Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மூளையை இளமையாக வைத்திருக்கும் சீக்ரெட் இதுதான் – 33 வருட அனுபவம் கொண்ட மருத்துவர் பகிர்ந்த தகவல்

Brain Health : நம் அனைத்து செயல்பாடுகளையும் தீர்மானிப்பது மூளை தான். இந்த நிலையில் மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் வகையில் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நியூரோசர்ஜன் டாக்டர் பிரஷாந்த் 3 முக்கிய விஷயங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மூளையை இளமையாக வைத்திருக்கும் சீக்ரெட் இதுதான் – 33 வருட அனுபவம் கொண்ட மருத்துவர் பகிர்ந்த தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Sep 2025 16:14 PM IST

மனதை தெளிவாகவும், நினைவாற்றலை வலுவாகவும், கவனத்தை சிதறாமல் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் வயது அதிகரிக்கும் போது மூளையின் செயல்பாடுகள் குறைந்து விடுகிறது. மூளை (Brain) தான் நம் செயல்பாடுகள் அனைத்துக்கும் முக்கிய காரணம். மூளையின் செயல்பாடுகளை பொறுத்தே நம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. அதற்கு மூளையை இளமையாக வைத்திருப்பது அவசியம்.  இந்த நிலையில் இதற்கான எளிய தீர்வை 33 ஆண்டுகள் அனுபமிக்க நியூரோ சர்ஜன் டாக்டர் பிரஷாந்த் கட்கோல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், அன்றாடம் நாம் மேற்கொள்ளும் சிறிய பழக்கங்களை நம் மூளையின் செயல்பாட்டை இளமையாக வைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மூளை சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

புதியதை கற்றுக்கொள்

டாக்டர் பிரஷாந்த் கூறிய முதல் பழக்கம் தினமும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது. புதிர் விளையாட்டுகள், புதிய திறனை கற்றுக்கொள்ளுதல் போன்றவை மூளையை இளமையாக வைத்திருக்க உதவும். குறிப்பாக தினமும் நடக்கும் பாதையில் இருந்து விலகி புதிய பாதைகளில் நடப்பது, சவால்களை எதிர்கொள்வது போன்றவை தான் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

இதையும் படிக்க : பலவீனமான பற்களால் அவதியா..? வலுவாக்க உதவும் 5 இயற்கை வழிகள்!

டாக்டர் பிரஷாந்த் பகிர்ந்த சீக்ரெட்

 

மூச்சுப் பயிற்சி

அடுத்ததாக அவர் வலியுறுத்தும் விஷயம் மூச்சுப் பயிற்சி. உங்கள் வாழ்க்கையே உங்கள் மூச்சை அடிப்படையாகக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு எளிய மூச்சு முயற்சி மேற்கொள்ளவும். உதாரணமாக நல்ல அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்து, கவனத்தை நெற்றிக்கு நடுவே செலுத்தவும், பின்னர் மூச்சை நான்கு நொடிகள் உள்ளே இழுத்து, 4 நொடிகள் தக்க வைக்கவும். பின்னர் 4 நொடிகளில் வெளிே விடவும். இந்த பயிற்சி மனதை அமைதிப்படுத்தி மூளையை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் என அவர் விளக்குகிறார்.

இதையும் படிக்க : கண்ணாடி அணிவதால் சரும தோற்றத்தில் தொய்வா? மூக்கின் கரும்புள்ளிகளை இப்படி அசால்ட்டாக போக்கலாம்!

சமூக உறவுகள்

அவர் வலியுறுத்தும் மூன்றாவது பழக்கம் சமூக வட்டத்தை வலுப்படுத்துவது. தனிமை ஒரு மோசமான உணவைப் போல மூளைக்கு தீங்கு விளைவிக்கும். நண்பர்களுடன் தொடர்புகொண்டு மனம் விட்டு பேசுங்கள். சிறிய குழுக்களில் சேர்ந்து சிறித்து மகிழுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் பிரஷாந்த் கட்கோலின் அறிவுரையின் படி மூளை இளமையாக இருக்க தேவையான மூன்ற விஷயங்கள், மனதை சவாலுக்கு உட்படுத்துதல், மூச்சுப் பயிற்சி, சமூக உறவுகளை வளர்த்தல் என குறிப்பிட்டுள்ளார்.  இவை அனைத்தும் தினசரி நாம் மேற்கொள்ளும் எளிய பயிற்சிகளின் வாயிலாகவே மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என நமக்கு உணர்த்துகின்றன. இவை செய்வதற்கு மிகவும் எளிமையானதும் கூட.