2026-ல் எந்த நாட்டிற்கு மக்கள் அதிகம் படைஎடுக்கிறார்கள் தெரியுமா?
World Tourism: உலகப் பொருளாதார மன்றத்தின் 2026 சுற்றுலா தரவரிசைப் பட்டியலில், 4.27 கோடி சர்வதேச பயணிகளை ஈர்த்து அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி ஜப்பான் உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராஜ்யம் ஆகிய நாடுகள் தங்களின் உள்கட்டமைப்பு மற்றும் பாரம்பரியத் தலங்களால் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. வளர்ந்து வரும் நாடான சீனா எட்டாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களைப் பிடித்துள்ளன.
உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச சுற்றுலாப் பயண வளர்ச்சி குறியீட்டு பட்டியலில், சுமார் 4.27 கோடி வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்து ஜப்பான் உலகளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த முறை முதலிடத்தில் இருந்த அமெரிக்கா இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்குச் சரிந்துள்ள நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்பெயின் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களின் தனித்துவமான இயற்கை எழில் மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களால் அடுத்தடுத்த இடங்களைக் கைப்பற்றியுள்ளன. ஜெர்மனி ஆறாவது இடத்திலும், லண்டனை மையமாகக் கொண்ட ஐக்கிய ராஜ்யம் ஏழாவது இடத்திலும் இணைந்து சர்வதேச சுற்றுலாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளன. இந்த டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே வளர்ந்து வரும் பொருளாதார நாடான சீனா எட்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. பனிமலைகளுக்குப் புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து ஒன்பதாவது இடத்தையும், வரலாற்றுச் சின்னங்களைக் கொண்ட இத்தாலி பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளன.
முதலிடத்தைப் பிடித்த ஜப்பான்
சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் தேர்வில் இரண்டு இடங்கள் முன்னேறி ஜப்பான் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 4.27 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். டோக்கியோ, ஒசாக்கா மற்றும் புகழ்பெற்ற ஃபுஜி மலை போன்றவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய மையங்களாக திகழ்கின்றன.
சரிவைச் சந்தித்த அமெரிக்கா
கடந்த முறை முதலிடத்தில் இருந்த அமெரிக்கா, இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் போன்ற நவீன நகரங்களும், கிராண்ட் கேன்யன் மற்றும் யெல்லோஸ்டோன் போன்ற இயற்கை தேசிய பூங்காக்களும் அமெரிக்காவின் சுற்றுலா பலமாக விளங்குகின்றன.
பாரம்பரியம் மிக்க ஸ்பெயின்
பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ஸ்பெயின், வரலாற்றுச் சிறப்புமிக்க பார்கெலோனா மற்றும் மாட்ரிட் போன்ற நகரங்களின் மூலம் பெருமளவிலான பயணிகளை ஈர்க்கிறது. அந்நாட்டின் கட்டடக் கலை, கடற்கரைகள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவை உலகப் புகழ்பெற்றவை.
முன்னேற்றம் கண்ட ஆஸ்திரேலியா
இந்த பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி ஆஸ்திரேலியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைகள், வனவிலங்குகள் மற்றும் இயற்கை நிலப்பரப்புகள் சுற்றுலாப் பயணிகளுக்குப் புதிய அனுபவத்தைத் தருகின்றன.
பாரிஸின் புகழ்பெற்ற பிரான்ஸ்
ஐந்தாவது இடத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ், உலகின் மிக அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அந்நாட்டின் ஈபிள் கோபுரம் மற்றும் லூவர் அருங்காட்சியகம் ஆகியவை பயணிகளின் முதன்மைத் தேர்வாகும்.
கலாச்சாரப் பெருமை கொண்ட ஜெர்மனி
ஜெர்மனி நாட்டின் பெர்லின் மற்றும் முனிச் போன்ற பெருநகரங்கள் நகர்ப்புற சுற்றுலாவிற்குப் பெயர் பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளன. நாட்டின் வரலாற்று அடையாளங்கள் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துகின்றன.
பிரிட்டனின் சுற்றுலா வளர்ச்சி
லண்டனை முதன்மை மையமாகக் கொண்டுள்ள ஐக்கிய ராஜ்யம் (UK) ஏழாவது இடத்தை வகிக்கிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பிராந்தியங்கள் பயணிகளுக்குப் பலவகை இயற்கை எழிலைக் கண்டுகளிக்கும் வாய்ப்பை வழங்குகின்றன.
பட்டியலில் இடம்பிடித்த சீனா
வளர்ந்த நாடுகளின் ஆதிக்கம் நிறைந்த இந்த 10 நாடுகள் பட்டியலில், வளரும் நாடாக எட்டாவது இடத்தில் சீனா இடம் பெற்றுள்ளது. சீனாவின் பெருஞ்சுவர், பீஜிங்கின் விலக்கப்பட்ட நகரம் மற்றும் ஷாங்காயின் நவீன வானளாவிய கட்டடங்கள் சர்வதேசப் பயணிகளைக் கவர்கின்றன.
பனிச்சறுக்கு விளையாட்டுக்குச் சுவிட்சர்லாந்து
ஒன்பதாவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து, ஆல்பைன் பனிமலைத் தொடர்களுக்கும் குளிர்கால பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கும் உலகளவில் புகழ்பெற்றது. இயற்கை விரும்பிகளின் சொர்க்கமாக இந்நாடு கருதப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணி கொண்ட இத்தாலி
பத்தாவது இடத்தைப் பிடித்துள்ள இத்தாலி, ரோமின் வரலாற்றுச் சின்னங்கள், வெனிஸின் கால்வாய்கள், புளோரன்ஸின் கலைப் பாரம்பரியம் மற்றும் அமால்ஃபி கடற்கரை ஆகியவற்றின் மூலம் சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது.