Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வசந்த பஞ்சமி 2026: உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறக்க.. வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி?

Vasant Panchami 2026: வசந்த பஞ்சமி, சரஸ்வதி பூஜை அல்லது ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைக்கப்படும் இந்த நாள், இந்தியா முழுவதும் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை ஜனவரி 23 அன்று நடைபெறுகிறது. இது குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் புதிய கல்விப் பயணத்தைத் தொடங்குவோர். இது மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Jan 2026 15:04 PM IST
சரஸ்வதி தேவி வெள்ளைச் சேலை அணிந்து, தாமரை மலர்மீது அமர்ந்து வீணை வாசிப்பதாகச் சித்தரிக்கப்படும் அறிவுத் தெய்வமாகும். அவர் அறிவு, கல்வி, இசை, கலை, ஞானம் ஆகியவற்றின் அதிபதி. சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என்ற த்ரிமூர்த்தி சக்திகளில் ஒருவர்; இந்த த்ரிமூர்த்தி, பிரம்மா -விஷ்ணு - மகேஷ்வரர்களின் படைப்பு, பாதுகாப்பு, லயம் ஆகிய செயல்களுக்கு துணைபுரிகிறார்கள் என புராணங்கள் கூறுகின்றன. அப்படி, சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்தும், மஞ்சள் நிற மலர் மாலை சூட்டியும் வழிபடவேண்டும். கல்வி, ஞானம், கலைகளின் கடவுளாக கருதப்படும் சரஸ்வதி தேவியின் அவதார நாளையே வசந்த பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது.

1 / 5
பஞ்சமி திதி ஜனவரி 23 காலை 02:28 மணிக்கு தொடங்கி, ஜனவரி 24 காலை 01:46 மணிவரை நீடிக்கிறது. வசந்த பஞ்சமியின் நடுப்பகல் கணம் 12:33 PM ஆகும். பூஜை முகூர்த்தம் காலை 7:13 AM முதல் 12:33 PM வரை - இந்த நேரத்தில் பஞ்சமி திதியும் முன்பகல் காலமும் இணைந்திருப்பதால் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் காலைவேளையில் பூஜை நடத்துவது வழக்கம். பல இடங்களில், குழந்தைகளுக்கு முதல் எழுத்து (வித்யாரம்பம்) கற்பிப்பதும் இந்த நாளில் நடைபெறும்.

2 / 5
பஞ்சமி திதி மாதந்தோறும் இரண்டு முறை வரும். இதில் தை அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதியானது 'வசந்த பஞ்சமி' என்று போற்றப்படுகிறது. வசந்த பஞ்சமி வழிபாடு தமிழ்நாட்டில் மிகக்குறைவு என்றாலும், வட மாநிலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சரஸ்வதியை வழிபடும் தினமாக, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி உள்ளது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் கடைசி மூன்று நாட்களில்தான் சரஸ்வதியை போற்றி கொண்டாடுவார்கள்.

3 / 5
வசந்த பஞ்சமி தினத்தில் மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்தும், மஞ்சள் நிற மலர் மாலை சூட்டியும், லட்டு போன்ற மஞ்சள் நிற நைவேத்தியங்கள் படைத்தும் வழிபடுகிறார்கள். பூஜையில் வைக்கப்படும் பிள்ளையாரையும் மஞ்சளில் பிடித்துதான் வைப்பார்கள். பஞ்சாப் பகுதிகளில் இந்த காலகட்டத்தில்தான் கடுகு செடியில் மஞ்சள் நிறப் பூக்கள் பரவலாக பூத்துக் குலுங்கும். அதனை அடிப்படையாகக் கொண்டே, அனைத்திலும் மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது.

4 / 5
வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி? - வீட்டில் சரஸ்வதி பூஜை செய்யும்போது, பூஜை இடத்தைச் சுத்தம் செய்து சரஸ்வதி தேவியின் சிலை அல்லது படத்தை வைக்க வேண்டும். புத்தகங்கள், இசைக்கருவிகள், படிப்புப் பொருட்கள் அருகில் வைத்து, தீபம் ஏற்றி “ஓம் சரஸ்வதி நமஹ” போன்ற மந்திரங்களை ஜபிக்கலாம். மஞ்சள் அல்லது வெள்ளை மலர்கள், இனிப்புகள், பழங்கள் நிவேதனமாக அர்ப்பணித்து ஆரத்தி செய்யப்படுகிறது. மஞ்சள் அல்லது வெள்ளை உடைகள் அணிவது அறிவு, தூய்மை, செழிப்பு ஆகியவற்றின் சின்னமாகக் கருதப்படுகிறது.

5 / 5