Christmas Home Cleaning: கிறிஸ்துமஸூக்கு வீடு க்ளீன் ப்ளானா..? இப்படி செய்தால் வீடு எளிதாக பளபளக்க செய்யலாம்!
Christmas Deep Cleaning: வீட்டில் சுத்தம் (Home Cleaning) செய்வதற்கு முதலில் உங்கள் படுக்கையறையை சுத்தம் செய்வதில் இருந்து தொடங்குங்கள். மேலிருந்து கீழாக அதாவது வீட்டின் மேல் சுவர்கள், மூலைகள் மற்றும் பேன்களில் இருந்து தூசி மற்றும் ஒட்டடையை சுத்தம் செய்யுங்கள்.
கிறிஸ்துமஸ் (Christmas), புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை என அடுத்தடுத்து முக்கிய பண்டிகை வர இருக்கிறது. இதுபோன்ற நல்ல நாட்களில் வீட்டை முழுமையான சுத்தம் செய்வது முக்கியம். அப்போதுதான், விருந்தினர்கள் முகம் சுழிக்காமல் வீட்டிற்கு வந்து செல்வார்கள். அந்தவகையில், வீட்டில் சுத்தம் (Home Cleaning) செய்வதற்கு முதலில் உங்கள் படுக்கையறையை சுத்தம் செய்வதில் இருந்து தொடங்குங்கள். மேலிருந்து கீழாக அதாவது வீட்டின் மேல் சுவர்கள், மூலைகள் மற்றும் பேன்களில் இருந்து தூசி மற்றும் ஒட்டடையை சுத்தம் செய்யுங்கள். அதேநேரத்தில், பேன் மற்றும் விளக்குகளில் குவிந்துள்ள தூசியை உலர்ந்த துணி மூலம் சுத்தம் செய்யவும். தொடர்ந்து, சிறிய மூலைகள் மற்றும் பீரோக்களில் இடுக்குகளை சுத்தம் செய்ய ஒரு வேக்கம் கிளீனரைப் பயன்படுத்தலாம். இது தூசி மீண்டும் விழுவதைத் தடுக்கும். இது சுத்தம் செய்வதை எளிதாக்கும். உங்கள் வீட்டில் வேக்கம் கிளீனர் இல்லையென்றால், விளக்கமார்களை பயன்படுத்தலாம்.
சமையலறை சுத்தம்:
சமையலறை வீட்டின் மிக முக்கியமான பகுதியாகும். சமையலறை சுத்தமே நமது ஆரோக்கியத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இங்குதான் உணவு தயாரிக்கப்படுகிறது. முதலில் சமையலறையில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து வைக்கவும். இதன் பிறகு அலமாரிகளை சுத்தம் செய்தபின் ஈரமான துணி கொண்டு துடைக்கவும். இப்போது கேஸ் அடுப்பு, மேடை, பலகைகளை நன்கு சுத்தம் செய்யவும். முடிந்தால் அடுக்கி வைத்துள்ள பாத்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ரேக்கை கழுவி உலர வைக்கவும்.




குளியலறை:
குளியலறைகளை சுத்தம் செய்யும் போது பாதுகாப்பு மிக மிக முக்கியம். சுத்தம் செய்வதற்கு முன் கையுறைகள் மற்றும் ஃபேஸ் மாஸ்களை அணிந்து கொள்ளுங்கள். தரையையும் சுவர்களையும் பீனால் அல்லது குளியலறை கிளீனரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். கழிப்பறை இருக்கையை சுத்தம் செய்யும் ஜெல் அல்லது அமிலத்தால் கழுவவும். இதை பயன்படுத்தும்போது மிக கவனம் தேவை. தொடர்ந்து ஷவர், குழாய்கள் மற்றும் டைல்ஸ்களை சுத்தமாக தேய்க்கவும். இறுதியாக, சுத்தமான தண்ணீரில் கழுவி காய விடவும். இது துர்நாற்றத்தையும் தொற்று அபாயத்தையும் குறைக்கும்.
மற்ற பகுதிகள்:
வீட்டில் இன்னும் சில இடங்கள் உள்ளன. இவற்றை பெரும்பாலும் கண்டு கொள்வது கிடையாது, சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம். கதவு கைப்பிடிகள், பூட்டுகள், லைட் சுவிட்ச் போர்டுகள், குழாய்கள், அலமாரி கைப்பிடிகள், குளிர்சாதன பெட்டி, மைக்ரோவேவ் கதவுகள் போன்றவை. இவை அனைத்தையும் உலர்ந்த அல்லது சற்று ஈரமான துணியால் பாதுகாப்பாக சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால் இங்குதான் அதிக கிருமிகள் இருக்கும். மின்சார சாதன பொருட்களை ஈரமான துணியால் சுத்தம்போது அதிக கவனம் தேவை.
ALSO READ: ஏசியை பயன்படுத்த தயக்கமா..? குளிர்காலத்தில் இந்த தவறு வேண்டாம்..!
வெறும் துடைப்பத்தால் மட்டும் தரை முழுமையாக சுத்தம் ஆகாது. எனவே முதலில் துடைப்பம் அல்லது வெற்றிட கிளீனரைப் பயன்படுத்தி க்ளீன் செய்தபிறகு, தண்ணீர் ஊற்றி வீட்டை கழுவுங்கள்.