நட்சத்திர ஹோட்டல்களில் சமையல் கலைஞர்கள் ஏன் வெள்ளை தொப்பி அணிகிறார்கள்? காரணம் என்ன?
The History and Purpose of the Chef’s Hat : நட்டத்திர உணவகங்களில் சமையல் கலைஞர்கள் உயரமான வெள்ளை தொப்பி அணிந்திருப்பதை நாம் கவனித்திருப்போம். அவர்கள் வெள்ளை தொப்பி அணிவதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் (Restaurant) பல்வேறு உணவுகளைத் தயாரிக்கும் சமையல் கலைஞர்கள் (Chef) முறையாக படித்து அந்த வேலைக்கு வந்திருக்கிறார்கள். சமையல்காரராக இருப்பதும் ஒரு தொழில்தான். குக்கிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் (Hotel Management) துறைகளில் தேர்ச்சி பெறுவது இந்தத் தொழிலுக்கு மிகவும் முக்கியமானது. அதைத் தவிர, சமையல்காரர்கள் வேலை செய்யும் போது சில விதிகளையும் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக சமையல் கலைஞர்கள் பலரும் மிகவும் உயரமான வெள்ளைத் தொப்பியை அணிந்து சமையல் செய்வதை நாம் பார்த்திருப்போம். குறிப்பாக சில நட்சத்திர உணவகங்களில் சமையல் கலைஞர்கள் வெள்ளை தொப்பி அணிந்து சமைக்கிறார்கள். அதற்கான காணம் என்ன தெரியுமா?
சமையல் கலைஞர்கள் ஏன் வெள்ளை தொப்பி அணிகிறார்கள்?
சமையல்காரர்கள் ஏன் வெள்ளை தொப்பிகளை அணிகிறார்கள்? சமையல்காரர்கள் அணியும் வெள்ளைத் தொப்பி சமையல் கலையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதை அணிவது வெறும் பாரம்பரியம் மட்டுமல்ல, அது ஒரு ஃபேஷன். இதற்குப் பின்னால் பல குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன. அதாவது… சமையல்காரர்கள் அணியும் இந்த வெள்ளைத் தொப்பி டோக் அல்லது டோக் பிளான்ச் என்று அழைக்கப்படுகிறது. 100 மடிப்புகள் கொண்ட ஒரு தொப்பி சமையல் திறமை மற்றும் நிபுணத்துவத்தைக் குறிக்கிறது. ஒட்டுமொத்தமாக, மடிப்புகளுடன் கூடிய இந்த உருளை வடிவ தொப்பியை சமையல்காரரின் தொழிலின் சின்னமாகக் கூறப்படுகிறது.
வெள்ளை தொப்பியின் வரலாறு
சமையல் கலைஞர்கள் டோக் பிளான்ச் அணியும் வழக்கம் 18 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் தோன்றியது. பிரபல சமையல் கலைஞர்மேரி-அன்டோயின் கேரம், செஃப் டோக் என்ற வெள்ளை கோட்டை அறிமுகப்படுத்தினார். கடந்த காலங்களில், பிரெஞ்சு சமையல்காரர்கள் காஸ்க் எ மேச் எனப்படும் ஸ்டாக்கிங் தொப்பியை அணிந்தனர். பின்னர், சமையலறை சுகாதாரம் தொடர்பான காரணங்களுக்காக அவர்கள் வெள்ளை நிற உடை அணியத் தொடங்கினர். அதன் பிறகு, சமையல்காரர்கள் திறமை மற்றும் தொழில்முறையைக் குறிக்க 18 அங்குல வெள்ளை தொப்பிகளை அணியத் தொடங்கினர்.
சுகாதார காரணங்களுக்காக வெள்ளை தொப்பி
சமையல்கலைஞர்கள் தொப்பி அணிவது பாரம்பரியத்திற்காக மட்டுமல்ல. அது ஒரு ஃபேஷன் ஸ்டேட்மென்ட். மேலும் சமைக்கும்போது பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைப் பராமரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. சமையலறை சுகாதார காரணங்களுக்காக சமையல்காரர்கள் இந்த உயரமான வெள்ளை தொப்பிகளை அணிவார்கள். இது முடி உணவில் சேருவதைத் தடுக்கிறது. தூய்மைக்கு சிறப்பு கவனம் செலுத்த அனுமதிக்கிறது. மற்றொரு காரணம், இந்த தொப்பிகள் வியர்வையை உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளன. சமைக்கும்போது உடல் சூடாகிறது. இது வியர்வைக்கு வழிவகுக்கிறது. எனவே, வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்ட இந்த தொப்பிகளை, சுகாதார காரணங்களுக்காக சமையல்காரர்கள் அணிகின்றனர். இது சமையல்காரர்கள் பணியில் தொழில்முறை மற்றும் ஒழுக்கத்தைப் பராமரிக்க உதவுகிறது.
இருப்பினும், இன்றைய காலகட்டத்தில், இந்த வெள்ளைத் தொப்பிகள் மரியாதையின் அடையாளமாகவே இருக்கின்றன. ஆனால் இன்று, சமையல்காரர்கள் தங்கள் பணிச்சூழலுக்கும் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் ஏற்ப பலவிதமான தலைக்கவசங்களை அணிகிறார்கள். இன்றைய சமையல்காரர்கள் டோக் பிளான்ச்களுடன் பெரெட்டுகள், பில்பாக்ஸ் தொப்பிகள் மற்றும் பேஸ்பால் தொப்பிகளை அணிவார்கள்.