AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவில் வயதான தோற்தத்தை ஏற்படுத்தும் 6 பழக்கங்கள் – விவரம் இதோ!

Slow Down Aging : சிலருக்கு வெகு விரைவிலேயே வயதான தோற்றம் வந்துவிடும். இதற்கு தவறான உணவு பழக்கமும் வாழ்க்கை முறையும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த கட்டுரையில் விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் 7 காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் வயதான தோற்தத்தை ஏற்படுத்தும் 6 பழக்கங்கள்  – விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Jun 2025 21:16 PM IST

சிலருக்கு விரைவிலேயே வயதான தோற்றம் வந்து விடுகிறது. நமது அன்றாடம் எடுத்துக்கொள்ளும் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் நமது ஆரோக்கியத்தை கடுமையாகப் பாதிக்கின்றன. இது வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முதல், மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களுக்கு எவ்வளவு விரைவில் வயதாகும் என்பதை தீர்மானிக்கும். இது மட்டுமல்லாமல் இந்தப் பழக்கவழக்கங்கள் நீண்டகால ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. வாழ்க்கை முறை தொடர்பான நமது தேர்வுகள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த கட்டுரையில் வயதான தோற்றம் அளிக்கும் முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

1.புகைபிடித்தல்

வயதான செயல்முறையை துரிதப்படுத்துவதில் புகைபிடித்தல் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை சேதப்படுத்தும். இது இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. சுருக்கங்கள் ஏற்படுவதற்கும் மந்தமான சருமத்திற்கு வழிவகுக்கிறது. இது கல்லீரல் உட்பட முழு உடலின் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

2.மது அருந்துதல்

அதிகப்படியான மது அருந்துதல் வயதான தோற்றத்தை அளிக்கும். ஆல்கஹால் சருமத்தை நீரிழப்பு செய்கிறது. வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான மது அருந்துதல் காலப்போக்கில் கல்லீரல் செயல்பாட்டை சேதப்படுத்தும்.

3.அதிக வெப்பம்

உடலுக்கு வைட்டமின் டி பெறுவற்கு சூரிய ஒளி அவசியம். இருப்பினும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளியில் வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது தோல் வயதாவதை துரிதப்படுத்துகிறது. நீங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தாவிட்டால் அல்லது சூரியக் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க ஏற்ற ஆடைகளை அணியவில்லை என்றால், சூரிய ஒளி உங்கள் சருமத்தில் சுருக்கங்களை உருவாக்கி, வயதான செயல்முறையை துரிதப்படுத்தும்.

4.தண்ணீர் குடிக்காமல் இருப்பது

சரியான அளவில் அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் சருமம் வறண்டு, பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.

5.பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வளர்சிதை மாற்றத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், தோலில் பிரச்னைகள் மற்றும் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. இது சருமத்தின் பொழிவை குறைப்பது மற்றும் சுருக்கங்கள் போன்ற முதுமையின் முன்கூட்டிய அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

6.மன அழுத்தம்

மன அழுத்தம் தான் வயதானதற்கு முக்கிய காரணம். நாள்பட்ட மன அழுத்தம் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது. தூக்கத்தைப் பாதிக்கும். முகத்தில் கரும்புள்ளிகள் அல்லது கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்பட வழிவகுக்கும். மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்  பிராணயாமா பயிற்சி செய்வது ஒரு நல்ல வழியாகும்.

Follow Us