இரவில் தூங்க முடியவில்லையா? அப்போ இத டிரை பண்ணுங்க.. நொடியில் தூக்கம் வரும்!
Night Bathing Health Impact : சிலர் பகலில் குளித்தாலும் இரவிலும் குளிக்க விரும்புகிறார்கள். குறிப்பாக கோடைகாலங்களில் இரவில் குளிப்பது வெப்பத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. அது மட்டுமல்லாமல் இரவில் குளிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பலர் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளிக்க விரும்புகிறார்கள். சிலர் பகலில் குளித்தாலும் இரவில் குளிப்பதை விரும்புகிறார்கள். குளிர்காலத்தில் இதைச் செய்யாமல் இருக்கலாம், ஆனால் கோடையில் வெப்பத்திலிருந்து தப்பிக்க பலரும் இதனை செய்கிறார்கள். இது குறித்து கான்பூரில் (Kanpur) உள்ள லோஹியா மருத்துவமனையின் டாக்டர் சைலேந்திர மிஸ்ரா கூறுகையில், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். இது மன அழுத்தத்தைக் (Stress) குறைக்கிறது. இது நாள் முழுவதும் ஏற்படும் சோர்வையும் ஒரு நொடியில் நீக்குகிறது. குறிப்பாக கோடையில் (Summer) குளிக்கும்போது தண்ணீர் மிகவும் சூடாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஏனெனில் அது உடல் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கும். இது உங்களை மிகவும் சூடாக உணர வைக்கலாம். எனவே, கோடை காலத்தில் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்க முயற்சி செய்யுங்கள். இரவில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சோர்வு நீங்கும்
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளிப்பது பகலில் ஏற்பட்ட சோர்வைப் போக்க உதவும். பகல் முழுவதும் வேலை செய்வதால் உடல் ஒரு தளர்ந்து விடுகிறது. இரவில் குளிப்பது, நாள் முழுவதும் உடலில் சேர்ந்திருக்கும் கிருமிகள் மற்றும் தொற்றுகளை நீக்குகிறது. இது நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
நன்றாகத் தூக்கம் வரும்
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், பலருக்கு போதுமான தூக்கம் கிடைப்பதில்லை. இரவில் சரியாகத் தூக்கம் வராத சிலர் இருக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒருவர் உடல்நலம் தொடர்பான பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஹெல்த்லைன் படி, இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளிப்பது உங்களுக்கு தூக்கத்தை வரவழைக்கும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.




மனநிலை நன்றாக இருக்கும்
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளிப்பதால் பல நன்மைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, இரவில் குளிப்பது உங்கள் மனநிலையை மேம்படுத்தும். வேலையில் மன அழுத்தம் நிறைந்த நாளுக்குப் பிறகு, இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு குளிப்பதன் மூலம் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
சருமத்திற்கு நல்லது
முகத்தில் முகப்பரு ஏற்படுவதற்குக் காரணம், நாள் முழுவதும் தோலில் வியர்வை மற்றும் அழுக்கு இருப்பதுதான். அத்தகைய சூழ்நிலையில், இரவில் குளிப்பது சருமத்தை சுத்தப்படுத்தும். இதைச் செய்வதன் மூலம், சருமப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். சருமமும் ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் மாறும்.