Kitchen Tricks: சமைக்கும்போது உணவில் அதிக உப்பா..? உணவை வீணாக்காமல் இப்படி சரிசெய்யலாம்!
Cooking Home Remedies: உணவில் அதிக உப்பு என்பது சமையலறையில் மிகவும் பொதுவான 'விபத்து'. அவசரமாகவோ அல்லது தவறுதலாகவோ, கொஞ்சம் கூடுதல் உப்பு முழு உணவின் சுவையையும் கெடுத்துவிடும். இருப்பினும், இந்த சிக்கலை பல சிறிய வீட்டு தந்திரங்களை மேற்கொள்வதன்மூலம் சரி செய்யலாம்.

நாம் சாப்பிடும் உணவுக்கு உப்பு (Salt) என்பது மிகவும் முக்கியமானது. உப்பின் சுவை கூடினாலோ அல்லது குறைந்தாலோ அது சரியான சுவையை தராது. உப்பு குறைவாக இருந்தால் கூட சிறிது சேர்த்து அதை சரி செய்துவிடலாம். அதேநேரத்தில், உப்பு சமைக்கும் உணவில் (Cooking) அதிகரித்தால் மொத்தமாக சமைத்த அனைத்து உணவையும் தூக்கி எறியும்படி ஆகிவிடும். உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ எவ்வளவு கவனுடன் சமைத்தாலும், திடீரென்று நீங்கள் தெரியாமல் அதிகமாக உப்பு சேர்த்து வீட்டீர்கள் என்றால், இதனால் அதிர்ச்சியடைவீர்கள். உணவில் அதிக உப்பு என்பது சமையலறையில் மிகவும் பொதுவான ‘விபத்து’. அவசரமாகவோ அல்லது தவறுதலாகவோ, கொஞ்சம் கூடுதல் உப்பு முழு உணவின் சுவையையும் கெடுத்துவிடும். இருப்பினும், இந்த சிக்கலை பல சிறிய வீட்டு தந்திரங்களை மேற்கொள்வதன்மூலம் சரி செய்யலாம். அந்த குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
ALSO READ: சட்டையில் இடது பக்கம் மட்டும் ஏன் பாக்கெட் இருக்கிறது? உண்மை என்ன?
உருளைக்கிழங்கு:
சமையலறையில் பொதுவாகவே சமைக்கும்போது உப்பு அதிகம் கூடிவிட்டால், உருளைக்கிழங்கு மந்திரத்தையே பெரியவர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். அதன்படி, அதிக உப்பு உள்ள சமையல் பாத்திரத்தில் தோல் நீக்கிய பச்சையான உருளைக்கிழங்கை சேர்க்கவும். இப்படியாக உருளைக்கிழங்கை சேர்க்கும்போது உப்பை உறிஞ்சிவிடும். சில நிமிடங்களுக்குப் பிறகு உருளைக்கிழங்கை எடுத்துவிடவும். இது உணவின் உப்புத்தன்மை கணிசமாகக் குறைக்க உதவி செய்யும்.




அரிசி அல்லது அரிசி மாவு:
நீங்கள் சமைக்கும் சூப், குழம்பு போன்றவை அதிக உப்புத்தன்மை கொண்டதாக இருந்தால், அதில் ஒரு கைப்பிடி அரிசி அல்லது அரிசி மாவை சில நிமிடங்கள் ஒரு துணியில் கட்டி கொதிக்க விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு அதை அகற்றவும். இது அதிகப்படியான உப்பை உறிஞ்சி சுவையை சமநிலைப்படுத்தும்.
புளிப்பு:
நீங்கள் ஆசையாக சமைக்கும் பருப்பு அல்லது குழம்பு போன்ற உணவுகளில் உப்பு அதிகரித்து விட்டால் தக்காளி, புளி அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இந்த புளிப்பு சுவை உப்பை பெருமளவில் குறைத்து, உணவை மிகவும் சுவையாக மாற்றும்
பால் அல்லது தயிர்:
பால், கிரீம் அல்லது தயிர் ஆகியவற்றை உப்பு அதிகமான குழம்பில் சேர்ப்பது உப்பு அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், உணவின் அமைப்பையும் வளமாக்கும்.
ALSO READ: தயிரும், யோகர்ட்டும் ஒன்றா..? வேறுபட்டவையா..? இதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
மற்றொரு எளிய வழி..
உங்களுக்கு நேரம் இருந்தால், எளிதான வழி என்பது அதன் அளவை அதிகரிப்பதுதான். உதாரணமாக, குழம்பு போன்றவற்றில் உப்பின் சுவை அதிகமாக இருந்தால், கூடுதலாக உருளைக்கிழங்கு, காய்கறிகள் அல்லது தண்ணீரைச் சேர்க்கவும்.
நீங்கள் சமைக்கும்போது உப்பு அதிகமாக இருந்தால், கவலையோ பதட்டமோ கொள்ளாமல் புத்திசாலித்தனமாக செயல்படுவது முக்கியம். அதன்படி, உருளைக்கிழங்கு, எலுமிச்சை மற்றும் தயிர் வரை இந்த வீட்டு பொருட்களை பயன்படுத்தி உப்பு அதிகரித்ததை சரி செய்யலாம்.