Stress Management Techniques: தினமும் அளவுக்கு அதிகமான மன அழுத்தமா..? குறைக்கும் 4 எளிய வழிகள்..!
Time Management Strategies: இன்றைய வேகமான வாழ்வில் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது அவசியம். திட்டமிடல், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவேளை எடுத்தல், இரண்டு நிமிட விதி மற்றும் ஐந்து நிமிட சிந்தனை ஆகிய நான்கு எளிய பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உங்கள் நாளை திறம்பட நிர்வகித்து மன அழுத்தத்தை குறைக்கலாம்.

இன்றைய நவீன காலக்கட்டத்தில் நல்ல மனநிலை என்பது மிகவும் முக்கியம். இவை சரியான வகையில் நிர்வகிக்கப்படாதபோது உடல் அளவிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பலர் அதிக வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக, ஓய்வு, மன அமைதி (Reduce Stress) மற்றும் ஆரோக்கியத்தை கூட தியாகம் செய்து தங்களைத் தாங்களே அதிகமாக சிந்தித்து கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், இவை அனைத்தும் மன அழுத்தத்தை மட்டுமே நமக்கு கொடுக்கும். இந்தநிலையில் சமநிலையுடன் (Boost Productivity) உங்களை கட்டுப்பாடாக வைத்து, குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்ய முடிந்தால் அது நன்றாக இருக்கும் அல்லவா? அதன்படி, இந்த 4 விஷயங்களை நீங்கள் தினமும் பின்பற்றுவதன்மூலம், உங்கள் தினசரி வாழ்க்கை எந்தவித மன அழுத்தமும் இன்றி புத்துணர்ச்சியுடன் சரியாக நகரும்.
திட்டமிடுதல்:
மன அழுத்தம் இல்லாமல் வாழ மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று, திட்டமிடல் அமர்வுடன் உங்கள் நாளைத் தொடங்குவதாகும். காலையில் எழுந்ததும் உன்கள் அன்றாட பணிகளை செய்து முடித்த பிறகு, இன்றைய நாளில் என்ன செய்யபோகிறோம் என்பதை திட்டமிடுங்கள். அதன்படி உங்கள் முன்னுரிமைகளை மதிப்பாய்வு செய்தல், இலக்குகளை நிர்ணயித்தல் மற்றும் உங்கள் பணிகளை வரைபடமாக்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். இந்தப் பயிற்சி உங்களை கவனம் செலுத்த உதவுகிறது.
ALSO READ: கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலையா? சருமம் பாதிக்கும்.. பாதுகாக்க வழி இதோ!




ஏதாவது, ஒரு விஷயம் இந்த நாளில் நீங்கள் திட்டமிட்டிருந்தால், நீங்கள் குறிப்பு எடுப்பதன்மூலம் அதை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். இவை நாள் முழுவதும் கவனச்சிதறல்களுக்கு எதிர்வினையாற்றுவதைத் தடுக்கிறது. இந்தப் பழக்கம் உங்கள் ஆற்றலை நிர்வகிக்கவும் உதவுகிறது. நீங்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும்போது தேவைப்படும் பணிகளைத் திட்டமிடுவதன் மூலமும், இலகுவான வேலையை பின்னர் செய்ய விட்டுவிடுவதன் மூலமும், மன சோர்வைத் தவிர்க்கலாம்.
90 நிமிடங்களுக்கு ஒருமுறை:
இடைநிறுத்தம் இல்லாமல் நீண்ட நேரம் தொடர்ந்து வேலை செய்வது நிச்சயமாக உங்கள் கவனத்தை சிதறடித்து மன அழுத்ததை அதிகரிக்கும். அதன்படி, சுமார் 90 நிமிடங்களுக்கு எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் சரி, உட்கார்ந்த இடத்தில் இருந்து எழுந்து கை மற்றும் கால்களுக்கு உடற்பயிற்சி செய்யலாம், தண்ணீர் குடிக்கலாம் அல்லது விரைவாக நடக்கலாம். இந்த இடைவேளைகளின் போது வேலையிலிருந்து முற்றிலுமாக விலகி இருங்கள். இந்த பழக்கத்தை தினசரி செய்வதன்மூலம், அன்றைய நாள் முடிவில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் உணருவீர்க. இதனால், உங்களது மன சோர்வு ஏற்படாமல் தடுப்பதுடன், தசை பிடிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
இரண்டு நிமிட விதி:
ஒரு வேலையை செய்ய உங்களுக்கு 2 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும் என்றால், அதை உடனடியாகச் செய்யுங்கள். உதாரணத்திற்கு, மெயில் அனுப்புதல், கடைக்கு செல்லுதல், தண்ணீர் குடித்தல், ஒருவரிடம் போனில் அழைத்தல் அனைத்தையும் உடனடியாகச் செய்யலாம். இது சிறிய பணிகள் குவிந்து பின்னர் அதிகமாகிவிடாமல் தடுக்கிறது. இந்தப் பழக்கம் உங்களுக்கு ஒரே நாளில் அதிக சுமையை ஏற்படுத்தாது. ஒரு வேலையை செய்யும்முன், அதிகமாகச் சிந்திப்பதற்கோ அல்லது தாமதப்படுத்துவதற்கோ பதிலாக, உடனடியாக நடவடிக்கை எடுக்க உங்களை நீங்களே பயிற்றுவித்துக் கொள்கிறீர்கள்.
ALSO READ: காலையில் புத்துணர்ச்சியுடன் எழ வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்..!
5 நிமிட சிந்தனை:
உங்களது ஒரு நாளை எப்படி தொடங்குகிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முடிப்பதும் முக்கியமானது. நீங்கள் செய்யும் ஒரு வேலையானது 5 நிமிட வேலையே என்றாலும், அதனை திருப்தியுடனும் தெளிவுடனும் முடிப்பது முக்கியம். ஒரு வேலையை அரைகுறையாக செய்துவிட்டு பதட்டத்துடன் இருப்பதை விட தெளிவுடன் செய்யலாம். இப்படி செய்வது மனநிலையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மனக் குழப்பத்தையும் குறைக்கிறது. காலப்போக்கில், இந்தப் பழக்கம் சுய விழிப்புணர்வை உருவாக்கி உங்களை உந்துதலை கொடுக்கும்.