Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bathroom Stains: குளியலறை குழாய்களில் உப்பு நீர் கறைகளா? சட்டென நீக்கும் எளியமுறை மந்திரம்..!

Cleaning Tips: குளியலறை குழாய்கள் மற்றும் கைப்பிடிகள் பெரும்பாலும் துரு, உப்பு நீர் கறைகள் குவிக்கின்றன. நீங்கள் அவற்றை எவ்வளவு சுத்தம் செய்தாலும், அவை போகாது. மேலும், அவற்றின் பளபளப்பு மெதுவாக மங்கிவிடும். இந்த சிக்கலை தீர்க்க சில எளிய வீட்டு குறிப்புகள் உள்ளன.

Bathroom Stains: குளியலறை குழாய்களில் உப்பு நீர் கறைகளா? சட்டென நீக்கும் எளியமுறை மந்திரம்..!
உப்புகறைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Sep 2025 16:42 PM IST

உங்கள் பாத்ரூம், கழிப்பறை, சமையலறையில் உள்ள குழாய்கள் (Bathroom Faucets) மற்றும் கைப்பிடிகளில் படிந்திருக்கும் துரு மற்றும் உப்பு கறைகளை (Salt Water Stains) அடிக்கடி சுத்தம் செய்து உங்களுக்கு கடுப்பாகிவிட்டதா..? எத்தனை முறை சுத்தம் செய்தாலும், அழுக்கு நீங்குவதில்லையா? கடைகளில் கிடைக்கும் விலையுயர்ந்த சுத்தம் செய்யும் பொருட்களை வாங்கி சுத்தம் செய்தாலும், இவை சரியான தீர்வை தருவதில்லை. இந்தநிலையில், இவற்றிற்கு பதிலாக சாதாரண வீட்டுப் பொருட்களைக் கொண்டு இந்தப் பிரச்சினையை எளிதாக சரிசெய்யலாம். இந்த உதவிக்குறிப்புகள் மூலம் நீங்கள் அதிக பணத்தையும் செலவிட தேவையில்லை. இதற்காக நீங்கள் அதிக உழைப்பையும் போட தேவையில்லை. வீட்டில் கிடைக்கும் ஒரு சில பொதுவான பொருட்களைக் கொண்டு நிமிடங்களில் அவற்றின் பளபளப்பை மீண்டும் கொண்டு வரலாம். அவை என்ன மாதிரியான பொருட்கள் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

பேக்கிங் சோடா பேஸ்ட்:

நமக்கு எளிதாக கிடைக்கும் பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து கெட்டியான பேஸ்ட் போல ஆக்குங்கள். துருப்பிடித்த இடங்களில் தடவவும். மென்மையான தூரிகையால் தேய்க்கவும். கறைகள் சில நிமிடங்களில் மறைந்துவிடும்.

ALSO READ: சமைக்கும் இரும்பு கடாயில் விடாப்பிடி துருக்களா..? பெரிதும் உதவும் படிகார ட்ரிக்ஸ்!

எலுமிச்சை:

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் துருவை நேரடியாக அழிக்கும். அதன்படி, உப்பு கறைந்த குழாய் மற்றும் கைப்பிடிகளில் எலுமிச்சை சாற்றைத் தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் சுத்தமான துணியால் மெதுவாகத் துடைக்கவும். கறைகள் மறைந்துவிடும். மேற்பரப்பு மீண்டும் அதன் பளபளப்பைப் பெறும்.

வெள்ளை வினிகர்:

வெள்ளை வினிகரில் ஒரு துணியை நனைத்து, குழாய்களில் தேய்க்கவும். இந்தக் கலவை அழுக்கு மற்றும் துரு இரண்டையும் நீக்கும். மேற்பரப்பு சுத்தமாகவும் பளபளப்பாகவும் மாறும்.

எலுமிச்சை, உப்பு மற்றும் வினிகர் குறிப்பு:

ஒரு கப் எலுமிச்சை சாறு, அரை டீஸ்பூன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். துருப்பிடித்த இடங்களில் தடவவும். இதை, பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் சில துளிகள் வினிகரைச் சேர்க்கவும். 2 முதல் 3 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு சுத்தமான துணியால் துடைக்கவும். இப்போது, உப்பு கறை படித்த குழாய் புதியது போல் ஜொலிக்கும்.

ALSO READ: ஸ்மார்ட் டிவியை இப்படி ஸ்மார்ட்டாக யூஸ் பண்ணுங்க.. நீண்ட ஆண்டுகள் செலவு தராமல் சூப்பரா ஓடும்..!

பாத்திர சோப்பு மற்றும் சூடான நீர்:

பிடிவாதமான கறைகளை நீக்க, நீங்கள் அதிக உழைப்பை போட வேண்டியதாக இருக்கும். இதற்கு பதிலாக, நீங்கள் அன்றாட பயன்படுத்தும் பாத்திரம் கழுவும் சோப்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். அதன்படி, பாத்திரம் கழுவும் சோப்பில் உள்ள கடினமான தன்மையின் பார்முலா பிடிவாதமான கறைகளை நீக்கும். தேய்த்த பிறகு மேற்பரப்பு விரைவாக சுத்தம் செய்யப்படும்.