Winter Home Cleaning: குளிர்காலத்தில் தண்ணீரை தொட பயமா? இப்படி க்ளீன் செய்தால் வீடு பளபளக்கும்!
Winter Home Cleaning Tips: வீட்டிற்குள் தூசி, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் வளர தொடங்கி, குளிருடன் சேர்ந்து நோய்வாய்ப்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கலாம். ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பயன்படுத்தாமல் உங்கள் வீட்டை பிரகாசிக்க உதவும் சில சிறப்பு குறிப்புகள் உள்ளன. எனவே, குளிர்காலத்தில் தண்ணீரை தொடாமலே எளிதாக வீட்டை எப்படி சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

குளிர்கால வீட்டு சுத்தம்
குளிர்காலத்தில் (Winter Seson) வெப்பநிலை குறையும்போது தண்ணீரில் கை வைக்கவே பயமாக்க இருக்கும். இதன் காரணமாக சமையலறை, குளியலறை, தரை மற்றும் வீட்டின் பிற பகுதிகளை சுத்தம் செய்வது என்பது கடினமாகிவிடும். குளிரின் காரணமாக பலரும் சுத்தம் செய்வதை தள்ளி போடுகிறார்கள். இதன் காரணமாக, வீட்டிற்குள் தூசி, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் (Bacteria) வளர தொடங்கி, குளிருடன் சேர்ந்து நோய்வாய்ப்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கலாம். ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பயன்படுத்தாமல் உங்கள் வீட்டை பிரகாசிக்க உதவும் சில சிறப்பு குறிப்புகள் உள்ளன. எனவே, குளிர்காலத்தில் தண்ணீரை தொடாமலே எளிதாக வீட்டை எப்படி சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: வீட்டில் செல்லப்பிராணிகள் இருக்கா? மழைக்காலத்தில் இப்படி கேர் பண்ணுங்க!
வேக்கம் க்ளீனிங்:
குளிர்ந்த குளிர்கால மாதங்களில் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறை வீட்டை துடைப்பது முக்கியம். ஆனால் உங்கள் வீட்டை சுத்தம் செய்வதற்கு இதுவே சரியான வழிமுறையாகும். முதலில் ஒரு துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்து தரையிலிருந்து தூசியை அகற்றலாம். உங்களிடம் ஒரு வேக்கம் க்ளீனிங் இருந்தால், அது இன்னும் சிறந்தது. ஒரு வேக்கம் க்ளீனிங் மிகச்சிறிய தூசித் துகள்களைக் கூட எளிதில் உறிஞ்சிவிடும். குறிப்பாக திரைச்சீலைகள், சோஃபாக்கள், கம்பளங்கள் மற்றும் மெத்தைகளில் உள்ள தூசிகளையும் உறிஞ்சி எடுத்துவிடும்.
மைக்ரோஃபைபர் துணிகள்:
குடல் துண்டு என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் மைக்ரோஃபைபர் துணிகளை கொண்டு குளிர்காலத்தில் ஈஸியாக வீட்டை சுத்தம் செய்யலாம். இதற்கு தண்ணீரில் நனைக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக தூசி மற்றும் அழுக்கு படிந்த இடங்களில் உதறி துடைக்கலாம். உதாரணத்திற்கு ஜன்னல்கள், டிவி திரைகள், கண்ணாடி மேசைகள் முதல் சிறிய சமையலறை மேற்பரப்புகள் வரை மைக்ரோஃபைபர் துணிகளை கொண்டு எந்தவொரு பயமின்றி சுத்தம் செய்யலாம். இது தண்ணீரை கொண்டு சுத்தம் செய்யும் அளவிலான சுத்தத்தை கொடுக்கும்.
பேக்கிங் சோடா மற்றும் உப்பு:
குளிர்காலத்தில் போர்வை மற்றும் கம்பளங்களை துவைப்பது என்பது சாத்தியமற்றது. ஆனால், அவற்றையும் குளிர்காலத்தில் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இதற்கு சமையல் சோடா மற்றும் உப்பு கலவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ALSO READ: மழைக்காலத்தில் வீட்டை இப்படி பாரமரிங்க.. எதிர்கால சிக்கலை தடுக்கலாம்!
இதை எப்படி பயன்படுத்துவது..?
- உப்பு மற்றும் பேக்கிங் சோடாவுடன் தண்ணீரை சேர்த்து, இந்த கலவையை கம்பளம், போர்வை அல்லது பாயில் தெளிக்கவும்.
- 20–25 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- இதை சூரிய ஒளியில் காயவிடுங்கள்.
இந்த முறை அழுக்கு மற்றும் நாற்றங்களை நீக்குகிறது. இவ்வாறு செய்வதன்மூலம், போர்வை ஒவ்வொரு முறையும் புதியது போல் இருக்கும். மேலும், பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்வதை தடுக்கும்.