செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை… கைகளால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – ஆச்சரிய தகவல்
Health Benefits : வெளிநாட்டு பழக்க வழக்கங்களினால் ஈர்க்கப்பட்டு பலரும் உணவுகளை ஸ்பூன் பயன்படுத்தி சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் கைகளால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் கரண் ராஜன் விளக்கமாக தெரிவித்துள்ளார். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியர்கள் எப்போதும் தங்கள் கைகளால் உணவை சாப்பிட விரும்புகிறார்கள். குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு உணவை எப்படி சாப்பிட்டாலும், அதனை கைகளால் பிசைந்து சாப்பிடுவதில் எதுவும் உங்களுக்கு திருப்தியைத் தருவதில்லை. ஆனால் இன்று, உணவுப் பழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுவை, தயாரிப்பு மற்றும் சாப்பிடுவதில் எல்லாம் வெளிநாட்டு முறைகளைக் கடைபிடிக்க தொடங்கிவிட்டோம். குறிப்பாக பலர் மற்ற நாடுகளின் உணவுகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதாவது, அவற்றை ஒரு ஃபோர்க், அல்லது கரண்டியால் சாப்பிட வேண்டும். மாற்றங்கள் நல்லது என்றாலும், நமது ஆரோக்கியம் மிக முக்கியமானது. கைகளால் சாப்பிடுதவால் செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை மேம்படும்.
உங்கள் கைகளால் சாப்பிடுவதை ஒருபோதும் லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நாம் நினைப்பதை விட அவற்றுக்கு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து பாரம்பரிய உணவுகளை மக்கள் பெரும் கைகளால் தான் சாப்பிடுகிறார்கள். ஆனால் சிலர் நம் கைகளால் சாப்பிடுவதை அசுத்தமாகக் கருதுகின்றனர். செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை, உங்கள் கைகளால் சாப்பிடுவதே சிறந்த வழி.
இதையும் படிக்க : அதிக மன அழுத்தம் முடி உதிர்வை ஏற்படுத்துமா..? சரிசெய்வது எப்படி..?




இங்கிலாந்தைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கரண் ராஜன் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். நீங்கள் உங்கள் கைகளால் சாப்பிடும்போது, இந்த செயல்முறை செரிமான நொதிகளை எளிதாக்குகிறது மற்றும் குடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. சாப்பிடும்போது கை சுகாதாரம் எப்போதும் மிக முக்கியமான விஷயம் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.
நன்மைகள் என்ன?
உங்கள் கைகளால் சாப்பிடுவது உங்கள் விரல்கள் மற்றும் கை தசைகளை நகர்த்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது.
உங்கள் கைகளால் சாப்பிடுவது வாய் மற்றும் வயிற்றில் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்றில் உருவாகும் வீக்கம் மற்றும் வாயுத்தொல்லையையும் குறைக்கும்.
உங்கள் கைகளால் சாப்பிடுவது உங்களுக்கு திருப்தியைத் தருகிறது. மேலும் இது நம்மை அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது. ஆரோக்கியமான எடையை பராமரிக்க இது சிறந்த வழியாகும். ஆனால் ஸ்பூன் கொண்டு சாப்பிடும்போது அது நம்மை அதிகம் சாப்பிட தூண்டுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும் அபாயமும் இருக்கிறது.
இதையும் படிக்க : துணிகளில் எண்ணெய்- டீ கறைகளா..? நொடிப்பொழுதில் இப்படி நீக்கலாம்!
உங்கள் கைகளால் சாப்பிடுவது நமது தோல், வாய் மற்றும் குடலில் காணப்படும் சில நல்ல பாக்டீரியாக்களுக்கு நன்மை பயக்கும், இதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் தொற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் திறனை அதிகரிக்கும்.