AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

படுத்த உடனே பஞ்சாய் தூங்க வைக்கும் எளிய வழிகள்!

Healthy Sleep Tips: இன்றைய சூழலில் செல்போன் பயன்பாட்டைக் குறைத்து இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை நன்றாகத் தூங்குவது ஜீரண மற்றும் சுவாச மண்டலங்களைச் சீராக்கி அல்சர் போன்ற நோய்களிலிருந்து நம்மைக் பாதுகாக்கும். படுக்கைக்குச் சென்றும் தூக்கம் வராத பட்சத்தில் நமக்குத் பிடித்தமான புத்தகங்களை வாசிப்பது மனதை அமைதிப்படுத்தித் தானாகவே நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்க உதவும்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 11 Jun 2026 18:33 PM IST
இன்றைய இளைய தலைமுறையினர் இரவில் செல்போன் மற்றும் லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் தூக்கத்தை இழக்கின்றனர். இதனால் கண் எரிச்சல் மற்றும் கடுமையான தூக்கமின்மை போன்ற பல்வேறு ஆரோக்கியக் குறைபாடுகள் உடலில் ஏற்பட்டு அன்றாட வாழ்க்கையில் பெரும் அவஸ்தையைத் தருகிறது. எனவே, இரவில் சீக்கிரமாக தூங்கச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்வது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

1 / 5
மனித உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை கட்டாயம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் நம் உடலின் முக்கிய உறுப்புகளான ஜீரண மண்டலமும் மற்றும் சுவாச மண்டலமும் சீராக இயங்கி நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் நாம் நன்றாகத் தூங்குவதால் நம்முடைய நுரையீரலும் சிறுகுடலும் தங்களுக்குரிய சக்தியைப் பெற்று மிகச் சிறப்பாகச் செயல்படத் தொடங்கும்.

2 / 5
பொதுவாக இரவில் படுக்கைக்குச் சென்ற பின் நீண்ட நேரமாகியும் உங்களுக்குத் தூக்கம் வராமல் இருந்தால் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம். நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு உங்களுக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களை வாசிப்பதால் உங்கள் மனம் அமைதி அடைந்து தானாகவே தூக்கம் வரத் தொடங்கும். புத்தக வாசிப்பு என்பது மன அழுத்தத்தைக் குறைத்து இரவில் உங்களுக்கு ஒரு நிம்மதியான மற்றும் சுகமான தூக்கத்தைப் பெற்றுத் தர நிச்சயம் வழிவகுக்கும்.

3 / 5
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்னதாக உடலுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் சில ஆரோக்கியமான பானங்களை நாம் அருந்தலாம். உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடிப்பது நல்ல பலனைத் தரும். அல்லது தூங்குவதற்கு முன் தேநீர் (Tea) குடிப்பது கூட ஒருவருக்கு நல்ல தூக்கம் வருவதற்குச் சிறந்த முறையில் உதவி செய்யும்.

4 / 5
தினமும் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக ஒரு முறை குளியல் போடுவது உங்கள் உடலின் வெப்பத்தைத் தணித்து ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும். அத்துடன் தூங்கச் செல்வதற்கு முன் சில நிமிடங்கள் எளிய மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வதும் உடலுக்கு மிகுந்த நன்மைகளைத் தரும். இந்த மூச்சுப் பயிற்சி உங்களது மனதை அமைதிப்படுத்தி தூக்கமின்மைப் பிரச்சினையை உங்களை விட்டு முழுமையாக விலகி ஓடச் செய்யும்.

5 / 5
Follow Us