Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமணம் முடிந்த 45 நாட்களில் காதலனுடன் சென்ற பெண்.. விபரீத முடிவு எடுத்த இளைஞர்!

Woman Went With Lover After 45 Days Of Marriage | கர்நாடகாவில் 45 நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். ஆரம்பத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்த நிலையில், மனைவி அவரது காதலனுடன் சென்றுவிட்டதால் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்த 45 நாட்களில் காதலனுடன் சென்ற பெண்.. விபரீத முடிவு எடுத்த இளைஞர்!
உயிரிழந்த நபர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Jan 2026 18:03 PM IST

பெங்களூரு, ஜனவரி 28 : கர்நாடகா (Karnataka) மாநிலம், தாவணகெரே மாவட்டத்தில் கும்மனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான ஹரீஷ். விவசாயியான இவருக்கும், இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பாக பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஹரீஷ் தனது மனைவியுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். ஆனால், அவர்களது மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்த மனைவி

திருமணத்திற்கு பிறகு ஹரீஷ் தனது மனைவியுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், நாளடைவில் அவரது மனைவியின் நடவடிக்கையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. அப்போது தான் தனது மனைவி திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்து வந்ததும், திருமணத்திற்கு பிறகும் அவருடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால், ஹரீஷ் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : இதுதான் அதிர்ஷ்டம்… உடைந்து நொறுங்கிய மின் கம்பம்.. நூலிழையில் தப்பிய சிறுவன் வீடியோ!

தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட ஹரீஷ்

இதற்கிடையே அவரது மனைவி காதலனுடன் சென்றுவிட்ட நிலையில், விரக்தியின் உச்சத்திற்கு தள்ளப்பட்ட ஹரீஷ், தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அதனை கண்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : ஜம்மு & காஷ்மீரில் கடும் பனியால் மூடிய சாலை.. சிக்கி தவித்த பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 60 பேர் மீட்பு!

கடிதம் எழுதி வைத்திருந்த ஹரீஷ்

ஹரீஷ் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக தனது வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் எனது மனைவி அவரது காதலனுடன் ஓடிவிட்டார். எனது மரணத்திற்கு எனது மாமனார், மாமியார், மனைவி மற்றும் அவரது காதலன் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.