Food Recipe: விசேஷ நாட்களில் ஸ்வீட் விருந்து.. சூப்பரான பீட்ரூட் ஹல்வா செய்முறை!

Beetroot Halwa Recipe: கேரட், மைதா, கோதுமை உள்ளிட்ட பொருட்களை கொண்டு ஹல்வா செய்யலாம். ஆனால், அதேநேரத்தில் பீட்ரூட் (Beetroot) அல்வா பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா..? பீட்ரூட் ஹல்வா சுவையானது. உங்களுக்கு வித்தியாசமான ஹல்வாவை முயற்சி செய்யுங்கள். இதை உங்கள் குடும்பத்தினருடன் பரிமாறினால், அனைவருக்கும் நிச்சயமாக பிடிக்கும்.

Food Recipe: விசேஷ நாட்களில் ஸ்வீட் விருந்து.. சூப்பரான பீட்ரூட் ஹல்வா செய்முறை!

பீட்ரூட் ஹல்வா

Published: 

15 Nov 2025 17:04 PM

 IST

விசேஷ நாள்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பெரும்பாலும் மக்கள் இனிப்புகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். வீட்டில் இனிப்புகள் என்று பெயர் எடுத்தவுடன் கேசரி அல்லது ஹல்வா முதல் தேர்வாக இருக்கும். ஹல்வாவை எளிதாகவும், வீட்டில் கிடைக்கும் குறைந்தபட்ச பொருட்களை கொண்டே ஈசியாக செய்யலாம். அதன்படி, கேரட், மைதா, கோதுமை உள்ளிட்ட பொருட்களை கொண்டு ஹல்வா (Halwa) செய்யலாம். ஆனால், அதேநேரத்தில் பீட்ரூட் (Beetroot) அல்வா பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா..? பீட்ரூட் ஹல்வா சுவையானது. உங்களுக்கு வித்தியாசமான ஹல்வாவை முயற்சி செய்யுங்கள். இதை உங்கள் குடும்பத்தினருடன் பரிமாறினால், அனைவருக்கும் நிச்சயமாக பிடிக்கும்.

ALSO READ: கொங்குநாடு ஸ்டைலில் சூப்பர் டிஷ்! பள்ளிபாளையம் சிக்கன் இப்படி செய்து பாருங்க!

பீட்ரூட் ஹல்வா

தேவையான பொருட்கள்:

  • துருவிய பீட்ரூட்: 500 கிராம் (துருவியது)
  • சர்க்கரை: 1/2 கப் (சுவைக்கு ஏற்ப)
  • பால்: அரை லிட்டர்
  • நெய்: 4-5 டேபிள்ஸ்பூன்
  • ஏலக்காய் தூள்: 1/2 டீஸ்பூன்
  • ட்ரை ப்ரூட்ஸ்: முந்திரி, பாதாம், திராட்சை (பொடியாக நறுக்கியது)

ALSO READ: மண மணக்கும் மட்டன் தால்சா.. பிரியாணிக்கு இப்படி ஒரு சைடிஸா?

பீட்ரூட் ஹல்வா செய்வது எப்படி..?

  1. பீட்ரூட்டை கழுவி, தோலுரித்து, பின்னர் நன்றாக சீவி எடுத்துக்கொள்ளவும்.
  2. அடுத்ததாக, அடிப்பகுதி தடிமனாக கொண்ட ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை சூடாக்கவும். துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து, பச்சையாக மறையும் வரை 3-4 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
  3. பிப்போது ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து நன்கு கலக்கவும். தீயை குறைவாகவோ அல்லது மிதமாகவோ குறைத்து, பீட்ரூட்டை பாலில் போட்டு முழுமையாக மென்மையாகும் வரை சமைக்கவும். அடி பிடிக்காத படி, பால் மற்றும் பீட்ரூட்டை நன்றாக 15-20 நிமிடங்கள் கிளறவும்.
  4. பால் கிட்டத்தட்ட ஆவியாகி, பீட்ரூட் மென்மையாகும்போது, சுவைக்கு ஏற்பட​​சர்க்கரையைச் சேர்க்கவும். இந்த கலவை நன்றாக உருகும்போது சற்று மெல்லியதாக மாறும். அது கெட்டியாகி வாணலியின் பக்கவாட்டில் இருந்து வெளியேறும் வரை தொடர்ந்து கிளறவும்.
  5. இப்போது, சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்கு கலந்து 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
  6. மீதமுள்ள 1-2 தேக்கரண்டி நெய்யை ஒரு தனி சிறிய வாணலியில் சூடாக்கவும். முந்திரி, பாதாம் மற்றும் திராட்சையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  7. அடுத்ததாக வறுத்த ட்ரை ப்ரூட்ஸ்களை ஹல்வாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  8. அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் ஹல்வா பரிமாற தயார்.
  9. இப்போது, நறுக்கிய பிஸ்தா மற்றும் பாதாம் போன்றவற்றை ஹல்வா மீது அலங்கரிக்கலாம். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் வீட்டிலேயே பீட்ரூட் ஹல்வாவை எளிதாக செய்யலாம்.