30 நாட்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ்ந்த நபர் – என்ன நடந்தது தெரியுமா?
Smartphone Detox Report : வேலை மற்றும் கல்வி சார்ந்து ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டை தவிர்க்க இயலாது. ஆனால் பலர் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாக மாறிவிடுகிறார்கள். இந்த நிலையில் ஒருவர் 30 நாட்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அது குறித்து பார்க்கலாம்.

நம்மில் பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் தொடங்கி இரவில் படுக்க செல்லும் வரை ஸ்மார்ட்போன் (Smartphone) உலகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். இதனால் ரியாலிட்டியில் என்ன நடக்கிறது என தெரியாமல் கனவுலகிலேயே வாழ்ந்து வருகிறோம். இதனால் வெகு விரைவில் மன அழுத்தம் (Stress) போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பலர் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். இதில் துயரம் என்னவென்றால் அதற்கு அடிமையாக இருக்கிறோம் என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் தான் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்டை உணர்ந்த ஒருவர் ஒரு 30 நாட்கள் அது இல்லாமல் வாழ முடிவெடுக்கிறார். பிறகு என்ன நடந்தது தெரியுமா? இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. நமக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ கல்வி, வேலை சார்ந்து அதனை பயன்படுத்தியாக வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் ஒருவர் ஸ்மார்போன் இல்லாமல் 30 நாட்கள் வாழ முடிவெடுக்கிறார். இந்த பரிசோதனையில் அவருக்கு பல ஆச்சரியமான அனுபவங்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் மகிழ்ச்சி நம் ஸ்மார்ட்போனில் இல்லை நம் கையில் தான் இருக்கிறது என உணர்கிறார்.
இதையும் படிக்க : நல்ல தூக்கம் வேண்டுமாெ? பெட்ரூமில் இந்த நிறங்களை தவிருங்கள்




கடினமாக சென்ற முதல் வாரம்
முதல் சில நாட்களில், ஸ்மார்ட்போன் இல்லாதது தெளிவாகத் தெரிந்தது. மீண்டும் மீண்டும் ஸ்மார்ட்போனை நோக்கி கையை நீட்டி, நம் கற்பனையில் அதிர்வுகளைக் கேட்பது போன்ற அனுபவங்கள் இருந்தன. இது வெறும் பழக்கம் அது நமக்கு தேவையில்லை என்பதை உணர்ந்தார்.
இரண்டாவது வாரத்தில் தெரிந்த உண்மை
இரண்டாவது வாரத்தில், அவர் ஒரு புதிய விஷயத்தை புரிந்துகொண்டார். ஸ்மார்ட்போன் இல்லாமல் அவருக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. சலிப்பை எதிர்கொள்ள முடிவெடுக்கிறார். தன்னை சுற்றியுள்ள உலகத்தை கவனிக்கத் தொடங்கினார். மக்களுடன் உரையாட தொடங்குகிறார். இது உறவை மேம்படுத்த உதவியது.
மூன்றாவது வாரத்தில் சிறந்த தூக்கம் கிடைக்கிறது.
ஸ்மார்ட்போன் இல்லாமல், அவரது தூக்கத்தின் தரம் மேம்பட்டது. இரவில் டிவி மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாமல் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டார். மேலும், அவர் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடிந்தது. சமூக ஊடகங்களின் தாக்கம் இல்லாததால் மகிழ்ச்சியும் கிடைத்தது.
இதையும் படிக்க : தினமும் அளவுக்கு அதிகமான மன அழுத்தமா..? குறைக்கும் 4 எளிய வழிகள்..!
நான்காவது வாரத்தில் கிடைத்த சுதந்திரம்
ஸ்மார்ட்போன் இல்லாமல், அவர் சில சிரமங்களை எதிர்கொண்டார். ஆனால் அந்த சிரமங்கள் சிறியவை. ஸ்மார்ட்போனிலிருந்து விலகி இருப்பது அவருக்கு உண்மையான சுதந்திரத்தை அளித்தது. சில புதிய முயற்சிகளை மேற்கொள்வது அவரது மனதை அமைதிப்படுத்தும் என்பதை அவர் கற்றுக்கொண்டார். சிறிய மகிழ்ச்சிகளைக் கூட அனுபவிக்கப் பழகிவிட்டார்.
இந்த பரிசோதனைக்குப் பிறகு, அவர் மீண்டும் தனது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தத் தொடங்கினார். இருப்பினும், அவர் சில விதிகளை வகுத்தார். முக்கியமானவைகளில், காலையில் எழுந்ததும் உங்கள் தொலைபேசியைப் பார்க்காமல் இருப்பது, படுக்கையறைக்குள் அதை எடுத்துச் செல்லாமல் இருப்பது, வாரத்தில் ஒரு நாள் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது ஆகியவை அடங்கும்.