Towel Hygiene: 2 நாட்களில் துண்டுகள் ஏன் துர்நாற்றம் வீசுகின்றன? பாக்டீரியா வளர்ச்சியை எப்படி தடுக்கலாம்?
Bacteria in Towels: துண்டுகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சிக்கு ஏற்ற இடமாகும். ஈரப்பதம், வெப்பம், மற்றும் உடல் செல்கள் இதற்கு உதவுகின்றன. துண்டுகளை மூன்று அல்லது நான்கு பயன்பாட்டிற்குப் பிறகு துவைப்பது நல்லது. ஈரமான துண்டுகளை உடனடியாக துவைத்து சூரிய வெளிச்சத்தில் உலர வைப்பது அவசியம்.

ஒரு துண்டை (Towels) எத்தனை முறை துவைத்தாலும், அது ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்த முடியாததாகிவிடும். அதாவது, அதிலிருந்து ஒரு துர்நாற்றத்தை வெளியிட தொடங்கும். இதை சகித்துகொள்ள முடியாது. துவைத்த 2 நாட்களுக்குள் துண்டுகள் ஏன் அடிக்கடி அழுக்காகின்றன? இவை ஏன் துர்நாற்றம் வீசுகின்றன உள்ளிட்ட உண்மையான காரணத்தை என்னவென்று தெரிந்து கொள்வோம். நிபுணர்களின் கூற்றுப்படி, துண்டுகள் பாக்டீரியா (Bacteria) மற்றும் பூஞ்சை வளர ஏற்ற இடமாகும் இருக்கிறது. இதில், பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளர தொடங்கும். நுண்ணுயிரிகள் வளரத் தேவையான நீர், சூடான சூழல், ஆக்ஸிஜன் மற்றும் pH ஆகியவற்றை துண்டுகள் கொண்டிருக்கின்றன. துண்டுகள் உலர்ந்தாலும், இறந்த மனித உடல் செல்கள் குவிகின்றன. இதன் விளைவாக, பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் உணவாக எடுத்து கொள்கின்றன.
ALSO READ: துணிகளின் மீது விடாப்பிடி சேற்று கறையா..? இவற்றை எப்படி நீக்குவது..?
தடுக்க என்ன செய்யலாம்..?
மனித உடலும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு ஏற்ற இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். அதனால்தான் நம் உடலில் மில்லியன் கணக்கான மற்றும் பில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன. ஒரு துண்டு நமது உடலைத் தொடும்போது, நமது உடலிருந்து பாக்டீரியா துண்டுக்கு மாறுகிறது. எனவே ஒரு துண்டிலிருந்து பாக்டீரியா மற்றும் பூஞ்சை கழிவுகள் புளிப்பு வாசனையை வெளியிட தொடங்குகின்றன.
ஈரமான துண்டுகளை ஒருபோதும் அழுக்கு துணிகளை போடும் கூடையில் போடாதீர்கள். ஈரப்பதமான இடங்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் விரைவாகப் பெருகும். மற்ற துணிகளுடன் இணையும்போது, துண்டுகளில் இருந்து வெளிப்படும் கெட்ட வாசனையும் மற்ற துணிகளின் மீது சேரும். அதற்கு பதிலாக, ஈரமான துண்டை நேரடியாக வாஷிங் மெஷினில் நேரடியாக போடவும். அப்படி இல்லையென்றால், கையால் துவைத்து போடுங்கள். எப்போதும் துவைத்த துண்டுகளை நேரடியாக சூரிய ஒளி மற்றும் காற்றில் உலர விடவும்.
ALSO READ: நல்ல தூக்கம் வேண்டுமாெ? பெட்ரூமில் இந்த நிறங்களை தவிருங்கள்
துண்டுகளை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைப்பது நல்லது..?
துண்டுகளை ஒவ்வொரு மூன்று முதல் நான்கு முறை பயன்படுத்திய பிறகும் துவைக்க வேண்டும். அவை மிகவும் அழுக்காக இல்லையென்றால், இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு துவைக்காமல் துண்டைப் பயன்படுத்தலாம். துண்டை துவைத்த பிறகும், தண்ணீர் முழுவதும் வெளியேறும் வகையில் அதை நன்றாகப் பிழிந்து விடுங்கள். அதை விரித்து நன்றாக சூரியனும் காற்றும் படும் இடத்தில் போடவும். அப்படி இல்லையென்றால், வாஷிங் மெஷினில் உள்ள ட்ரையரில் நன்றாக பிழிந்து வெயிலில் உலர போடுங்கள்.