AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண்களே உடற்பயிற்சி செய்யும்போது சிறுநீர் கசிகிறதா?

Urine Leakage: உடற்பயிற்சியின்போது தொடர்ந்து சிறுநீர் கசிவது சாதாரணமான விஷயம் என்று லட்சியப்படுத்தக்கூடாது. இடுப்புத் தசைகள் பலவீனமடைதல் மற்றும் பெண்களின் இடுப்புப் பகுதியில் ஏற்படும் தளர்வு போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். அறிகுறிகள் நீடித்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் உரிய பரிசோதனை செய்து, தேவையான பயிற்சி அல்லது சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.

பெண்களே உடற்பயிற்சி செய்யும்போது சிறுநீர் கசிகிறதா?
கோப்புப்படம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 12 Sep 2026 15:27 PM IST

43 வயதான ஒரு பெண்ணுக்கு உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்கங்களின்போது அடிக்கடி சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த அறிகுறியை ஆரம்பத்தில் அவர் சாதாரணமானதாக நினைத்திருந்தாலும், தொடர்ந்து ஏற்பட்டதால் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் கருப்பை, சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் பகுதிகளின் ஆதரவு திசுக்களில் தளர்வு இருப்பது தெரியவந்தது. இடுப்புத் தசைகள் பலவீனமடைவது பெண்களுக்கு சிறுநீர் கட்டுப்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பிரசவம், உடல் பருமன், நீண்டகால மலச்சிக்கல் அல்லது இருமல் போன்ற காரணிகளும் இடுப்புத் தசைகளை பாதிக்கலாம். உடற்பயிற்சி, இருமல் அல்லது தும்மும்போது மட்டும் சிறுநீர் கசிவது கூட கவனிக்க வேண்டிய அறிகுறியாகும். இதுபோன்ற பிரச்சனை தொடர்ந்து இருந்தால் அதை மறைக்காமல் மருத்துவரை அணுகி, தேவையான சிகிச்சை மற்றும் இடுப்புத் தசை பயிற்சிகளை மேற்கொள்வது முக்கியம்.

சாதாரண பிரச்சனை அல்ல

உடற்பயிற்சி, ஓடுதல் அல்லது உடலை வருத்தும் செயல்களில் ஈடுபடும்போது சில பெண்களுக்கு தன்னிச்சையாக சிறுநீர் கசிவது ஏற்படலாம். இதை வயது அதிகரிப்பது அல்லது பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் இயல்பான மாற்றம் என பலரும் நினைத்து அலட்சியப்படுத்துகின்றனர். ஆனால், தொடர்ந்து இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அதற்குப் பின்னால் இருக்கும் உடல்நலக் காரணத்தை கண்டறிவது அவசியம்.

43 வயது பெண்ணின் அனுபவம்

43 வயதான ஒரு பெண்ணுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்யும்போதும் உடல் இயக்கம் அதிகரிக்கும்போதும் சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அதோடு, சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகாத உணர்வு மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் உணர்வு குறைதல் போன்ற மாற்றங்களும் இருந்துள்ளன. ஆரம்பத்தில் இவற்றை அவர் தனித்தனி பிரச்சனைகளாகவே கருதிய நிலையில், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு உண்மையான காரணம் தெரியவந்தது.

இடுப்புத் தசைகள் பலவீனம்

பரிசோதனையில் கருப்பை சிறிதளவு கீழிறங்கியிருந்ததுடன், சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் சுவரிலும் தளர்வு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக இடுப்புத் தசைகளின் பலவீனம் குறிப்பிடப்பட்டது. பிரசவம், உடல் பருமன், மாதவிடாய் நிறுத்த கால மாற்றங்கள் மட்டுமின்றி, நீண்டகால இருமல் மற்றும் மலச்சிக்கல் போன்றவையும் இந்தத் தசைகளை பாதிக்கக்கூடும்.

Also Read: கணவரின் குறட்டை மனைவியின் உடல்நலனுக்கு மெல்லக் கொல்லும் ஆபத்தா?

அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கட்டுப்பாடின்மை பிரச்சனைகளில் உடற்பயிற்சி அல்லது இருமல் போன்ற நேரங்களில் ஏற்படும் ‘ஸ்ட்ரெஸ் இன்கான்டினன்ஸ்’ பொதுவானதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் பெண்களிடையே சிறுநீர் கட்டுப்பாடின்மை குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாகவும் மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சிறுநீர் கசிவு தொடர்ந்து ஏற்பட்டால் அதை இயல்பான பிரச்சனை என நினைத்து மறைப்பதைத் தவிர்த்து மருத்துவரை அணுகுவது முக்கியம்.

சரியான சிகிச்சை முக்கியம்

இடுப்புத் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள், குறிப்பாக கீகல் பயிற்சிகள், உதவக்கூடும் என்றாலும் அவற்றை சரியான முறையில் செய்வது அவசியம். தேவையானவர்களுக்கு இடுப்புத் தசை பிசியோதெரபி மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படலாம். பிரசவத்திற்குப் பிறகு ஆரம்பத்திலேயே உரிய மதிப்பீடு செய்து, நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் பயிற்சிகளை மேற்கொள்வது எதிர்கால பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us