Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: பாயாசம் முதல் சிப்ஸ் வரை.. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இத்தனை வெரைட்டி ரெசிபியா?

Delicious Sweet Potato Recipes: சர்க்கரைவள்ளிக்கிழங்கை பயன்படுத்தி மூன்று சுவையான சிற்றுண்டிகளை எப்படி செய்வது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு பாயாசம், ரிங்க்ஸ் மற்றும் சிப்ஸ் செய்முறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. எளிய பொருட்களைப் பயன்படுத்தி, சுவையான, ஆரோக்கியமான சிற்றுண்டிகளை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.

Food Recipe: பாயாசம் முதல் சிப்ஸ் வரை.. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இத்தனை வெரைட்டி ரெசிபியா?
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரெசிபிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Aug 2025 18:07 PM

சமையல் கலைகளில் சமையலும் (Cooking) செய்யலாம், மாயமும் செய்யலாம். சமையலின்போது எந்தவிதமான பொருட்களையும், எப்படி வேண்டுமானாலும் சமைத்து விருந்தினருக்கு படைக்கலாம். அந்தவகையில், நீங்கள் எப்போதாவது சர்க்கரைவள்ளிக் கிழங்கை (Sweet Potato) பயன்படுத்தி ஸ்நாக்ஸ்களை செய்து ருசித்திருக்கிறீர்களா..? நீங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால் இந்த சூப்பர் ஃபுட்டை ட்ரை செய்யுங்கள். இங்கே சர்க்கரைவள்ளிக் கிழங்கை கொண்டு 3 சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளை மேற்கொள்ளுங்கள்.

சர்க்கரை வள்ளி கிழங்கு பாயாசம்:

  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 2
  • பால் – அரை லிட்டர்
  • நெய் – ஒரு டீஸ்பூன்
  • சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்

செய்முறை:

  1. சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோல் நீக்கி, தண்ணீரில் போட்டு வேக வைத்து மசித்து எடுத்து கொள்ளவும். இப்போது, ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, நன்றாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்னர் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. அடுத்ததாக, மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து பாலுடன் சேரும் வரை காத்திருக்கவும். இறுதியாக, நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். அவ்வளவுதான், சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு பாயாசம் தயார்.

ALSO READ: பானிபூரி பிரியரா நீங்கள்..? வீட்டிலேயே சுத்தமா இப்படி செய்யலாம்!

சர்க்கரை வள்ளிக் கிழங்கு ரிங்ஸ்:

  • சர்க்கரை வள்ளி கிழங்கு – 3
  • நெய் – 2 டீஸ்பூன்
  • கான்ஃப்ளார் மாவு – 3 டேபிள்ஸ்பூன்
  • சீஸ், மைதா மாவு, எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பிரட் – போதுமான அளவு

செய்முறை:

  1. சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும். ஒரு பாத்திரத்தில், மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், சோள மாவை சேர்த்தூ நன்றாக கலக்கி கொள்ளவும்.
  2. இந்த மாவின் ஒரு சிறிய பகுதியை எடுத்து நீளமாக உருட்டுங்கள். நடுவில் இப்போது சீஸ் துண்டுகளை வைத்து ஆங்காங்கே மூடவும்.
  3. இறுதியாக, மாவை வளையலை போல் உருட்டி கொள்ளுங்கள். பின்னர், அதை முட்டையின் மஞ்சள் கருவில் நனைத்து பிரட் துகள்களில் பிரட்டவும். இவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அவ்வளவுதான், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரிங்க்ஸ் ரெடி.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸ்:

  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 2
  • வெண்ணெய், அரிசி மாவு – தலா 2 டீஸ்பூன்
  • வெல்லம், உப்பு – தேவையான அளவு
  • எள் – 2 டீஸ்பூன்

ALSO READ: மழைக்காலத்தில் சூடாக ஸ்நாக்ஸ் வேண்டுமா..? சூப்பரான ஸ்டஃப் மிளகாய் பஜ்ஜி ரெசிபி இதோ!

செய்முறை:

  1. சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேக வைக்கவும். பின்னர் அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு மசிக்கவும்.
  2. வெல்லம், வெண்ணெய், உப்பு சேர்த்து கலக்கவும். இதனுடன், அரிசி மாவு மற்றும் எள் சேர்த்து மீண்டும் நன்கு கலந்து பேஸ்ட் செய்யவும். பின்னர் மாவிலிருந்து சிறிய உருண்டைகளாக மாற்றி, சம துண்டுகளாக பிசையவும். இவற்றை சூடான எண்ணெயில் பொறித்து எடுத்தால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸ் ரெடி.