சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பான அமெரிக்காவின் எஃப்.ஏ.ஏ (FAA) விதிகளின்படி, ஒவ்வொரு விமான கழிப்பறையிலும் அகற்றக்கூடிய சாம்பல் தட்டுகள் இருப்பது கட்டாயமாகும். சாம்பல் தட்டு இல்லாத பட்சத்தில், அந்த விமானம் பறப்பதற்கு அனுமதி மறுக்கப்படும் அளவுக்கு இது ஒரு முக்கியமான விதியாகும். கழிப்பறைகளில் சாம்பல் தட்டுகளுடன் புகை கண்டறியும் கருவிகளும் (Smoke Detectors) பொருத்தப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக யாராவது சிகரெட் பிடித்தால் உடனடியாக எச்சரிக்கை மணி ஒலிக்கும் வகையில் இந்த அமைப்பு உள்ளது.

3 / 5
1973-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸ் சென்ற வேரிக்போயிங் (Varig Boeing 707) விமானத்தின் கழிப்பறையில் ஏற்பட்ட தீ விபத்தே இந்த கடுமையான விதிமுறைகளுக்குக் காரணமாக அமைந்தது. அந்தப் பயங்கர விபத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டபோதும், 120 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆய்வுகளின் முடிவில் பயணியின் சிகரெட் நெருப்பே தீ விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகே விமான கழிப்பறைகளில் சாம்பல் தட்டு வைப்பதும், தீ தடுப்பு நடவடிக்கைகளும் கட்டாயமாக்கப்பட்டன.

4 / 5
இந்தியாவில் உள்ள இண்டிகோ (IndiGo) போன்ற உள்நாட்டு மற்றும் அனைத்து சர்வதேச விமானங்களிலும் புகைபிடிப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் சாம்பல் தட்டு இருக்கிறது என்பதற்காக எவரும் புகைபிடிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதைப் பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும். விதியை மீறி புகைபிடிப்பது கடுமையான சட்டக் குற்றமாகும் என்பதுடன் மிகப்பெரிய அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும். சுருக்கமாகக் கூறின், விமானத்தில் உள்ள சாம்பல் தட்டு என்பது புகைபிடிப்பதற்கான அனுமதி அல்ல, மாறாக விபத்தைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பு கவசமாகும்.

5 / 5
Follow Us