Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pongal Recipe: பொங்கலுக்கு ஆரோக்கியத்தில் கவனமா? அப்போ! இந்த ஓட்ஸ் பொங்கல் ட்ரை பண்ணுங்க!

Oats Pongal Recipe: நீங்கள் ஆரோக்கியமான பொங்கலை (Healthy Pongal) சாப்பிட விரும்பினால், ஓட்ஸ் பொங்கலை முயற்சிக்கலாம். வறுத்த ஓட்ஸ் பாசிப்பருப்புடன் சமைக்கப்பட்டு சாப்பிட சுவையாக இருக்கும். இதில் கீரையும் சேர்க்கப்படுவதால் உங்கள் ஆரோக்கியத்தில் பலனை கொடுக்கும். இப்படியான சூழ்நிலையில், ஓட்ஸ் பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்.

Pongal Recipe: பொங்கலுக்கு ஆரோக்கியத்தில் கவனமா? அப்போ! இந்த ஓட்ஸ் பொங்கல் ட்ரை பண்ணுங்க!
ஓட்ஸ் பொங்கல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Jan 2026 19:07 PM IST

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை (Pongal Festival) கொண்டாடப்பட இருக்கிறது. இதுபோன்ற நல்ல நாட்களில் மக்கள் சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட அதிகளவிலான இனிப்பு உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். இது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அந்தவகையில், நீங்கள் ஆரோக்கியமான பொங்கலை (Healthy Pongal) சாப்பிட விரும்பினால், ஓட்ஸ் பொங்கலை முயற்சிக்கலாம். வறுத்த ஓட்ஸ் பாசிப்பருப்புடன் சமைக்கப்பட்டு சாப்பிட சுவையாக இருக்கும். இதில் கீரையும் சேர்க்கப்படுவதால் உங்கள் ஆரோக்கியத்தில் பலனை கொடுக்கும். இப்படியான சூழ்நிலையில், ஓட்ஸ் பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பொங்கலுக்கு இன்னும் ரெடி இல்லையா..? இப்படி டக்கென்று வீட்டை அலங்காரம் செய்யலாம்!

ஓட்ஸ் பொங்கல்:

தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ் – 1 கப்
  • பாசிப்பருப்பு – 1/2 கப்
  • முருங்கை கீரை – 1 கப்
  • முந்திரி பருப்பு – 4 முதல் 5
  • இஞ்சி – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – 1 1/2 கப்
  • சீரகம் – 1/2 ஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
  • பெருங்காயம் – 1/4 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • நெய் – 3 ஸ்பூன்

ALSO READ: தமிழ்நாடு ஸ்பெஷல்! பொங்கலுக்கு முறுக்கு சாப்பிட ஆசையா? இதோ ரெசிபி!

ஓட்ஸ் பொங்கல் செய்வது எப்படி..?

  1. ஓட்ஸ் பொங்கல் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி, உடைத்த முந்திரி பருப்புகளைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  2. அதனுடன் கறிவேப்பிலை, மிளகு, சீரகம் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
  3. இப்போது பாசிப்பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும். கீரையைச் சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
  4. ஓட்ஸ் பொங்கலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக ஓட்ஸ் சேர்த்து கலக்கவும்.
  5. இறுதியாக தீயைக் குறைத்து சுமார் 4 நிமிடங்கள் வேகவிடவும்.
  6. மூடியை மூடி மேலும் 3 நிமிடங்கள் அப்படியே விடவும்.
  7. அவ்வளவுதான் தீயை அணைத்துவிட்டு பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  8. சாப்பிடுவதற்குமுன் வறுத்த முந்திரி பருப்புகளால் அலங்கரித்து, ஆரோக்கியமான ஓட்ஸ் பொங்கலை ருசிக்கலாம்.

நெய்வேத்திய பொங்கல்:

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – ஒரு கப்
  • பாசிப்பருப்பு – அரை கப்
  • வெல்லம் – அரை கப்
  • கெட்டியான பால் – 3 கப்
  • ஏலக்காய் தூள்
  • உலர்ந்த தேங்காய் துண்டுகள்
  • நெய் (தேவைக்கேற்ப)
  • முந்திரி பருப்பு – 20 துண்டுகள்
  • பாதாம் – 20
  • திராட்சை – சிறிது

தயாரிக்கும் முறை:

  1. அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி, தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அரிசி மற்றும் பருப்பை தண்ணீர் இல்லாமல் வடிகட்டவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் சேர்த்து தேங்காய் துண்டுகள், முந்திரி, பாதாம் மற்றும் திராட்சை ஆகியவற்றை ஒவ்வொன்றாக வறுக்கவும், ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். பின்னர் சிறிது நெய் சேர்த்து, தீயை அதிகரித்த பிறகு, அரிசி மற்றும் பருப்பை வறுக்கவும்.
  3. இதற்கிடையில், மற்றொரு அடுப்பில் ஒரு தடிமனான கிண்ணத்தை வைத்து பால் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் வறுத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறி நன்கு சமைக்கவும்.
  4. சிறிது மென்மையாக வெந்த பிறகு, சர்க்கரை அல்லது வெல்லப் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. கொதி வந்த பிறகு, ஒரு நெட்டி பானையில் வறுத்த உலர்ந்த தேங்காய் துண்டுகள், முந்திரி, பாதாம் மற்றும் திராட்சையைச் சேர்க்கவும். இறுதியாக, ஏலக்காய் பொடி மற்றும் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து வறுக்கவும்.