உங்கள் மூளையை இளமையாக வைத்திருக்க வேண்டுமா? இந்த 10 பழக்கங்களை டிரை பண்ணுங்க!
Boost Your Brain Health ; உங்கள் வயது எதுவாக இருந்தாலும், உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பதன் மூலம் மனம் இளமையாக இருப்பது சாத்தியம். தினசரி வாழ்க்கையில் சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், நினைவாற்றல், சிந்தனை திறன், மன ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பது அவரது மூளையின் (Brain) செயல்பாடுகளே தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புகிறீர்களா? அதற்கு உங்கள் மூளையை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது அவசியம். சில எளிய பழக்கவழக்கங்கள் (Habits) மூலம் நமது நினைவாற்றலையும் சிந்தனையையும் மேம்படுத்த முடியும். இது நம் தினசரி செயல்பாடுகளையும் மேம்படுத்தும். மேலும் அவை நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல், உங்கள் மூளையை இளமையாகவும் கூர்மையாகவும் வைத்திருக்கும் பத்து பழக்கங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மூளை சுறுசுறுப்பாக இருக்க கடைபிடிக்க வேண்டிய 10 பழக்கங்கள்
- புதிய பழக்கங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆன்லைன் கோர்ஸ் மூலம் இதுவரை தெரியாத ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள். குவிஸ் புரோகிராமில் கலந்துகொள்ளுங்கள். இவை அனைத்தும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
- தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் செயல்பாடு மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது நினைவாற்றல் குறைவதை தடுக்கிறது.
இதையும் படிக்க: தினசரி வாழ்வில் சோர்வை சமாளிக்க வேண்டுமா? இதை செய்தாள் போதுமா?
- மூளை ஆரோக்கியத்துக்கு தேவையான உணவுகளை உண்ணுங்கள்: கீரைகள், பெர்ரி, நட்ஸ், ஒமேகா-3 நிறைந்த மீன் மற்றும் சிறு தானியங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- ஒரு நாளைக்கு 7-8 மணிநேரம் தடையற்ற தூக்கம் அவசியம். இது மூளைக்கு தேவையான ஓய்வை வழங்கி நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
- மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள். நாள்பட்ட மன அழுத்தம் மூளை செல்களை சேதப்படுத்தும். யோகா, தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நடைபயிற்சி போன்றவற்றைச் செய்யுங்கள். இவை உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எப்பொழுதும் தொடருங்கள். உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். இது உங்கள் மனதின் கவலையை குறைத்து மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும்.
இதையும் படிக்க: இரவில் தூங்க முடியவில்லையா? அப்போ இத டிரை பண்ணுங்க.. நொடியில் தூக்கம் வரும்!
- சிகரெட் மற்றும் மது பழக்கங்களைத் தவிர்க்கவும்: இவை இரண்டும் மூளைக்கு மிகவும் ஆபத்தானவை. இவை மறதியை ஏற்படுத்தும்.
- நிறைய தண்ணீர் குடிக்கவும். உடலில் நீர் குறைவது மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது. பகலில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம்.
- உங்கள் தலையைப் பாதுகாக்கவும். தலையில் ஏற்படும் காயங்கள் நீண்டகால நினைவாற்றல் பிரச்னைகள் மற்றும் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து உங்கள் தலையைப் பாதுகாக்கவும்.
- புத்தகம் படியுங்கள். உங்களுக்கு பிடித்த கதை புத்தகங்களை படிப்பதன் மூலம் உங்கள் மனம் தூய்மையாக இருக்கும்.
இந்தப் பழக்கங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம், உங்கள் மூளையை நீண்ட காலத்திற்கு சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.