Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரிசியை கழுவாமல் சமைத்தால் என்ன நடக்கும்? அதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?

Rice washing decoded : நமது வீடுகளில் அரிசியை சமைப்பதற்கு முன்பு குறைந்தது 2 முதல் 3 முறை நன்றாகக் கழுவப்படுவதை நாம் பார்த்திருப்போம். சமைப்பதற்கு முன் அரிசியை கழுவுவது அவசியமா? அதன் பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அரிசியை கழுவாமல் சமைத்தால் என்ன நடக்கும்? அதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Jul 2025 23:06 PM

நாம் அன்றாட உணவின் முக்கிய பகுதியாக அரிசியை சாப்பிடப் பழகிவிட்டோம். பலர் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவாக அரிசியை எடுத்துக்கொள்கிறார்.  சாதாரணமாக அரிசி சாதம்,  பிரியாணி, ஃபிரைட் ரைஸ் என  பல்வேறு வகைகளில் அரிசி உணவுகளை எடுத்துக்கொள்கிறோம்.  பொதுவாக நமது சமையலறையில் அரிசியில் எந்த உணவைச் செய்தாலும், சமைப்பதற்கு முன்பு அரிசியைக் குறைந்தது 2 முதல் 3 முறை நன்கு கழுவுவதைப் பார்க்க முடியும். பொதுவாக அனைவரும் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். சமைப்பதற்கு முன் அரிசியைக் கழுவுவது அவசியமா? உங்களுக்கு எப்போதாவது சந்தேகம் வந்திருக்கிறதா? அரிசியைக் கழுவாமல் சமைத்தால் என்ன ஆகும்? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சமைப்பதற்கு முன் அரிசியைக் கழுவுவது அவசியமா?

கிருமிகளையும் அழுக்கையும் அகற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவுவது போல, அரிசியையும் கழுவ வேண்டும். ஏனென்றால் அரிசி வயலில் இருந்து ஆலைக்குச் செல்கிறது. அங்கிருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும்போது, அரிசியில் அழுக்கு, தூசி மற்றும் மணல் படிந்துவிடும் அபாயம் உள்ளது. அதனால்தான் அரிசியைக் கழுவுவது மிகவும் முக்கியமானது. கடந்த 2021 ஆம் ஆண்டில் ஜர்னல் ஆஃப் ஹசார்டஸ் மெட்டீரியல்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, அரிசியை பேக்கேஜிங் செய்யும் போது மைக்ரோபிளாஸ்டிக் அரசியில் கலந்துவிட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறது. அதனால்தான் சமைப்பதற்கு முன்பு அரிசியை நன்கு கழுவுவது அவசியம். இதைச் செய்வதன் மூலம் அரிசியிலிருந்து 20 முதல் 40% வரை மைக்ரோபிளாஸ்டிக்கை அகற்ற முடியும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இதையும் படிக்க : சுவையில் தாறுமாறு தக்காளி பிரியாணி.. எளிதாக எப்படி செய்து அசத்துவது..?

நச்சுப் பொருட்களை அகற்ற உதவுகிறது

அரிசியை நன்கு கழுவுவது அதில் உள்ள ஆர்சனிக் செறிவைக் குறைக்கிறது. ஆர்சனிக் இயற்கையாகவே மண்ணிலும் நீரிலும் காணப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. எனவே, அரிசியை நன்கு கழுவுவதன் மூலம் அதில் காணப்படும் நச்சு கூறுகளை அகற்ற முடியும்.

இதையும் படிக்க : கோதுமை மாவு இப்படி பயன்படுத்தாதீங்க! இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்!

அரிசியைக் கழுவி சமைப்பதன் நன்மைகள்

அரிசியைக் கழுவி சமைப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அரிசியில் உள்ள தூசி, அழுக்கு மற்றும் கிருமிகள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இவை தொடர்ந்து உடலுக்குள் நுழைந்தால், அவை பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்தும். செரிமான பிரச்னைகள் மற்றும் ஒவ்வாமை ஏற்படலாம். எனவே, சமைப்பதற்கு முன்பு அரிசியை நன்கு கழுவுவது அவசியம். அரிசியை சமைப்பதற்கு முன் இரண்டு அல்லது மூன்று முறை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவவும். இது அரிசியின் சுவையையும் தரத்தையும் அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மேலும், அரிசியைக் கழுவாமல் சமைத்தால், அரிசியின் சுவை மாறக்கூடும். சில நேரங்களில் அரிசி மோசமான வாசனையையும் ஏற்படுத்தக்கூடும். அதனால்தான் அரிசியை நன்றாகக் கழுவ வேண்டும்.