AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிஜிட்டல் கைது மோசடியால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் பெண்.. சுடுகாடு வரை தொடர்ந்த தொந்தரவு!

Young Woman End Her Life In Digital Arrest Scam | இந்தியாவில் டிஜிட்டல் கைது மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கிய நிலையில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

டிஜிட்டல் கைது மோசடியால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் பெண்.. சுடுகாடு வரை தொடர்ந்த தொந்தரவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 May 2026 07:43 AM IST

லக்னோ, மே 03 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) டிஜிட்டல் கைது (Digital Arrest) என்ற பெயரில் சைபர் குற்றவாளிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்த நிலையில், மன உளைச்சல் தாங்காமல் 28 வயது இளம் பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கிய இளம் பெண் உயிரை மாய்த்துக்கொண்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிஜிட்டல் கைது மோசடியால் இளம் பெண்ணுக்கு நடந்த சோகம்

உத்தர பிரதேசத்தை சேர்ந்த 28 வயது இளம் பெண் ஒருவரை தொடர்புக்கொண்ட மோசடி கும்பல் ஒன்று, தாங்கள் காவல்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்துக்கொண்டுள்ளது. அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டூள்ளீர்கள் என்று இளம் பெண்ணை மிரட்டியுள்ளனர். இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் யாரிடமும் பேச கூடாது என்றும், 24 மணி நேரமும் கேமரா முன்பு இருக்க வேண்டும் என்றும் ரூல்ஸ் போட்டுள்ளனர்.

இதையும் படிங்க : ம.பியில் அணைக்கட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் பரிதாபம்.. தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

சுடுகாடு வரை தொடர்ந்த தொல்லை

அவர்கள் கூறியதை உண்மை என நம்பிய இளம் பெண், அதன்படி நடந்துள்ளார். பல நாட்களாக இந்த சித்ரவதை தொடர்ந்த நிலையில், கடும் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த இளம் பெண், தனது உயிரையே மாய்த்துக்கொண்டுள்ளார். இளம் பெண் உயிரிழந்ததை அடுத்து இறுதி சடங்குகள் முடிந்து, தகனம் செய்ய சுடுகாட்டிற்கு கொண்டுச்செல்லப்பட்ட போதும் அந்த கும்பல் இளம் பெண்ணுக்கு வீடியோ கால் செய்துள்ளது.

இதையும் படிங்க : என்ன பார்த்தா சிரிக்கிற.. கடை உரிமையாளர்களை கத்தியால் சரமாரியாக தாக்கிய நபர்.. ஷாக் சம்பவம்!

இளம் பெண்ணின் கணவரையும் மிரட்டிய கும்பல்

அந்த போன் காலை இளம் பெண்ணின் கணவர் எடுத்துள்ளார். அப்போது அவரது மனைவி இறந்துப்போன சோகத்தை கூட புரிந்துக்கொள்ளாத அந்த கும்பல், அவரையும் மிரட்டும் தொணியில் பேசியுள்ளது. இதற்கிடையே தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக அந்த பெண் எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில் ஒரு கும்பல் தன்னை தொடர்ந்து மிரட்டுவதாகவும், பிளாக் மெயில் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்துள்ளார்.

மனைவியின் தற்கொலை கடிதத்தை படித்து கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அவர், இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us