Kitchen Hacks: உருளைக்கிழங்கு வேகவைத்த பிறகு தண்ணீரை வீணாக்கிவிடுகிறீர்களா? இப்படி செய்தால் வெள்ளி பளபளக்கும்!
Boiled Potato Water Reuse: மங்கிப்போன வெள்ளிப் பொருட்களின் பளபளப்பை மீண்டும் கொண்டுவர, வேகவைத்த உருளைக்கிழங்குத் தண்ணீர் உதவும் என்று கூறும் ஒரு வீட்டு வைத்தியம். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சுவாரஸ்யமாக, இந்த தந்திரங்களுக்கு விலை உயர்ந்த வெள்ளி சுத்தம் செய்யும் பொருட்களோ அல்லது சிறப்பு இரசாயனங்களோ தேவையில்லை.
பெரும்பாலான வீடுகளில் (Home) உருளைக்கிழங்கு (Potato) வேகவைக்கப்படுகிறது. மேலும் வேகவைத்த பிறகு, இந்த நீரானது பெரும்பாலும் வீணாக்கப்படுகிறது. ஆனால், பலருக்கும் இதை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து அறிவதில்லை. நீங்களும் உருளைக்கிழங்கு வேகவைத்த பிறகு மீதமுள்ள நீரை யோசிக்காமல் வடிகாலில் ஊற்றினால், மிகவும் பயனுள்ள ஒரு பொருளுக்கு பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு வேகவைத்த பிறகு மீதமுள்ள நீரில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. இது உங்களுக்கு ஒரு கடினமான வேலையை எளிதாக்கும்.
ALSO READ: கொசு கடிக்காமல் தப்பிக்கணுமா? வீட்டிலேயே செய்யலாம் கொசு விரட்டி கிரீம்!
வேகவைத்த உருளைக்கிழங்கு தண்ணீர்
மங்கிப்போன வெள்ளிப் பொருட்களின் பளபளப்பை மீண்டும் கொண்டுவர, வேகவைத்த உருளைக்கிழங்குத் தண்ணீர் உதவும் என்று கூறும் ஒரு வீட்டு வைத்தியம். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சுவாரஸ்யமாக, இந்த தந்திரங்களுக்கு விலை உயர்ந்த வெள்ளி சுத்தம் செய்யும் பொருட்களோ அல்லது சிறப்பு இரசாயனங்களோ தேவையில்லை. மீதமுள்ள வேகவைத்த உருளைக்கிழங்குத் தண்ணீரைப் பயன்படுத்தி, பழைய மற்றும் நிறம் மங்கிய வெள்ளி நகைகள் அல்லது பாத்திரங்களை எப்படிப் பளபளப்பாக்கலாம் என்று பார்ப்போம்.




எப்படி பலனளிக்கும்?
உருளைக்கிழங்கு வேகவைத்த நீரில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. இதனுடன் சிறிதளவு வினிகரைச் சேர்க்கும்போது, இந்தக் கலவையானது வெள்ளிப் பொருட்களின் மேற்பரப்பில் உள்ள கறைகளை அகற்ற உதவுகிறது. இதனால்தான் பலர் வெள்ளி நகைகளையும் பாத்திரங்களையும் சுத்தம் செய்ய இதைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றனர்.
இதை எப்படி பயன்படுத்துவது?
முதலில், உருளைக்கிழங்கை வேகவைத்த பிறகு மீதமுள்ள சூடான நீரை வடிகட்டவும்.
பிறகு அதில் 1 தேக்கரண்டி வெள்ளை வினிகரைச் சேர்க்கவும். இப்போது, நிறம் மங்கிய வெள்ளி நகை அல்லது பாத்திரத்தை தண்ணீரில் போடுங்கள். அதை தண்ணீரில் முழுமையாக மூழ்கும் வரை மூழ்கவைக்கவும். சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். இப்போது, வெள்ளியை வெளியே எடுத்து மென்மையான துணியால் சுத்தம் செய்யவும். அவ்வளவுதான் வெள்ளி பளபளக்க தொடங்கும்.
வெள்ளி நகைகள் அல்லது பாத்திரங்களை வேகவைத்த உருளைக்கிழங்குத் தண்ணீரில் ஊறவைப்பதால், வெறும் 15 நிமிடங்களில் கறையைக் கணிசமாகக் குறைத்து, அதன் பளபளப்பை மீட்டெடுக்கும். இருப்பினும், வெள்ளியில் பிடிவாதமான, பழைய கறை இருந்தால், அதையும் முழுமையாக நீக்கும்.
ALSO READ: வெள்ளை ஆடையில் கறையா? இந்த டிப்ஸ் தெரிந்தால் புதுசுபோல் மின்னும்!
எப்போது கவனம் தேவை..?
வெள்ளி நகைகளில் மென்மையான கற்கள், முத்துக்கள் அல்லது சிறப்புப் பூச்சுகள் இருந்தால், இந்த முறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயன்படுத்துவதற்கு முன் ஒரு சிறிய பகுதியில் சோதித்துப் பார்க்க வேண்டும்.