AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kitchen Hacks: சமைக்கும் இரும்பு கடாயில் விடாப்பிடி துருக்களா..? பெரிதும் உதவும் படிகார ட்ரிக்ஸ்!

How to Clean Rusty Iron Pan: இரும்புச்சட்டியின் அடிப்பகுதியில் கருப்பு கருப்பாக சில திட்டுகள் சேர தொடங்கும். இவற்றை சுத்தம் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. இதற்காக பல மணிநேரம் செலவு செய்தாலும் முற்றிலுமாக சுத்தம் செய்ய முடியாது.

Kitchen Hacks: சமைக்கும் இரும்பு கடாயில் விடாப்பிடி துருக்களா..? பெரிதும் உதவும் படிகார ட்ரிக்ஸ்!
இரும்புச்சட்டி Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Sep 2025 18:41 PM IST

ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் (Kitchen) இரும்புச்சட்டி (Rusty Iron Kadhai) ஒரு இன்றியமையாத பொருளாகும். இது காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து வகையான உணவையும் சமைக்க உதவுகிறது. பிற உணவு தயாரிக்கும் சட்டிகளை காட்டிலும் இரும்பு சட்டியில் சமைப்பது உணவில் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் என்று கூறப்படுகிறது. இதே நேரத்தில், இது நீண்ட காலமாக பயன்படுத்தாமல் விடும்போது துருப்பிடிக்க தொடங்குகிறது. மேலும், தொடர்ந்து சமைக்கும்போது, அதன் அடிப்பகுதியில் கருப்பு கருப்பாக திட்டுகள் சேர தொடங்கும். இவற்றை சுத்தம் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. இதற்காக பல மணிநேரம் செலவு செய்தாலும் முற்றிலுமாக சுத்தம் செய்ய முடியாது. அந்தவகையில், துருப்பிடித்த இரும்பு கடாயை சுத்தம் செய்வதகாக எளிய மற்றும் விரைவான வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: வீட்டை மெல்ல மெல்ல அழிக்கிறதா கரையான்..? எளிதாக விரட்ட சூப்பரான பொருட்கள்!

துருப்பிடித்த கடாயை சுத்தம் செய்வது எப்படி..?

  • துருப்பிடித்த கடாயை சுத்தம் செய்வதற்கு படிகாரம், தண்ணீர், சோப்பு மற்றும் ஒரு ஸ்க்ரப் மட்டுமே போதுமானது. இது க்ளீன் செய்ய எந்த ரசாயனங்களும் தேவையில்லை, மலிவானது மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும்.
  • இதை செய்ய முதலில் உங்கள் துருப்பிடித்த கடாயை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீரை சேர்க்கவும். படிகாரத்தை ஒரு பொடியாக அரைத்து தண்ணீரில் சேர்க்கவும்.
  • தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சோப்பு பொடியை சேர்த்து 5 முதல் 6 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நுரை வர தொடங்கும்போது, துரு மற்றும் அழுக்கு நீங்க தொடங்கும். மேற்பகுதி, விளிம்புகள் மற்றும் பிடிவாதமான கறைகள் உட்பட, பாத்திரத்தின் முழு மேற்பரப்பிலும் நூரை நீர் பரவும் வகையில் ஒரு கரண்டியை கொண்டு சுற்றி ஊற்றிவிடவும்.
  • இதற்கு பிறகு, அடுப்பை ஆப் செய்து கடாயை சிறிது குளிர்விக்க விட்டு, படிகார தண்ணீர் ஒரு கிண்ணத்தில் ஊற்றவும். இப்போது, எகு ஸ்கர்ப்பரை கடாயை மெதுவாக தேய்க்கவும். பின்னர், சுத்தமான துணியால் கடாயை தேய்த்தால், துருக்கள் நீங்கும். மேலும், வருங்காலத்தில் கடாய் துருப்பிடிக்காமல் தடுக்க மேற்பரப்பில் கடுகு என்ணெயை தடவலாம்.

ALSO READ: சமைக்கும்போது உணவில் அதிக உப்பா..? உணவை வீணாக்காமல் இப்படி சரிசெய்யலாம்!

துருவை நீக்குவதில் படிகாரம் ஏன் பயனுள்ளதாக இருக்கிறது..?

பொதுவாகவே, இரும்பு பாத்திரத்தில் உள்ள துரு மற்றும் கருப்பு திட்டுகளை கரைக்கும் லேசான அமில பொருளாக படிகாரம் செய்ல்படுகிறது. இது கடாய் அல்லது பாத்திரத்தில் படியும் எண்ணெய், துரு மற்றும் மசாலா எச்சங்களை நீக்கி, மற்ற முறைகளை விட பாத்திரங்களை வேகமாகவும், எளிதாகவும் சுத்தம் செய்ய உதவி செய்யும்.

படிகாரமானது துரு மற்றும் கருப்பு திட்டுகளை திறம்பட நீக்குகிறது. இந்த முறையின் உதவியுடன், நீங்கள் மணிக்கணக்கில் கடாயை தேய்க்க வேண்டியதில்லை.

Follow Us