Yogurt vs Curd: தயிரும், யோகர்ட்டும் ஒன்றா..? வேறுபட்டவையா..? இதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
Yogurt vs Curd Difference: தயிர் மற்றும் யோகர்ட் என இவை இரண்டும் பாலை புளிக்கவைத்து தயாரிக்கப்படும் பால் பொருட்கள் என்றாலும், தயிர் மற்றும் யோகர்ட் தயாரிப்பு முறையில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளின்படி வேறுபடுகின்றனர். தயிர் மற்றும் யோகர்ட் என இரண்டிலும் குறைந்த கலோரிகள் உள்ளன.

சமையலறையில் இருக்கும் தயிர் (Curd) மற்றும் யோகர்ட் (Yogurt) என்ற பால் பொருட்களை பலரும் ஒன்று என்று நினைக்கிறார்கள். இது தொடர்பாக குழப்பியும் கொள்கிறார்கள். அந்தவகையில், இது உண்மையில் ஒன்றுதானா..? அப்படி இல்லையென்றால் இவை இரண்டும் வேறு வேறு பொருட்களா என்பது தெரிந்து கொள்வது முக்கியம். தயிர் மற்றும் யோகர்ட் என இவை இரண்டும் பாலை புளிக்கவைத்து தயாரிக்கப்படும் பால் பொருட்கள் (Milk Products) என்றாலும், தயிர் மற்றும் யோகர்ட் தயாரிப்பு முறையில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளின்படி வேறுபடுகின்றனர். அதன்படி, வலைதளங்களில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் தயிர் மற்றும் யோகர்ட்டின் முக்கிய வேறுபாடுகளை வேறுபடுத்தி பார்ப்போம்.
தயிர் என்றால் என்ன..?
நம் கடைகளில் வாங்கும் பாக்கெட் தயிரானது எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்ற இயற்கையான அமிலத்தன்மையை பயன்படுத்தி பாலை தயிராகும் ஒரு முறையாகும். அதேநேரத்தில், பெரும்பாலான இந்திய வீடுகளில் தயிர் தயாரிக்க, சூடான பாலை ஆறவைத்து, அதனுடன் பழைய தயிர் சேர்த்து இரவு முழுவதும் வைக்கப்படுகிறது. இது பழமையான தயிர் தயாரிக்கும் முறையாகும். இதனால், மறுநாள் பிரஷான தயிர் உருவாகிறது. இந்த வகை தயிர்களில் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் இருக்கும். இதன் தரமானது அளவு மற்றும் தயாரிப்பை பொறுத்தது. மேலும், சாப்பிடும்போது இயற்கையான புளிப்பு சுவையை கொடுக்கும்.
ALSO READ: எலுமிச்சையை நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் வழிகள்!
யோகர்ட் என்றால் என்ன..?
யோகர்ட் என்பது லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ் போன்ற குறிப்பிட்ட பாக்டீரியாவை பயன்படுத்தி பாலை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. இவை சரியான முறையில் தரப்படுத்தப்பட்டு மென்மையான தன்மை, புளிப்பு மற்றும் சீரான புரோபயாடிக் நன்மைகளை கொடுக்கும். இவை, தயிரை போலல்லாமல், கெட்டியாகவும், தரத்தில் மிகவும் சீரானதாக இருக்கும்.
தயிரும், யோகர்ட்டும் ஒன்றா..?
மேலே அளிக்கப்பட்ட தகவலின்படி, வித்தியாசங்களை பார்த்தால், தயிரும், யோகர்டும் ஒரே மாதிரியானவை அல்ல. இவை இரண்டும் புளிக்கவைக்கப்பட்ட பால் பொருட்கள் என்றாலும், பயன்படுத்தப்படும் பாக்டீரியாவை பொறுத்து வேறுபடுகின்றன. நொதித்தல் செயல்முறையை பொறுத்து யோகர்ட்டில் புரோபயாடிக்கள் இருக்கலாம் அல்லது சேர்க்கப்படலாம். இருப்பினும், நாம் தயாரிக்கும் தயிர்களில் குடலுக்கு நன்மை பயக்கும் உயிருள்ள புரோயபாடிக்கள் உள்ளன என்று அறிவியல் ரீதியாக தெரிவிக்கப்பட்டது.
ALSO READ: அரிசியை கழுவாமல் சமைத்தால் என்ன நடக்கும்? அதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?
ஊட்டச்சத்துகள்:
யோகர்ட்:
கால்சியம், புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் அதிகம். ஆனால், செரிமானத்திற்கு உதவும் என்றாலும், புரோபயாடிக் அளவு கேள்விக்குறியாக உள்ளது.
தயிர்:
புரதம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் புரோபயாடிக்கள் அதிகமாக இருக்கும். இது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, குடல் நுண்ணுயிரியல் சமநிலையை ஆதரிக்கிறது.
அதேநேரத்தில், எடை குறைக்க இதில் இரண்டில் எது சிறந்தது என்று பார்த்தால், தயிர் மற்றும் யோகர்ட் என இரண்டிலும் குறைந்த கலோரிகள், அதிக புரதம் கொண்டவையாக உள்ளது. இவை இரண்டும் எடையை குறைக்க உதவி செய்யும்.