Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Christmas Sweets Recipe: நெருங்கும் கிறிஸ்துமஸ்.. சுவையான சாக்லேட் பர்ஃபி செய்யும் முறை இதோ!

Chocolate Burfi Recipe: 2025 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏதாவது ஸ்வீட்ஸை வித்தியாசமாக தயாரித்து சுவைக்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது. அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக சூப்பரான சுவையான சாக்லேட் பர்ஃபி எளிதாக எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

Christmas Sweets Recipe: நெருங்கும் கிறிஸ்துமஸ்.. சுவையான சாக்லேட் பர்ஃபி செய்யும் முறை இதோ!
சாக்லேட் பர்ஃபிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 22 Dec 2025 18:28 PM IST

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் (Christmas) என்றம் முதலில் ஞாபகத்திற்கு வருவது கேக்கும், ஸ்வீட்ஸ்களும்தான். இந்த பண்டிகை குடும்பத்துடன் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதாகும். இந்தியாவில் கிறிஸ்துமஸ் கிறிஸ்துவர்களை கடந்து, ஒவ்வொரு வீட்டிலும் மிகுந்த உற்சாகத்துடன் மதநல்லிணக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், 2025 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏதாவது ஸ்வீட்ஸை வித்தியாசமாக தயாரித்து சுவைக்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது. அதன்படி, சுவையான சாக்லேட் பர்ஃபி (Chocolate Burfi) எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: வீட்டிலேயே சுவையான கேக் செய்ய ஆசையா..? எளிதான வெண்ணிலா கப் கேக் செய்முறை இதோ!

சாக்லேட் பர்ஃபி செய்ய தேவையான பொருட்கள்:

  • பால் பவுடர் – 1/2 கிலோ
  • சர்க்கரை – 300 கிராம்
  • சாக்லேட் – 500 கிராம்
  • ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • சில்வர் பாயில்கள் – 4
  • பாதாம், முந்திரி, பிஸ்தா – ஒரு கை நறுக்கியது.

ALSO READ: ரம் சேர்க்காத பிளம் கேக் ரெசிபி.. கிறிஸ்துமஸ் நாளில் குடும்பத்துடன் ருசிக்க சூப்பர் கேக்!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் பர்ஃபி செய்வது எப்படி..?

  1. முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்து பால் பவுடர் சேர்த்து, தீயைக் குறைத்து, தொடர்ந்து கிளறவும். பால் பவுடர் அடிப்பகுதியில் ஒட்டாமல் தொடர்ந்து கிளறி கொண்டே இருக்கவும்.
  2. பால் பவுடர் லேசான நறுமணத்தை வெளியிடத் தொடங்கி, அதன் பச்சைத்தன்மையை இழந்ததும், அடுப்பை அணைத்து கொள்ளவும். இப்போது பாதாம் அல்லது பிற ட்ரை ப்ரூட்ஸ்களை பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். இது பர்ஃபிக்கு நல்ல ப்ளேவர்களை கொடுத்து அதன் சுவையை தூக்கி கொடுக்கும்.
  3. இப்போது மீண்டும் அடுப்பில் வைத்து வாட்டிய பால் பவுடரை கொட்டி, பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ்களை சேர்க்கவும். சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை நன்கு கலக்கவும். பின்னர் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து மீண்டும் கிளறவும்.
  4. அடுத்ததாக மற்றொரு அடுப்பை ஆன் செய்து பாத்திரத்தை வைத்து சாக்லேட்டை உருக்கவும். அது கருகி போகாமல் பார்த்து கொள்ளவும்.  சாக்லேட் முழுவதுமாக உருகியதும், பால் பவுடருடன் பாதியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. இப்போது ஒரு தட்டில் எடுத்து நெய்யை லேசாக தடவவும். முதலில், பால் பவுடர் மற்றும் சாக்லேட் கலவையை தட்டில் ஊற்றி, ஒரு கரண்டியால் சமமாக பரப்பவும். அதை லேசாக அழுத்தி நன்கு கெட்டியாக விடவும்.
  6. மேலே சில்வர் ஃபாயிலால் மூடி, நறுக்கிய பாதாம் ட்ரை ப்ரூட்ஸ்களை அலங்கரிக்கவும்.
  7. இப்போது ட்ரேயை சிறிது நேரம் குளிர்ந்த இடத்தில் வைக்கவும். பர்ஃபி முழுவதுமாக செட் ஆனதும், அதை விரும்பிய வடிவங்களில் வெட்டி பரிமாறலாம்.