AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026ன் முதல் சனி பிரதோஷம்.. சனி தோஷம் குறைய.. இதை மட்டும் செய்ய தவறி விடாதீர்கள்!!

Sani Pradosham 2026: சனி பிரதோஷ நாளில் சனிபகவான் தானே சிவபெருமானை வில்வ இலைகளால் அர்ச்சித்து, அபிஷேகம் செய்து வழிபடுவதாக புராணங்கள் கூறுகின்றன. நந்தி தேவரின் அருகில் ஈசான்ய திசையில் நின்று சனிபகவான் சிவ தரிசனம் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே, பல கோவில்களில் பிரதோஷ தீபாராதனை ஈசான்ய திசையில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 07 Feb 2026 14:07 PM IST
சிவபெருமானின் பேரருளைப் பெறுவதற்கான மிகச் சிறந்த காலங்களில் ஒன்று பிரதோஷ நேரம். அதிலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. இதையே சனி பிரதோஷம் என்று அழைக்கிறோம். இந்த பிரதோஷம் சிவராத்திரியுடன் இணைந்து வருவது அரிதானதும், மிகுந்த பலன் தருவதுமான புனித நிகழ்வாகக் கருதப்படுகிறது.

1 / 5
புராணக் கதைகளின்படி, கைலாசத்தில் தவம் செய்து கொண்டிருந்த சிவபெருமானை ஒரு தருணத்தில் சனிபகவான் தீண்டினார். தனது தர்மத்தை மீறியதாக எண்ணி சனிபகவான் வருந்தியபோது, பரமேஸ்வரன் அவருக்கு அருள்பாலித்து, “என் பிரதோஷ காலத்தில் என்னை வழிபடும் அடியார்களை நீ எக்காலத்திலும் துன்புறுத்தக் கூடாது” என்று உத்தரவிட்டார். அதனால்தான், சனி திசை, சனி தோஷம், அஷ்டம சனி, கண்ட சனி போன்ற எந்த நிலையிலும், சனி பிரதோஷத்தில் சிவனை வழிபடுவோருக்கு சனிபகவானின் தீங்கு ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

2 / 5
சனி பிரதோஷத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள்: சனி பிரதோஷ நாளில் சிவபெருமானை மனதார வழிபட்டால், வாழ்க்கையில் ஏற்படும் பல தடைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, சிவலிங்கத்திற்கு பால், தயிர், தேன், நெய் கொண்டு அபிஷேகம், வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை, “ஓம் நம சிவாய” மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தல், சனிக்கிழமை என்பதால் அன்னதானம் செய்வது, ஏழைகள், முதியவர்கள், தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்தல் இவை அனைத்தும் சனிபகவானின் அருளை ஈர்க்கும் வழிகளாக கருதப்படுகின்றன.

3 / 5
சனி பிரதோஷத்தின் பலன்கள்: சனி பிரதோஷத்தை முறையாக அனுசரிப்பவர்களுக்கு, சனி தோஷம் குறையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகள் தீரும். திருமண தடை நீங்கும், தொழில், வேலை, பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் அமைதி நிலவும், சந்ததி வளர்ச்சி உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

4 / 5
சனிபகவான் சிவபக்தியில் முழுமையாக லயித்தவர் என்பதால், சிவனை உண்மையுடன் வழிபடும் அடியார்களை அவர் ஒருபோதும் துன்புறுத்த மாட்டார். மாறாக, அவர்களுக்கு அருள் வழங்கும் காவலனாகவே இருப்பார். சனி பிரதோஷம் என்பது பயந்து ஒதுங்க வேண்டிய நாள் அல்ல. மாறாக, சிவபெருமானின் கருணையும், சனிபகவானின் அனுகிரகமும் ஒருசேர கிடைக்கும் அரிய வாய்ப்பு. சிவனை உண்மையான மனதுடன் வழிபடும் பக்தர்களுக்கு, பாதுகாவலனாக இருப்பார்.

5 / 5
Follow Us