Christmas Cake Recipe: கிறிஸ்துமஸூக்கு குழந்தைகள் குஷியாக வேண்டுமா..? இந்த கப்கேக் ரெசிபியை ட்ரை பண்ணுங்க!

Christmas Cupcakes: பிளம் கேக்குகளைத் தாண்டி, குழந்தைகளுக்கான சிறப்பு கிறிஸ்துமஸ் கப்கேக்குகளை (Cup Cake) நீங்களே வீட்டில் செய்யலாம். கப்கேக்குகளை விரும்பாத குழந்தைகள் யாரும் இருக்க முடியாது. நீங்களே குழந்தைகளுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட கப்கேக்குகளை கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். அதற்கான எளிய குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு சொல்லி தருகிறோம். 

Christmas Cake Recipe: கிறிஸ்துமஸூக்கு குழந்தைகள் குஷியாக வேண்டுமா..? இந்த கப்கேக் ரெசிபியை ட்ரை பண்ணுங்க!

கப் கேக் ரெசிபி

Published: 

23 Dec 2025 18:50 PM

 IST

கிறிஸ்துமஸ் (Christmas) என்ற பெயர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் ஒரு நல்ல நாளாகும். இதுபோன்ற நல்ல நாட்களில் குழந்தைகள் மிகவும் உற்சாகமடைந்து தங்களுக்கு பிடித்த உணவுகள் மற்றும் ஆடைகளுடன் இருக்க விரும்புவார்கள். இதன் காரணமாகவே, பள்ளிகளில் கிறிஸ்துமஸுக்கு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யப்படுகிறது. மேலும் மக்கள் வீட்டிலேயே அந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள். உங்கள் குழந்தைகளின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்க விரும்பினால், இந்த கிறிஸ்துமஸுக்கு அவர்களுக்காக ஏதாவது சிறப்பாக கொடுக்க விரும்புகிறீர்களா..? அதன்படி, பிளம் கேக்குகளைத் தாண்டி, குழந்தைகளுக்கான சிறப்பு கிறிஸ்துமஸ் கப்கேக்குகளை (Cup Cake) நீங்களே வீட்டில் செய்யலாம். கப்கேக்குகளை விரும்பாத குழந்தைகள் யாரும் இருக்க முடியாது.

அத்தகைய சூழ்நிலையில், நீங்களே குழந்தைகளுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட கப்கேக்குகளை கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். அதற்கான எளிய குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு சொல்லி தருகிறோம்.

ALSO READ: வீட்டிலேயே சுவையான கேக் செய்ய ஆசையா..? எளிதான வெண்ணிலா கப் கேக் செய்முறை இதோ!

கப் கேக் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • மைதா மாவு: 1 1/2 கப்
  • சர்க்கரை: 1 கப்
  • பேக்கிங் பவுடர்: 1 1/2 தேக்கரண்டி
  • சமையல் சோடா: ½ தேக்கரண்டி
  • கோகோ பவுடர்: 1/4 கப்
  • பால்: 1/2 கப்
  • வெண்ணிலா எசன்ஸ்: 1 தேக்கரண்டி
  • வெண்ணெய் (உருகியது): 1/2 கப்
  • முட்டைகள்: 2
  • தண்ணீர்: 1/2 கப்
  • விப்டு க்ரீம்: 1 கப்
  • பச்சை மற்றும் சிவப்பு ஃபுட் கலர்
  • சாக்லேட் சிப்ஸ், ஸ்பிரிங்க்ள்ஸ்

கப் கேக்குகளை செய்வது எப்படி..?

  • கிறிஸ்துமஸ் சிறப்பு கப்கேக்குகளை தயார் செய்ய, மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் கோகோ பவுடரை ஒரு பெரிய கிண்ணத்தில் நன்றாக சலித்து எடுத்து கொள்ளவும். இப்போது, ஒரு தனி கிண்ணத்தில் பால், முட்டை, வெண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • இப்போது உங்களுக்கு தேவை என்றால் ட்ரை ப்ரூட்ஸ்களை போட்டு, மாவை வெதுவெதுப்பான நீரை ஊற்றி மென்மையாகவும் வரும் வரை பிசையவும். பின்னர், அடுப்பை 180°C (350°F) க்கு முன்கூட்டியே சூடாக்கவும்.
  • கப்கேக் அச்சுகளில் மாவை ஊற்றி, அவற்றை 2/3 பங்கு மட்டுமே நிரப்பவும். 15-20 நிமிடங்கள் சுடவும். ஒரு டூத்பிக் அல்லது ஸ்பூன் சொருகி ஒட்டாமல் வருகிறதா என்று சரிபார்க்கவும். இப்படி வந்தவுடன் கப்கேக்குகளை குளிர விடவும்.

ALSO READ: ரம் சேர்க்காத பிளம் கேக் ரெசிபி.. கிறிஸ்துமஸ் நாளில் குடும்பத்துடன் ருசிக்க சூப்பர் கேக்!

கப்கேக்குகளை அலங்கரிக்க..

  • விப் க்ரீமை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒரு பகுதியில் பச்சை நிற ஃபுட் கலரையும், மற்றொரு பகுதியில் சிவப்பு ஃபுட் கலரையும் சேர்த்து கலக்கி, கேக் மீது கூம்பு வடிவில் போடவும்.
  • தொடர்ந்ர்க்ய் கிறிஸ்துமஸ் மரங்கள், ஸ்பிரிங்க்ள்ஸ் மற்றும் சிறிய கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அலங்காரம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

 

2026ல் இந்த ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம்.. அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்..
புர்ஜ் கலீஃபாவை தாக்கிய மின்னல்.. அதிர்ச்சி வீடியோவைப் பகிர்ந்த துபாய் இளவரசர்!!
ஒரு வாழைப்பழம் இயற்கையாக பழுக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? - நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்த வீடியோ
தேர்வர்களுக்கான குட்நியூஸ்.. RRB 2026 தேர்வு காலண்டர் வெளியீடு!