AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூடாகும் பூமி, எகிறும் நோய்கள்: எல் நினோவால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து?

El Niño Effect: எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் தீவிர வெப்ப அலை மற்றும் சீரற்ற மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தட்பவெப்ப மாறுபாடுகளால் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் தொற்றுகளும், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் சுவாசப் பிரச்சனைகளும் தீவிரமடைந்து வருகின்றன.

சூடாகும் பூமி, எகிறும் நோய்கள்: எல் நினோவால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து?
உலக சுகாதார அமைப்புImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 13 Sep 2026 11:04 AM IST

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, எல் நினோ காலநிலை மாற்றம் இந்தியாவில் கடுமையான சுகாதார அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. பசிபிக் பெருங்கடலில் நிகழும் வெப்பநிலை மாற்றங்களால் மழைப்பொழிவு சீரற்று, தீவிர வெப்ப அலை உருவாகிறது. இதனால் ஏற்படும் தட்பவெப்பநிலை மாறுபாடு கொசுக்களின் இனப்பெருக்கத்தை அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வேகமாகப் பரவ வழிவகுக்கிறது. மேலும், கடுமையான வெயிலின் காரணமாக மக்களிடையே நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்ப மயக்கம் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கின்றன. ஏற்கனவே இதயம் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு இந்த காலநிலை மாற்றம் கூடுதல் ஆபத்தை விளைவிக்கிறது. நீர் பற்றாக்குறை மற்றும் பயிர் இழப்பு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயமும் நிலவுகிறது.

இந்தியாவிற்கு அதிகரிக்கும் சுகாதார அச்சுறுத்தல் என WHO தகவல்

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் தெற்காசிய நாடுகளுக்கு பெரும் சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியா “மிக உயர்ந்த ஆபத்து மண்டலத்தில்” வைக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்தல், கடுமையான வெப்ப அலை மற்றும் எதிர்பாராத காலநிலை மாற்றங்கள் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Also Read: ஒரு போட்டோதானேன்னு அலட்சியமா இருக்காதீங்க…  காத்திருக்கும் ஆபத்து!

தொற்ற நோய்களின் தாக்கம் மற்றும் கொசுக்களின் பெருக்கம்

எல் நினோ தாக்கத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு மற்றும் சீரற்ற மழைப்பொழிவு ஆகியவை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குகின்றன. குறிப்பாக டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களின் பரவல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் டெங்கு மற்றும் மலேரியா பாதிப்புகள் பல மடங்கு உயர்ந்திருப்பது இதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

தீவிர வெப்பம் மற்றும் இதர சுகாதார பாதிப்புகள்

வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாவதால் மக்களுக்கு வெப்ப மயக்கம் (Heatstroke), நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன. மேலும், இது இதயம், சிறுநீரகம் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ள நோயாளிகளின் பாதிப்பை மேலும் தீவிரமாக்கும். பயிர் விளைச்சல் குறைவு மற்றும் நீர் பற்றாக்குறை ஆகியவற்றால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தொற்றுநோய்கள் அதிகரிக்கும் அபாயமும் நிலவுகிறது. எனவே, பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us