AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கண்ணை அழகாக்கும் லென்ஸே ஆபத்தாக மாறுமா..?

காண்டாக்ட் லென்ஸை நீண்ட நேரம் அணிவது, சுத்தமாகப் பராமரிக்காதது மற்றும் காலாவதியான சொல்யூஷனை பயன்படுத்துவது கண் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். லென்ஸை அணிந்தபடி தூங்குவது, குளிப்பது அல்லது நீச்சல் செய்வது போன்றவற்றையும் தவிர்ப்பது முக்கியம். கண்களில் சிவத்தல், வலி அல்லது பார்வை மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக லென்ஸ் பயன்பாட்டை நிறுத்தி கண் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Sep 2026 07:00 AM IST
காண்டாக்ட் லென்ஸை நீண்ட நேரம் தொடர்ந்து அணிவது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கருவிழிக்கு காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறைய வாய்ப்புள்ளது.
இதனால் கண்களில் வறட்சி, எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
மருத்துவர் பரிந்துரைக்கும் நேர வரம்பிற்குள் மட்டுமே லென்ஸை பயன்படுத்துவது அவசியம்.

காண்டாக்ட் லென்ஸை நீண்ட நேரம் தொடர்ந்து அணிவது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். கருவிழிக்கு காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் கண்களில் வறட்சி, எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மருத்துவர் பரிந்துரைக்கும் நேர வரம்பிற்குள் மட்டுமே லென்ஸை பயன்படுத்துவது அவசியம்.

1 / 5
லென்ஸை கழற்றுவதற்கு முன்பும் அணிவதற்கு முன்பும் கைகளை சோப்பால் நன்றாகக் கழுவ வேண்டும்.
பயன்படுத்திய லென்ஸை உரிய க்ளீனிங் சொல்யூஷன் மூலம் சுத்தம் செய்து பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
லென்ஸ் பெட்டியில் இருக்கும் பழைய திரவத்தை மீண்டும் பயன்படுத்தாமல் புதிய திரவத்தை ஊற்றுவது நல்லது.
காலாவதியான அல்லது முறையாக பராமரிக்கப்படாத சொல்யூஷனை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

லென்ஸை கழற்றுவதற்கு முன்பும் அணிவதற்கு முன்பும் கைகளை சோப்பால் நன்றாகக் கழுவ வேண்டும். பயன்படுத்திய லென்ஸை உரிய க்ளீனிங் சொல்யூஷன் மூலம் சுத்தம் செய்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். லென்ஸ் பெட்டியில் இருக்கும் பழைய திரவத்தை மீண்டும் பயன்படுத்தாமல் புதிய திரவத்தை ஊற்றுவது நல்லது. காலாவதியான அல்லது முறையாக பராமரிக்கப்படாத சொல்யூஷனை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

2 / 5
காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருசக்கர வாகனம் அல்லது பேருந்தில் பயணிக்கும்போது கண்களைப் பாதுகாக்க கண்ணாடி அணிவது உதவும்.
லென்ஸுடன் தூசி கண்களுக்குள் சென்றால் எரிச்சல் மற்றும் கருவிழி பாதிப்பு ஏற்படலாம்.
காண்டாக்ட் லென்ஸ் அணிந்தபடி முகம் கழுவுவதையும் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக நீச்சல் குளத்தில் லென்ஸுடன் செல்வது கிருமித்தொற்று அபாயத்தை அதிகரிக்கலாம்.

காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருசக்கர வாகனம் அல்லது பேருந்தில் பயணிக்கும்போது கண்களைப் பாதுகாக்க கண்ணாடி அணிவது உதவும். லென்ஸுடன் தூசி கண்களுக்குள் சென்றால் எரிச்சல் மற்றும் கருவிழி பாதிப்பு ஏற்படலாம். காண்டாக்ட் லென்ஸ் அணிந்தபடி முகம் கழுவுவதையும் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீச்சல் குளத்தில் லென்ஸுடன் செல்வது கிருமித்தொற்று அபாயத்தை அதிகரிக்கலாம்.

3 / 5
காண்டாக்ட் லென்ஸ் அணிந்தபடியே தூங்குவது கண்களுக்கு தேவையான ஈரப்பதம் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதை பாதிக்கலாம்.
தூங்கும்போது தலையணை அல்லது கைகளால் கண்களில் அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதனால் கருவிழியில் காயம் அல்லது வேறு கண் பிரச்சினைகள் உருவாகலாம்.
எனவே தூங்குவதற்கு முன் லென்ஸை கட்டாயம் கழற்ற வேண்டும்.

காண்டாக்ட் லென்ஸ் அணிந்தபடியே தூங்குவது கண்களுக்கு தேவையான ஈரப்பதம் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதை பாதிக்கலாம். தூங்கும்போது தலையணை அல்லது கைகளால் கண்களில் அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் கருவிழியில் காயம் அல்லது வேறு கண் பிரச்சினைகள் உருவாகலாம். எனவே தூங்குவதற்கு முன் லென்ஸை கட்டாயம் கழற்ற வேண்டும்.

4 / 5
கண்களில் சிவத்தல், வலி, அதிகமான கூச்சம் அல்லது பார்வையில் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தக் கூடாது.
இத்தகைய அறிகுறிகள் நீடித்தால் லென்ஸ் அணிவதை நிறுத்தி கண் மருத்துவரை அணுகுவது அவசியம்.
முறையாக பராமரிக்கப்படாத லென்ஸ்கள் மூலம் சில தீவிரமான கிருமித்தொற்றுகளும் ஏற்படலாம்.
மேலும், லென்ஸின் பயன்பாட்டு காலம் முடிந்த பிறகும் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கண்களில் சிவத்தல், வலி, அதிகமான கூச்சம் அல்லது பார்வையில் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தக் கூடாது. இத்தகைய அறிகுறிகள் நீடித்தால் லென்ஸ் அணிவதை நிறுத்தி கண் மருத்துவரை அணுகுவது அவசியம். முறையாக பராமரிக்கப்படாத லென்ஸ்கள் மூலம் சில தீவிரமான கிருமித்தொற்றுகளும் ஏற்படலாம். மேலும், லென்ஸின் பயன்பாட்டு காலம் முடிந்த பிறகும் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

5 / 5
Follow Us