Food Recipe: மழைக்காலத்தில் மகத்தான ரெசிபி.. ஆரோக்கியமான காளான் சூப் செய்வது எப்படி?

Mushroom Soup Recipe: மழைக்காலத்தில் உங்களுக்கு டீ மற்றும் பஜ்ஜி போன்றவை சாப்பிட்டு சாப்பிட்டு சலிப்பாக இருந்தால், இந்த சுவையான காளான் சூப்பை முயற்சிக்கலாம். மேலே கொத்தமல்லியால் அலங்கரிக்கப்பட்ட இந்த காளான் சூப்பின் சுவை அற்புதமாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

Food Recipe: மழைக்காலத்தில் மகத்தான ரெசிபி.. ஆரோக்கியமான காளான் சூப் செய்வது எப்படி?

காளான் சூப்

Published: 

29 Oct 2025 18:56 PM

 IST

மழை பெய்தவுடன் (Rainy Season) குளிரானது உங்களை பாடாய்படுத்தி கொண்டு இருக்கும். இந்த குளிரில் இருந்து தப்பிக்க சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். உங்களுக்கு டீ மற்றும் பஜ்ஜி போன்றவை சாப்பிட்டு சாப்பிட்டு சலிப்பாக இருந்தால், இந்த சுவையான காளான் (Mushroom) சூப்பை முயற்சிக்கலாம். மேலே கொத்தமல்லியால் அலங்கரிக்கப்பட்ட இந்த காளானின் சுவை அற்புதமாக இருக்கும். வலிமையான உடலை பராமரிக்க, நமது தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துவது முக்கியம். எனவே, நமது எலும்புகள் மற்றும் தசைகளுக்கு நன்மை பயக்கும் உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். அதன்படி, நமது அன்றாட உணவுகளில் ஒன்றான காளான்கள், நமது உடலை வலுப்படுத்தும் பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. எனவே, மழைக்காலத்தில் சூப்பராக சூடான காளான் சூப் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மழைக்காலத்தில் சூடாக சாப்பிட சூப்பர் ஸ்நாக்ஸ்.. 5 நிமிடத்தில் டீயுடன் ருசிக்கலாம்..!

காளான் சூப்:

தேவையான பொருட்கள்:

  • காளான்கள் – 250 கிராம்
  • ஆலிவ் எண்ணெய் – 3 ஸ்பூன்
  • பூண்டு – 3 பல்
  • தைம் கிளைகள் – 8
  • மிளகு தூள்- 1 ஸ்பூன்
  • வெண்ணெய் – 3 ஸ்பூன்
  • வெங்காயம் – 1
  • அரிசி மாவு – 1/4 கப்
  • சிக்கன் ஸ்டாக் – 5 கப்
  • பிரிஞ்சி இலைகள் – 2
  • கப் க்ரீம் – 1/3

ALSO READ: பலாவில் பல வெரைட்டி! ஊறுகாய் முதல் சிப்ஸ் வரையிலான ரெசிபி இதோ!

காளான் சூப் செய்வது எப்படி..?

  1. காளான் சூப் தயாரிக்க முதலில் காளான்கள், வெங்காயம் மர்றும் பூண்டை நறுக்கவும். ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் காளான்கள், ஆலிவ் எண்ணெ, பூண்டு மற்றும் தைம் கிளைகள் சேர்க்கவும்.
  2. அதன்மீது தேவையான அளவு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். இதை அடுப்பில் வைத்து சுமார் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  3. அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு மிதமான தீயில் சூடாக்கவும். இப்போது, வெங்காயம், பூண்டு சேர்த்து லேசாக வதக்கவும். தொடர்ந்து, மாவை சேர்த்து நன்கு கிளறி வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
  4. இந்த நேரத்தில் சிக்கன் ஸ்டாக் சேர்த்து கலக்கவும். இதற்கு பிறகு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 15-20 நிமிடங்கள் வேகவிடவும்.
  5. கடைசியாக ஏற்கனவே வேகவைத்து எடுத்து வைத்துள்ள காளான்களை சேர்த்து மேல் 2 நிமிடங்கள் சமைக்கவும். தீயை அணைத்துவிட்டு க்ரீம் சேர்த்து கலக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் சூப் தயார்.