AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026 மாசி மகம் விரதமுறை.. செய்ய வேண்டியவையும்.. தவிர்க்க வேண்டியவையும்..

Masi magam 2026: கும்பகோணம் மகாமகக் குளம் மற்றும் ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் இந்த நாளுக்கு மிகவும் புகழ்பெற்றது. அங்கிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள நவ நதிகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 01 Mar 2026 14:57 PM IST
மாசி மாதத்தில் மக நட்சத்திரமும், பௌர்ணமியும் இணையும் நாள் மாசி மகம். இது பாவங்களுக்கு விமோசனம் தரும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. இறைவன் பஞ்சபூதங்களிலும் நிறைந்திருக்கிறார். மாசி மகத்தன்று நீர்நிலைகளில் இறைவனை எழுந்தருளச் செய்து வழிபடுவது அதிவிசேஷமானது. இந்த நாளில் நதி நீராடல் (புனித நீராடல்) செய்வது மிகவும் விசேஷமானது; இது ஒருவரின் சகல பாவங்களையும் போக்கும்.

1 / 5
பார்வதி தேவி வழிபாடு: பார்வதி தேவி தக்ஷனின் மகளாகச் சங்கு வடிவில் அவதரித்த நாள். கணவன்-மனைவி ஒற்றுமை மற்றும் திருமணத் தடை நீங்க, மாசி மகம் அன்று மாலை 6:30 மணிக்கு மேல் அம்பிகைக்குப் பட்டு வஸ்திரம் மற்றும் மல்லிகை மலர்கள் சாத்தி வழிபட வேண்டும். முருகப்பெருமான் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்த மாதம் இது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் அன்று நாள் முழுவதும் உபவாசம் (விரதம்) இருந்து, மாலை 6:30 மணிக்கு மேல் முருகன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். தங்கள் வயதுக்கு ஏற்ற எண்ணிக்கையில் கோவிலைச் சுற்றி வந்து, ஒரு 'செப்பு வேல்' வாங்கிப் பிரார்த்தனை செய்து பின் அதனை உண்டியலில் போட வேண்டும்.

2 / 5
கல்வி மற்றும் ஆராய்ச்சி: பி.எச்.டி (PhD) போன்ற உயர் கல்வி பயில்பவர்கள் இந்த நாளில் முருகனை வணங்கித் தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.  நிலம், வீடு தொடர்பான சிக்கல்கள் அல்லது நீதிமன்ற வழக்குகள் இருப்பவர்கள், வராகமூர்த்தி அவதரித்த இந்த நாளில் பெருமாள் கோவிலில் உள்ள வராகரை வழிபட வேண்டும். மாணவர்கள் சரஸ்வதி தேவிக்குத் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் கல்வி ஞானம் பெருகும்.

3 / 5
செய்ய வேண்டியவை: பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நீராடுவது சிறப்பு; புனித நதிகளை நினைத்து வீட்டில் நீராடலாம். குலதெய்வத்திற்குப் பூச்சூட்டி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, முன்னோர்களின் பெயரைச் சொல்லிச் செடிகளுக்கு ஊற்றிப் பிரார்த்தனை செய்யலாம். மாலையில் பூஜை அறையிலும், நிலைவாசல் படியிலும் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தைத் தரும். பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, பழங்கள் அல்லது பறவைகளுக்குத் தானியங்கள் வழங்கலாம். வீட்டில் இருக்கும் முதியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது, பித்ரு வழிபாட்டின் தொடக்கமாகும்

4 / 5
தவிர்க்க வேண்டியவை: வீட்டில் அசைவ உணவுகளைச் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது; இது முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதைக்குறைவாகக் கருதப்படுகிறது. மனதை ஒருநிலைப்படுத்த வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத சாத்வீக உணவுகளே சிறந்தது. ஆண்கள் முடி வெட்டுவது, முகச்சவரம் செய்வது அல்லது நகம் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். விசேஷ விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்த்து, சாதாரண தண்ணீரில் குளிக்க வேண்டும். மது, புகை போன்ற பழக்கங்கள் பித்ரு தோஷத்தை அதிகமாக்கும் என்பதால் அவற்றை அறவே தவிர்க்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் பகலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

5 / 5
Follow Us