Mud Stain Removal: துணிகளின் மீது விடாப்பிடி சேற்று கறையா..? இவற்றை எப்படி நீக்குவது..?
Remove Mud Stains from Clothes: மழைக்காலத்தில் துணிகளில் படிந்த சேறு கறைகளை எளிதாக அகற்றும் வழிமுறைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது. உடனடியாக சோப்பு மற்றும் பிரஷ்ஷினால் தேய்த்து சுத்தம் செய்யவும், குளிர்ந்த நீரில் துவைக்கவும். பிடிவாதமான கறைகளுக்கு, பேக்கிங் சோடா அல்லது வினிகர் கரைசலை பயன்படுத்தலாம்.

வெயில் காலம் (Summer) முடிந்து மழைக்காலம் (Rainy Season) தொடங்கி பல்வேறு பகுதிகளில் படையெடுக்க தொடங்கிவிட்டது. இந்த மழைக்காலம் பலருக்கும் மிகவும் இனிமையானதாக இருந்தாலும், மழையால் ஏற்படும் பிரச்சனைகள் பெரிய தொல்லையாக மாறும். அதில், மிகப்பெரிய பிரச்சனை சேறு. பல நேரங்களில் மழைக்காலத்தில் நாம் வெளியே செல்லும்போது சேறு (Mud) நம் துணிகள் மீது தெறித்துவிடும். இந்த துணிகளை சுத்தம் செய்வதில் நாம் நிறைய சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் பெரும்பாலான மக்கள் மிகப்பெரிய கவலையை தரும். உங்கள் வீட்டின் சிறு பிள்ளைகள் அல்லது வீட்டில் உள்ள ஒருவரின் துணிகள் சேறு பட்டு கறைகள் சுத்தம் செய்யப்படாவிட்டால், நீங்கள் சில குறிப்புகளைப் பின்பற்றலாம். இது எளிதாக கறையை நீக்கும்.
துணிகளில் இருந்து சேறு கறைகளை எப்படி நீக்கலாம்..?
துணிகளில் சேறு பட்டவுடன் முடிந்தவரை உடனடியாக அந்த துணியை சுத்தம் செய்ய முயற்சி செய்யுங்கள். ஏனெனில் சேறு படிந்த நீண்ட நேரம் ஆகிவிட்டால், அதை சுத்தம் செய்வது சற்று கடினமாகிவிடும். இது தவிர, முதலில் சேறின் மீது தண்ணீர் ஊற்றாமல் சோப்பு மற்றும் பிரஸ் உதவியுடன் சுத்தம் செய்யுங்கள். பின்னர், குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய முயற்சிக்கவும். இது தண்ணீரில் சுத்தம் செய்யப்படாவிட்டால், நீங்கள் சோப்பு பயன்படுத்தலாம்.
ALSO READ: மழைக்காலத்தில் முடி உதிர்வை தடுப்பது எப்படி? இயற்கை வழிமுறைகள் இதோ!




வினிகரின் பயன்பாடு:
பிடிவாதமான சேற்று கறைகளை நீக்க வினிகரைப் பயன்படுத்தலாம். தண்ணீரில் வினிகரை கலந்து சிறிது நேரம் துணியில் விட்டு, பின்னர் தண்ணீரில் கழுவவும். இது தவிர, சேறு கறைகளை நீக்க எலுமிச்சை சாற்றையும் பயன்படுத்தலாம். சேற்று கறையின் மீது எலுமிச்சை சாற்றை தடவி, சிறிது நேரம் கழித்து துணியை சுத்தமாக தண்ணீரில் கழுவினால் கறை நீங்கும்.
சமையல் சோடா பயன்படுத்தவும்:
இந்த கறை கொஞ்சம் பிடிவாதமாக இருந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இந்தப் பேஸ்ட்டை கறை படிந்த இடத்தில் தடவி, சிறிது நேரம் அப்படியே விட்டு, பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவவும். இப்படிச் செய்வதன் மூலம், சேற்று கறை எளிதில் நீங்கும். பேக்கிங் சோடாவில் இயற்கையான கறை நீக்கும் தன்மையை கொண்டுள்ளதால், இது சேற்று கறைகளை அகற்ற உதவுகிறது.
ALSO READ: மழைக்காலத்தில் வாகனம் ஓட்டும் நபரா நீங்கள்..? இந்த விஷயங்களில் கவனம்!
ட்ரை க்ளீன்:
இந்த சேறு படிந்த துணிகளை நீங்கள் கையால் துவைக்கலாம் அல்லது சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். இந்த குறிப்புகள் அனைத்தையும் பயன்படுத்திய பிறகும், சிறிது சேறு எஞ்சியிருந்தால், இந்த துணிகளை ட்ரை க்ளீன் செய்ய கொடுக்கலாம். இந்த குறிப்புகள் அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம், மழைக்காலத்தில் கறை படிந்த துணிகளை முறையாக சுத்தம் செய்யலாம்.